Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

அக்டோபர் 10 முதல் 23 வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

அக்டோபர் 10 முதல் 23 வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்
ராசிபலன்

மேஷம்

யதார்த்தமாகப் பேசி எல்லோரையும் வசீகரிப்பவர்களே! குரு பகவான் 7-ம் இடத்தில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருப்பதுடன் புதனும் 7-ம் இடத்தில் நுழைந்திருப்பதால் உற்சாகம் பிறக்கும்.
சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களது நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சில முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். திருமணத்தடை நீங்கும். வழக்கு சாதகமாகும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். அரசு காரியங்கள் சில இழுபறியாகும். மனைவியின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

14-ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய் 6-ம் இடத்தில்  நுழைவதால் எதிர்ப்புகள் அடங்கும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது ஆகியன சுலபமாக முடியும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் மட்டத்தில் மதிப்பு கூடும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

செலவுகள் அதிகரிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராசிபலன்

ரிஷபம்

நாளை நமதே என்ற நம்பிக்கையில் வாழ்பவர்களே! ராகு 3-ம் இடத்தில்  வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்ப்பு களைச் சமாளிப்பீர்கள். ஒரு சொத்தை விற்று, பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். சிலர் வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள்.

பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். குழந்தைகளின் நிறைகளைப் பாராட்டத் தயங்காதீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். பேசும்போது கவனமாகப் பேசுங்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைத் தாமதிக்காமல் செலுத்துங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுமுன் கவனம் தேவை.

சகட குரு தொடர்வதால் அடுக்கடுக் கான வேலைகளால் மன இறுக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களுடன் பிணக்கு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் சில நேரம் உயரதிகாரிகள் வெறுப்பாகப் பேசினாலும் நீங்கள் கனிவுடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.கலைத்துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய நேரம் இது.

ராசிபலன்

மிதுனம்

வசதி வாய்ப்புகள் எவ்வளவு வந்தாலும் பழைய விஷயங்களை ஒருபோதும் மறவாதவர்களே! குரு பகவான் 5-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். பண வரவு அதிகரிக்கும்.
புது சொத்து வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் கூடா நட்பு விலகும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனங் களில் வேலை கிடைக்கும். சனி 6-ம் இடத்தில் சாதகமாக இருப்பதால் எதிரிகளும் நண்பர்களாவார்கள். வேற்றுமொழி பேசும் அன்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் விலையுயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கடன் பிரச்னையை முடிப்பீர்கள். புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். கர்ப்பிணிகள் எடைமிகுந்த பொருள் களைத் தூக்க வேண்டாம். வியாபாரத்தில் அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும். கலைத் துறையினரே! தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும்.

திறமைகள் வெளிப்படும் வேளை இது.

ராசிபலன்

கடகம்

வருங்காலத்தைப் பற்றி அதிகம் யோசிப்பவர்களே! சூரியனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் தடைகள் நீங்கும். அரசியல்வாதிகள் உதவுவார்கள். பழைய வழக்கு சாதகமாகும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். மனோபலம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். 
 
வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பற்று வரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரி களுடன் அளவாகப் பழகுங்கள். சக ஊழியர்களுடன் விவாதம் வந்துபோகும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர் களது நட்பால் சில நுணுக்கங்களைத் தெரிந்துகொள்வீர்கள்.

மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் காலம் இது. 

ராசிபலன்

சிம்மம்

விதியை வென்று புது யுகம் படைக்க, ஓயாமல் போராடுபவர்களே! கேது 6-ம் இடத்தில் வலுவாக அமர்ந் திருப்பதால் தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள்.

வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது வேலை அமையும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்வார்கள். திடீர்ப் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் துணிச்சலாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பூர்வீகச் சொத்தை மாற்றி, புது வீடு வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். வேலை யாட்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். கலைத்துறையினரே! உங்கள் திறமைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது. 

ராசிபலன்

கன்னி

எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்று நினைப்பவர்களே! ராஜ கிரகங்களான குரு, சனி மற்றும் நிழல் கிரகமான ராகு உங்களுக்குச் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள்.

சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். ஒரு சொத்தை விற்று, மறு சொத்து வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் பிறக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய புதிய வழி பிறக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி ஒன்று வந்து சேரும். புது நட்பு மலரும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.

புதிய முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பழைய பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியன தடையின்றி கிடைக்கும். கலைத் துறையினரே! உங்களுடைய படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பாராட்டிப் பேசப்படும்.

வளைந்துகொடுப்பதால் வெற்றி பெறும் தருணம் இது.

ராசிபலன்

துலாம்

‘தானுண்டு தன் வேலை உண்டு’ என்றிருக்கும் அன்பர்களே! சுக்கிரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுகொண்டிருப்பதால் தடை களைத் தாண்டி முன்னேறுவீர்கள். தந்தை வழியில் உதவிகள் உண்டு. பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும்.

மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் இனி தேடி வந்து பேசுவார்கள். நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். 13-ம் தேதி வரை செவ்வாய் சாதகமாக இருப்பதால் பேச்சில் கம்பீரம் பிறக்கும். அதன் மூலம் உங்கள் மதிப்பு உயரும். வாழ்க்கைத் துணை வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டுவ தால் இழப்புகள் உண்டாகலாம்; கவனம் தேவை. வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போக வாய்ப்பு உண்டு.

வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். எனினும் சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் `என்னதான் உண்மையாக உழைத் தாலும் எந்த பலனும் இல்லையே' என்று ஆதங்கப்படுவீர்கள். கலைத் துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றிபெற முயற்சி செய்யுங்கள்.

விட்டுக்கொடுப்பதால் வெற்றி பெறும் வேளை இது. 

ராசிபலன்

விருச்சிகம்

‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற கொள்கை உடையவர்களே! ராசிநாதன் செவ்வாய் சாதகமாக இருப்பதால் மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உடன்பிறந்தவர்கள், உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும்.  வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.  கோயில்களைப் புதுப்பிக்க உதவி செய்வீர்கள். ராசிக்குள் சனி நிற்பதால் உடம்பில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து குறைய வாய்ப்பு உண்டு. உணவில் பழ வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. பங்குதாரரிடம் கண்டிப்பு வேண்டாம். அவரை அனுசரித்துப் போகவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். கலைத்துறையினரே! உங்கள் படைப்புத் திறன் வளரும்.

உழைப்பால் உயர்வை நோக்கி நகரும்  நேரம் இது.  

ராசிபலன்

தனுசு

படிப்பறிவைவிட பகுத்தறிவு அதிகம் உள்ளவர்களே! உங்கள் ராசி நாதன் குரு லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சவாலான விஷயங் களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வி.ஐ.பி-க்களுக்கு நெருக்கமாவீர்கள். அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பண வரவு அதிகரிக்கும்.

அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருக்கும் அன்பர்களாலும் ஆதாயம் உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்; தாம்பத்தியம் இனிக்கும். சுக்கிரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உற்சாகம் பிறக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வாகன வசதிகள் பெருகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்து விஷயத்தில் கறாராக இருங்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பதவிகள் தேடி வரும்.

வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரே! புதுமையான படைப்பு களை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

வசதி, வாய்ப்புகள் பெருகும் தருணம் இது.

ராசிபலன்

மகரம்

முன்வைத்த காலை பின் வைக்காதவர்களே! உங்களின் யோகாதிபதிகளான சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் ரசனை மாறும். இதமானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். ஓரளவு பண வரவு உண்டு. வர வேண்டிய பூர்வீகச் சொத்து வந்து சேரும். வாகனம் வாங்குவீர்கள்.

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளின் அடிமனதில் இருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டும் என எண்ணுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். சிலருக்கு, அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். அரசால் அனுகூலம் உண்டு. வெளியூர்ப் பயணங்கள் திருப்திகரமாக அமையும். சகோதர வகையில் இருந்த பிணக்குகள் சரியாகும். சொத்து வாங்குவது, விற்பது சாதகமாகும்.

வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க நவீன விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் நன்மைகள் கனிந்துவரும். கலைத் துறையினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும்.

நல்லவர்களது நட்பால் சாதிக்கும் வேளை இது.  

ராசிபலன்

கும்பம்

‘விழுவதெல்லாம் எழுவதற்கே’ என்று எண்ணுபவர்களே! குரு பகவான் 9-ம் இடத்தில் நிற்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள்.

வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். இயக்கம், சங்கம் ஆகியவற்றில் கௌரவ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வழக்கு சாதகமாகும். பழைய மனையை எதிர்பார்த்த விலைக்கு விற்று, உங்கள் ரசனைக்கேற்ற புதிய வீடு வாங்குவீர்கள். சொத்து வாங்கும்போது மூலப் பத்திரத்தைச் சரிபார்த்து வாங்கவும். புது வேலைக்கு முயற்சி செய்தவர் களுக்கு நல்ல பதில் வரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்றம் செய்யுங்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகமாகும். கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.

சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறும் நேரம் இது. 

ராசிபலன்

மீனம்

தன்னலம் இல்லாமல் தியாகியாக வாழ்பவர்களே! சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் உங்களின் பிடிவாதப் போக்கைக் கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். வி.ஐ.பி-க்களின் நட்பு கிட்டும். திடீர் பணவரவு உண்டு. பூர்வீகச் சொத்தில் கூடுதலாகச் செலவு செய்து அதைச் சீர்திருத்தம் செய்வீர்கள்.

குடும்பத்தில் நல்லது நடக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் உங்களின் பரந்த மனதைப் புரிந்துகொள்வார்கள். அடகிலிருந்த பொருள்களை மீட்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.  ஷேர் லாபம் தரும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். சாதுக்கள் உதவுவார்கள்.  வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

வியாபாரத்தில் நெளிவு, சுளிவு களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் ஏற்றுக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

எதிர்நீச்சலில் வெற்றி பெறும் வேளையிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism