தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 9 வரைஜோதிட ரத்னா. முனைவர். கே.பி.வித்யாதரன்

ழைப்பால் உயர நினைப்பவர்களே!

ராசிபலன்

குரு பகவான் வலுவாக இருப்பதால் மனதில் தெளிவு ஏற்படும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சூரியன் 6-ல் வலுவாக இருப்பதால் மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். சிலருக்குப் புது வேலை கிடைக்கும். ஆனால், செவ்வாய் 5-ல் நிற்பதால் அவ்வப்போது பிள்ளைகள் குறித்த கவலை வந்து போகும். அலைச்சல் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவதில் வில்லங்கம் ஏற்படக்கூடும்.

புதன் 6-ல் மறைந்திருப்பதால் உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வியாபார  இழப்புகளைச் சரிசெய்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையினரே! புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

திடீர்த் திருப்பங்கள் நிறைந்த காலம் இது.

த்தியத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களே!

ராசிபலன்

ராகு 3-ல் வலுவாக இருப்பதால் மன வலிமை அதிகரிக்கும். சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனை வாங்கும் யோகம் ஏற்படும். ஆனால், சகட குருவும் கண்டகச் சனியும் தொடர்வதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம் ஏற்படக்கூடும். எதைச் செய்தாலும் தோல்வியில் முடியும்.

சூரியன் 5-ல் நிற்பதால் பிள்ளைகளிடம் உங்கள் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். அரசாங்கக் காரியங்கள் தாமதமாக முடியும். புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். உறவினர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

முயற்சிகளில் முனைப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது.

ற்றவர்களின் நலனுக்காக வாழ்பவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் புதன் 4-ல் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். தோற்றப்பொலிவு கூடும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணப் பேச்சு சாதகமாகும். செவ்வாய் 3-ல் வலுவாக இருப்பதால் கண்டிப்பாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவீர்கள்.

கடன் பிரச்னைகள் கட்டுப்படும். குரு பகவான் சாதகமாக இருப்பதால் பிள்ளைகளின் முயற்சிகளை ஆதரிப்பீர்கள். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். முக்கியப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் பேச்சில் கடுமை வேண்டாம். ஜாமீன் கொடுக்க வேண்டாம். வியாபாரத்தில்  விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்குரிய மரியாதை கிடைக்கும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். கலைத்துறையினரே! அதிக வாய்ப்புகளும் வருமானமும் கிடைக்கும்.

சவால்களில் வெற்றிபெறும் வேளை இது.

சாதுவாக இருந்து காரியம் சாதிப்பவர்களே!

ராசிபலன்

3-ல் சூரியனும் புதனும் நிற்பதால் எதிலும் தைரியம் பிறக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வீடு மாறுவது, வாங்குவது, கூடுதல் அறை கட்டுவது சாதகமாக முடியும். நட்பு வட்டம் விரியும். புது வேலை கிடைக்கும்.

குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ராசிக்கு 2-ல் செவ்வாய் நிற்பதால் கண் பார்வைக் கோளாறு, சகோதர வகையில் பிரச்னைகள் வந்து விலகும். குரு 4-லும், சனி 5-லும் தொடர்வதால் ஓய்வின்றி உழைக்கவேண்டி வரும். திருமணப் பேச்சு தாமதமாக முடியும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே! விமர்சனங்கள் வந்தாலும் கலக்கம் கொள்ள மாட்டீர்கள்.

சிரமப்பட்டு முன்னேறும் வேளை இது.

போராட்டங்களைத் தைரியமாக எதிர்கொள்பவர்களே!

ராசிபலன்

சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடிவடையும். பணப் பற்றாக்குறை நீடிக்கும். பதவிகள் தேடி வரும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். கேது வலுவாக இருப்பதால் ஆன்மிக அறிஞர்களின் நட்பு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். ராசிநாதன் சூரியன் 2-ல் நிற்பதால் காய்ச்சல், கண் எரிச்சல், காதுவலி வந்து செல்லும்.

வெகுளித்தனமாகப் பேசி சிக்கிக்கொள்ளாதீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் பிணக்குகள் வரும். குருவும் சனியும் சாதகமாக இல்லாததால் மனக்குழப்பங்களும் தடுமாற்றங்களும் இருந்து கொண்டேயிருக்கும். சகிப்புத்தன்மையுடன் இருங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பு கிடைக்கும்.

சாணக்கியத்தனமாக பேசி சாதிக்கும் வேளை இது.

ற்பனை வளம் அதிகம் உடையவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் புதன் ராசிக்குள் உச்சம்பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பண பலம் உயரும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். நட்பால் ஆதாயம் உண்டு.

ராகு, குரு மற்றும் சனி வலுவாக இருப்பதால் மன வலிமை கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிறமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. நல்ல வேலை கிடைக்கும். உங்கள் ராசிக்குள் சூரியன் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களும் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். கலைத்துறையினரே! பரபரப்பாகக் காணப்படுவீர்கள்.

புதிய முயற்சிகள் நிறைவேறும் நேரம் இது.

திகம் அறிந்திருந்தும் அடக்கமாக இருப்பவர்களே!

ராசிபலன்

செவ்வாய் வலுவாக இருப்பதால் தன்னம்பிக்கையுடன் சாதிப்பீர்கள். புது நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பதவிகள் தேடி வரும். உடன்பிறந்தவர்கள் அக்கறை காட்டுவார்கள். புதன் வலுவாக இருப்பதால் கடன்களை பைசல் செய்ய வழி கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத திடீர் நன்மை உண்டாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.

ஏழரைச் சனி தொடர்வதால் வீண் விரயம், ஏமாற்றம் வந்து செல்லும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. ஜன்ம குரு தொடர்வதால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவீர்கள்.

சில எதிர்பார்ப்புகள் நிறைவேறும் காலம் இது.

ந்த நிலையிலும் கலாசாரத்தை விடாதவர்களே!

ராசிபலன்

லாப வீட்டில் சூரியனும், புதனும் நிற்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தன்னிச்சையாக பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வருமானம் உயரும். ஷேர் லாபம் தரும். புது உத்தியோகம் அமையும். அரசால் அனுகூலம் உண்டு. பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.

குரு 12-ல் மறைந்திருப்பதால் சோர்வு, களைப்பு, வேலைச்சுமை, அலைச்சல் வந்து போகும். ராசிநாதன் செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால் புதிதாக வீடு வாங்குவீர்கள். ஜன்மச் சனி தொடர்வதால் மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் கடையைப் புது இடத்துக்கு மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

சாதிக்கும் துணிச்சல் பிறக்கும் தருணம் இது.

குறைகளை மென்மையாக எடுத்துச் சொல்பவர்களே!

ராசிபலன்

புதன், சுக்கிரன் மற்றும் குரு சாதகமாக இருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். திடீர் பண வரவு உண்டு. தடைகள் நீங்கும். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். ஆடை, அணிகலன் சேரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். விலகிச்சென்ற  சொந்தங்கள் வலியவந்து உறவாடுவார்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.

10-ல் சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால் அரசால் அனுகூலம் உண்டு. தந்தையின் உடல்நலம் சீராகும். கௌரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் எளிதாக முடிய வேண்டிய வேலைகள் இழுபறியாகி முடியும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கலைத்துறையினரே! உங்களின் திறமைகள் வெளிப்படும்.

புகழ், கௌரவம் கூடும் வேளை இது.

ன்புக்கு உரியவர்களுக்கு அள்ளி வழங்குபவர்களே!

ராசிபலன்

சுக்கிரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பிரபலங்களின் நட்பு கிட்டும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மகளுக்கு வேலை கிடைக்கும். மகனிடம் இருந்து வந்த அலட்சியப் போக்கு மாறும். பண வரவு அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களைத் தேடிவந்து பேசுவார்கள். பழைய கலைப் பொருள்கள் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும்.

சூரியன் 9-ல் நிற்பதால் சேமிப்புகள் கரையும். அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். 8-ல் செவ்வாய் நிற்பதால் அலைச்சல், டென்ஷன் வந்துபோகும். வழக்கில் அவசரம் வேண்டாம். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் புது முயற்சிகள் தாமதமாகி முடியும். உத்தியோகத்தில் வேலைச்சுமை, இடமாற்றம் வரக்கூடும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள்.

மற்றவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய காலம் இது.

நேர்மையாகப் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களே!

ராசிபலன்

ராகு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வழக்கில் திருப்பம் ஏற்படும். யோகாதிபதி களான சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

 குரு பகவான் 9-ம் இடத்தில் நிற்பதால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது வேலை அமையும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். 8-ல் சூரியன் இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள், வீண் பழி வந்து செல்லும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

புதிய வியூகம் அமைத்து வெற்றி பெறும் நேரம் இது.

சொந்தங்களிடம் அளவற்ற பாசம் காட்டுபவர்களே!

ராசிபலன்

கேது வலுவாக இருப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். புதன் உச்சம் பெற்று 7-ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் திருமணம், சீமந்தம் போன்ற விசேஷங்கள் ஏற்பாடாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் காய்ச்சல், தொண்டை வலி, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து போகும். 5-ல் ராகு நிற்பதால் பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் 6-ல் அமர்ந்திருப்பதால்உடன்பிறந்தவர்கள் அனுசரித்துச் செல்வார்கள். சொத்து வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். கலைத்துறையினரே! மறைமுகப் போட்டிகள் அதிகமாகும்.

கடமைகளில் கவனம் செலுத்தவேண்டிய நேரம் இது.