Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

அக்டோபர் 31-ம் தேதி நவம்பர் 13-ம் தேதி வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

அக்டோபர் 31-ம் தேதி நவம்பர் 13-ம் தேதி வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

எதிர்பார்த்த பணம் வரும்!

ராசிபலன்மேஷம்: சுற்றி வளைக்காமல் எடுத்த எடுப்பிலேயே தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துபவர்களே!  எதிலும் உங்கள் கை ஓங்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். அழகு, இளமைக் கூடும். சோர்வு நீங்கி, துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் வரும். வெற்றி பெறும் வேளையிது.

ராசிபலன்

பிரார்த்தனைகள் நிறைவேறும்!

ரிஷபம்: மற்றவர்களின் குற்றம் குறைகளை அவர்கள் முகத்துக்கு முன்பாகவே சுட்டிக்காட்டும் நீங்கள், உங்களைச் சுற்றி இருப்பவர்களை வழிநடத்திச் செல்வதில் வல்லவர்கள். தடைகளும் ஏமாற்றங்களும் இருந்தாலும் ஓய மாட்டீர்கள். உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்து பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். பிரார்த்தனைகள் நிறைவேறும். பண வரவு சுமாராகவே இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய காலமிது.

நினைத்தது நினைத்தபடி முடியும்!

ராசிபலன்மிதுனம்: கனிவான விசாரிப்பால் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் நீங்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டீர்கள். நினைத்தது நினைத்தபடி முடியும். எதிர்பார்த்த பணம் வரும். புதிதாக வீடு கட்டி, கிரகப் பிரவேசம் செய்வீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். நிதானத்தால் வெற்றி பெறும் நேரமிது.

ராசிபலன்

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்!

கடகம்: எதிரிக்கும் உதவும் நல்லெண்ணம் கொண்ட நீங்கள், சமூக அவலங்களைத் தட்டிக் கேட்கத் தயங்க மாட்டீர்கள். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஓரளவு பணம் வரும். சொத்து வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வாகனத்தை இயக்கும்போது அவசரம் வேண்டாம். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். தன்னம்பிக்கையால் சாதிக்கும் தருணமிது.

அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்!

ராசிபலன்சிம்மம்: ‘போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்’ என எதற்கும் அஞ்ச மாட்டீர்கள். சவால்களைச் சமாளிப்பீர்கள். பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அடகிலிருந்த பத்திரங்களை மீட்க வழி பிறக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சாரச் சாதனங்கள் வாங்குவீர்கள்.  உத்தியோகத்தில் அதிகாரிகளாலும், சக ஊழியர்களாலும் அலைக்கழிக்கப்படுவீர்கள். புதிய திட்டங்கள் தீட்டும் நேரமிது.

முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது!

ராசிபலன்

கன்னி: என் கடன் பணி செய்து கிடப்பதே என்றிருக்கும் நீங்கள், சந்தர்ப்பச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல நகைச்சுவையாகப் பேசுவீர்கள். பெரிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சமூகத்தில் மதிக்கத் தகுந்த அளவுக்கு நல்ல பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்களுடைய ஆலோசனைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் வேளையிது.

பயணங்கள் புத்துணர்ச்சி தரும்!

ராசிபலன்துலாம்: புரட்சிகரமாக யோசிக்கும் நீங்கள், பிரச்னைகளைக் கண்டு பின்வாங்க மாட்டீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளின் விளையாட்டு, கலைத் திறமைகளைக் கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீட்டை அழகுபடுத்துவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். உத்தியோகத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வளைந்துகொடுத்து வளரும் வேளையிது.

யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்!

ராசிபலன்

விருச்சிகம்: மனதில் தோன்றுவதை அப்படியே பேசும் நீங்கள், உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சமாட்டீர்கள். தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். ஷேர் லாபம் தரும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவுக்கு நெருக்கமாவீர்கள். சகோதர வகையில் ஆதரவு பெருகும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள்மூலம் புதிய ஒப்பந்தங்கள் வரும். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நேரமிது.

உங்கள் திறமை வெளிப்படும்!

ராசிபலன்தனுசு: வித்தியாசம் பார்க்காமல் பழகும் நீங்கள், வீட்டு நலனுடன், நாட்டு வளர்ச்சி குறித்தும் அதிகம் யோசிப்பீர்கள். சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். அரசாங்க விஷயம் சுலபமாக முடியும். மூதாதையர்களின் சொத்து கைக்கு வரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விலை உயர்ந்த நகைகள் வாங்குவீர்கள். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்கள் உதவுவார்கள். எதிலும் வெற்றி பெறும் தருணமிது.

பண வரவு திருப்தி தரும்!

ராசிபலன்

மகரம்: பிரதிபலன் பாராமல் உதவும் நீங்கள், அனைவரும் வாழ்வில் உயர வேண்டும் என்ற பொதுநலத்துடன் சிந்திப்பீர்கள். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.  பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள்.  உறவினர், நண்பர்கள் உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.  வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். எதிலும் தெளிவு கிடைக்கும் வேளையிது.

 வங்கிக்கடன் கிடைக்கும்!

ராசிபலன்கும்பம்: கொடுக்கும் குணம்கொண்ட நீங்கள், ஆபத்தான நேரத்தில்கூட அடுத்தவர்களிடம் உதவி கேட்கத் தயங்குவீர்கள். உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய தருணமிது.

வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்!

ராசிபலன்

மீனம்: வெளுத்ததெல்லாம் பாலென நினைத்து ஏமாறும் நீங்கள், நல்லது செய்தே நலிந்தவர்கள். உங்கள் திறமைகள் யாவும் வெளிப்படும். எதிர்பாராத உதவிகள் வி.ஐ.பி-க்களிடமிருந்து கிடைக்கும். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். புது வேலை அமையும். திடீரென்று அறிமுகமாகுபவர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சொத்து வாங்கும்போது தாய்ப்பத்திரத்தைச் சரிபார்த்து வாங்குவது நல்லது.  வியாபாரத்தில் போராடி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் தலை தூக்கும். மன உறுதியால் சாதிக்கும் காலமிது.