தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

அக்டோபர் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

பணப்புழக்கம் அதிகரிக்கும்!

மேஷம்: மதியூகத்தால் மற்றவர்களை வியக்கவைக்கும் நீங்கள், அதிரடித் திட்டங்கள் தீட்டுவதிலும் வல்லவர்கள். குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் அழகு, இளமை கூடும். மகளுக்குப் புது வேலை கிடைக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். வீடு கட்ட அப்ரூவல் கிடைக்கும். மோதல்கள் விலகும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிதாக ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் தொல்லை தந்த அதிகாரி இடம் மாறுவார். பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டிய தருணமிது.

ராசிபலன்

திடீர்த் திருப்பம் உண்டாகும்!

ரிஷபம்: யார் நிழலிலும் வாழ விரும்பாத நீங்கள், மற்றவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். நகர எல்லையை ஒட்டி யுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள்.இந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர்த் திருப்பம் உண்டாகும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையையும் உட்கொள்ள வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். விட்டுக் கொடுக்க வேண்டிய வேளையிது.

ராசிபலன்

ஷேர் மார்க்கெட் லாபம் தரும்!

மிதுனம்: எல்லோரையும் எளிதில் நம்பும் நீங்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் சாதிப்பவர்கள். முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் தொட்டது துலங்கும். எதிர்ப்புகள் அடங்கும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். வழக்குகள் சாதகமாகும். புதிய வேலை கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். தகுதி, கௌரவம் உயரும் நேரமிது.

ராசிபலன்

புதிய வாகனம் வாங்குவீர்கள்!

கடகம்: புரட்சிகரமான சிந்தனை உடைய நீங்கள், மூடப்பழக்கங்களை ஒதுக்குவீர்கள். சூரியனும் புதனும் சாதகமாக இருப்பதால் தடுமாற்றம், தயக்கம் நீங்கும். கடன் பிரச்னை களைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். கூடுதல் அறை அமைப்பது, தளம் கட்டுவது போன்ற முயற்சிகள் நிறைவடையும். வெளியூர் செல்லும் முன் வீட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது நல்லது. பங்குதாரர்களால் இடையூறுகள் வந்துபோகும். உத்தியோகத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டிவரும். அனுபவ அறிவால் சாதிக்கும் தருணமிது.

ராசிபலன்

வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும்!

சிம்மம்: எதிலும் உடனடித் தீர்வை விரும்பும் நீங்கள், பாசத்துக்குக் கட்டுப் பட்டவர்கள். புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். அடகிலிருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள். பண வரவு கணிசமாக உயரும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும் வேளையிது.

ராசிபலன்

வியாபாரத்தில் பற்று வரவு உயரும்!

கன்னி: யோசித்துக்கொண்டே இருக்கும் நீங்கள், கல்மனதையும் கரைக்கும்படி கனிவாகப் பேசுபவர்கள். முக்கிய கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைத்தது முடியும். அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். தம்பதிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புது வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்தி யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வெற்றிக்கனியைச் சுவைக்கும் நேரமிது.

ராசிபலன்

வீண் விவாதம் வேண்டாம்!

துலாம்: பாகுபாடு பார்க்காத நீங்கள், பரந்த மனசுக்குச் சொந்தக்காரர்கள்.14-ம் தேதி வரை செவ்வாய் சாதகமாக இருப்பதால் எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத்தொடங்குவீர்கள். வாகனப் பழுது நீங்கும். பிள்ளைகளின் ஓவியம் மற்றும் இசைத் திறமையை வளர்ப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க போராட வேண்டி வரும். பங்குதாரர்களிடம் வீண் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னைகள் வரக்கூடும். கடினமாக உழைக்க வேண்டிய காலமிது.

ராசிபலன்

சொத்துப் பிரச்னை தீரும்!

விருச்சிகம்: எந்த வேலையையும் தானே செய்தால்தான் திருப்தி கிடைக்கும் எனும் நீங்கள், சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். சூரியனும் செவ்வாயும் சாதகமாக இருப்பதால் ஆளுமைத் திறன் உயரும். பதவிகள் தேடி வரும். சொத்துப் பிரச்னை தீரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வீடு மாறுவீர்கள். மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் லாபம் உயரும். வேலையாட்களிடம் கொஞ்சம் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆலோசனையின்றி புதிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். வளைந்துகொடுத்தால் வெற்றி கிட்டும் வேளையிது.

ராசிபலன்

சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்!

தனுசு: தன்னலமில்லாத நீங்கள் சுற்றியிருப்பவர்களைச் சந்தோஷப் படுத்துவீர்கள். செவ்வாயும் சூரியனும் சாதகமாக இருப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். அண்டை மாநிலத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகர மாக முடியும். வீடு கட்டத் தொடங்குவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும் காலமிது.

ராசிபலன்

வருவாய் உயரும்!

மகரம்: ஆதாரத்துடன் எதையும் அணுகும் நீங்கள், நெறி பிறழ மாட்டீர்கள். ராசிநாதன் சனி பகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடிவடையும். வேலை கிடைக்
கும். வருவாய் உயரும். ஒரு சொத்தை விற்று, சில பிரச்னைகளிலிருந்து வெளிவருவீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். முக்கிய கோப்புகளைக் கவனமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் மதிக்கப்பட்டாலும், சக ஊழியர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் வேளையிது.

ராசிபலன்

வியாபாரம் பெருகும்!

கும்பம்: வெள்ளையுள்ளம்கொண்ட நீங்கள் எல்லார் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக்கொள்வர். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். இளம்பருவத் தோழிகளைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

ராசிபலன்

பெரியோர் ஆசி கிடைக்கும்!

மீனம்: ஆன்மிகத்தில் ஆழமாக இருந்தாலும் மூடநம்பிக்கையைப் புறந் தள்ளுவீர்கள். கேது வலுவாக இருப்பதால் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். பெரியோர் ஆசி கிடைக்கும். நல்லவர் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நிதானத்தால் நெருக்கடிகளை நீந்திக் கடக்கும் தருணமிது.