Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

அக்டோபர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

அக்டோபர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்
ராசிபலன்

பழைய பாக்கி வசூலாகும்!

மேஷம்: யதார்த்தமான பேச்சால் ஈர்க்கும் நீங்கள் இன, பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் எளிமையாகப் பழகுவீர்கள். சவால்களில் வெற்றி அடைவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். வீட்டு மனை, வாகனம் உங்கள் ரசனைக்கேற்ப அமையும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் இருக்கும். பங்குதாரர்களுடன் மோதல் வந்து நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். சாதிக்கும் காலமிது.

ராசிபலன்

வங்கிக் கடனுதவி கிடைக்கும்!

ரிஷபம்: அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பாத நீங்கள், உழைப்பால் உயர்ந்தவர்கள். எதிர்ப்புகள், ஏமாற்றங்களைக் கடந்து முன்னேறுவீர்கள். அரைகுறை யாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். போராடி வெல்லும் வேளையிது.

ராசிபலன்

வழக்கில் வெற்றி கிடைக்கும்!

மிதுனம்: எதற்கும் தகுதியை மீறி அதிகம் ஆசைப்பட மாட்டீர்கள். யாருக் கும் அஞ்சவும் மாட்டீர்கள். உங்களின் செல்வாக்கு கூடும். வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வீடு, வாகன வசதி பெருகும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். வியாபாரத்தில் பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். தொட்டது துலங்கும் நேரமிது.

ராசிபலன்

ஆடை, ஆபரணங்கள் சேரும்!

கடகம்: காலங்களும் காட்சிகளும் மாறினாலும் கலாசாரத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்களே! பாதியில் நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். சிலர் பழைய காலி மனையை விற்றுவிட்டு, புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். தூரத்து சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் புது இடத்துக்குக் கடையை மாற்றுவது குறித்து யோசிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மற்றவர்களைக் குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். முன்னேறும் நேரமிது.

ராசிபலன்

வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்!

சிம்மம்: மனிதநேயம் மிக்க நீங்கள் தன்னை நம்பி வந்தவர்களைக் கைவிட மாட்டீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விலை உயர்ந்த மின்னணுச் சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். அறிவால் வெற்றி பெறும் தருணமிது.

ராசிபலன்

திருமணம் கைகூடி வரும்!

கன்னி: மற்றவர்களின் மனங் கோணாமல் பேசும் நீங்கள், நேர நிர்வாகத்தில் கை தேர்ந்தவர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்குக் கைகூடி வரும். பிள்ளைகளால்  உங்களுக்கு மதிப்பு கூடும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டியாளர்களுக்குப் பதிலடி கொடுப்பீர்கள். தடைகள் தாண்டி முன்னேறும் வேளையிது.

ராசிபலன்

நண்பர்களின் ஆதரவு பெருகும்!

துலாம்: தன்மானத்தைப் பெரிதாக எண்ணும் நீங்கள் யார் தயவிலும் வாழ மாட்டீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். உறவினர்கள், நண்பர்களுடைய ஆதரவு பெருகும். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பணப்பற்றாக்குறையைச் சமாளிப்பீர்கள். தூக்கம் குறையும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையொப்பமிட்டுச் சிக்கிக்கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய  நேரமிது.

ராசிபலன்

ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்!

விருச்சிகம்: மனசாட்சிப்படி நடக்கும் நீங்கள், பிறர் செய்யும் தவற்றைத் தட்டிக்கேட்கவும் தயங்க மாட்டீர்கள். கேது வலுவாக 3-ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். மகளுக்குத் தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம் நடந்தேறும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டாகும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். புதிய பயணத்தைத் தொடங்கும் காலமிது.

ராசிபலன்

பணப்பற்றாக்குறை அகலும்!

தனுசு: தடைகள் பல வந்தாலும், தயங்காமல் எடுத்த வேலையை முடித்துக் காட்டும் நீங்கள், சொன்ன சொல் தவறாதவர்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப் படைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டாகும். வீடு கட்டத் தொடங்குவீர்கள். பணப்பற்றாக்குறை அகலும். புதிய வேலை அமையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பிரச்னைகள் தீரும். புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும் நேரமிது.

ராசிபலன்

மனச்சோர்வு விலகும்!

மகரம்: பிரச்னைகளின் ஆணி வேரைக் கண்டறிந்து அகற்றுவதில் வல்லவர்களான நீங்கள், பெரியோரை யும் குழந்தைகளையும் மதிக்கத் தவற மாட்டீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். மனச்சோர்வு விலகும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.  சகோதரர்களின் அரவணைப்பு அதிகரிக்கும். சிக்கல்களில் இருந்து ஓரளவு விடுபடும் நேரமிது.

ராசிபலன்

பிரபலங்களின் நட்பு கிட்டும்!

கும்பம்: அநீதியைக் கண்டால் சிங்கத்தைப் போல் சீறிப்பாயும் குணம்கொண்ட நீங்கள், பந்த பாசத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். எதிர் பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். கோபத்தைக் குறைப்பதால் மகிழ்ச்சி பொங்கும் நேரமிது.

ராசிபலன்

தியானத்தில் மனம் லயிக்கும்!

மீனம்: தலைமைப் பதவியில் அமர வைத்தாலும் தடம் மாறாத நீங்கள், பொது உடைமைச் சிந்தனை அதிகம் கொண்டவர்கள். விலை உயர்ந்தப் பொருள்கள் வாங்குவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உறவினர்களின் ஆதரவுப் பெருகும். புது வேலை அமையும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். வழக்கு சாதகமாகும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். புதிய நபர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். தட்டுத்தடுமாறி கரையேறும் வேளையிது.