Published:Updated:

ராசிபலன்

நவம்பர் 7 முதல் 20-ம் தேதி வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

பிரீமியம் ஸ்டோரி

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன்


மேஷம்

‘எல்லோரும் எல்லாம் பெற வேண்டும்’ என்று நினைப்பவர்கள் நீங்கள்தான். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வி.ஐ.பி-களால் நன்மை உண்டாகும். பணவரவு உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விலை உயர்ந்த மின்சாதனங்கள் வாங்குவீர்கள். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். புதிய அணுகுமுறையால் சொத்துப் பிரச்னை தீரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சகோதரர்களின் அரவணைப்பு அதிகரிக்கும்.

புதன் 8-ம் இடத்தில் மறைந்திருப் பதால் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. உடல்நலனில் அக்கறை தேவை. வாகனங்களைக் கவனமாகக் கையாளவும்.  வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய உத்திகளைக் கையாளுவீர்கள்.  உத்தியோகத்தில், உயர் அதிகாரி உங்களைக் கடிந்துகொண்டாலும் அன்பாக நடந்துகொள்வார். உடன் வேலை செய்பவர்களிடம் கவனம் தேவை. கலைத்துறையினருக்குக் கலைத்திறன் வளரும்.

மதிப்பும் மரியாதையும் கூடும் காலம் இது

ராசிபலன்

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கும் உங்களுடைய பேச்சும் சுத்தமாக இருக்கும். ராகு வலுவாக    3-ம் இடத்தில் நிற்பதால் தைரியமாக எதையும் செய்து முடிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து, பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உறவினர் களால் ஆதாயம் உண்டு.

புதன் சாதகமாக இருப்பதால் பழைய உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தடைப்பட்ட அரசு காரியங்கள் விரைந்து முடியும்.  உங்களுடைய ராசிநாதன் சுக்கிரன்     6-ம் இடத்தில் மறைந்திருப்பதால் சோர்வு, களைப்பு, தொண்டை வலி வந்து நீங்கும். உடல்நலனில் அக்கறை தேவை. வியாபாரத்தில் போட்டிகள் குறையும். எதிர்பார்த்த லாபம் வரும். கடையை விரிவுபடுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினர் விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவார்கள்.

‘துணிவே துணை’ என்று நினைக்கும் நேரம் இது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

மிதுனம்

ராசிபலன்மனிதநேயமுள்ள நீங்கள், உதவி எனத் தேடி வருபவர்களுக்கு ஓடிவந்து உதவுவீர்கள். குருவும் சனியும் வலுவாக இருப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பணம் வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். நகர எல்லையைத் தாண்டி வீட்டு மனை வாங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. புதிய வேலை கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

17-ம் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் நுழைவதால் புகழ், கௌரவம் கூடும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத் துறையைச் சேர்ந்தவர்களே! அலட்சியப் படுத்திய நிறுவனமே உங்களை மீண்டும் அழைத்துப் பேசும்.

அறிவுபூர்வமாகச் செயல்பட வேண்டிய தருணம் இது.

ராசிபலன்

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

கடகம்


கணக்குப் போட்டு எதையும் செய்யும் நீங்கள், திட்டமிடுவதில் வல்லவர்கள். யோகாதிபதி செவ்வாய் 3-ம் இடத்தில்  நிற்பதால் கறாராகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். விவாதங்களில் வெற்றி உண்டு. பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். வழக்கு சாதகமாகத் திரும்பும்.

4-ம் இடத்தில்  சூரியன் நிற்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும்.  கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. சுக்கிரன் சாதகமாக இருப்ப தால் ஆடை, ஆபரணங்கள் சேரும். வீடு மாறுவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் இளைய சகோதரர்களால் நிம்மதி உண்டாகும். புதியவர்களை நம்பி ஏமாறாதீர்கள். வியாபாரத்தில் லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத் தில் பனிப்போர் வந்து நீங்கும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

வளைந்துகொடுத்து வெற்றி பெறும் வேளை இது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன்சிம்மம்

மனசாட்சிக்கு மதிப்பளிக்கும் நீங்கள் தன்மானம் தவறாதவர்கள். சுக்கிரன் ஆட்சிப்பெற்று அமர்ந்திருப் பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். வி.ஐ.பி-கள் நண்பர்களாவார்கள். வெள்ளி பொருள்கள் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்றுசேர்வீர்கள். தள்ளிப்போன திருமணம் கூடி வரும்.  சகோதரர்கள் பாசமாக நடந்துகொள்வார்கள்.

நீசமாகி இருக்கும் ராசிநாதன் சூரியன் 17-ம் தேதி முதல் 4-ம் இடத்தில் அமர்வதால் உங்களின் நிர்வாகத்திறன் கூடும். புதிய வேலை கிடைக்கும். பழைய நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. தாயாரின் உடல்நலம் சீராகும். வேலைச் சுமையால் ஓய்வின்மையும், தூக்க மின்மையும் வந்துபோகும். புதன் வலுவாக நிற்பதால் சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வேலையாட்கள் உங்களின் பரந்த மனதைப் புரிந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். கலைத் துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள்.

புதிய கண்ணோட்டத்தில் பயணிக்கும் காலம் இது.

ராசிபலன்

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

கன்னி


மொழிப்பற்று, இனப்பற்றுள்ள நீங்கள் ஒற்றுமை உணர்வு அதிகமுள்ள வர்கள். சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் புதிய எண்ணங்கள் தோன்றும். திடீர்ப் பண வரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகள் நீண்ட நாள்கள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். தந்தையின் உடல்நலம் சீராகும்.

புது கேமரா வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியைக் கொடுத்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். வேலையாட்கள், பங்கு தாரர்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறு வீர்கள். கலைத்துறையினரே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

எதையும் சாதிக்க முயலும் வேளை இது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ராசிபலன்துலாம்

எதிலும் கறாராக இருக்கும் நீங்கள் பிறர் தயவில் வாழ மாட்டீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. புதியவர்கள் நண்பர்களா வார்கள். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வாகனத்தைச் சரி செய்வீர்கள். அரசு காரியங்கள் தள்ளிப்போய் முடியும். ஏழரைச் சனி தொடர்வதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். ராகுவும் கேதுவும் சரியில்லாததால் எதிலும் ஒருவித தயக்கம், தடுமாற்றம், படபடப்பு வந்து போகும்.

ஜன்ம குரு நீடிப்பதால் மற்றவர்கள் யாரும் உங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே என ஆதங்கப் படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் ரசனைக்கேற்ற பொருள் களைக் கொள்முதல் செய்யுங்கள்.வேலையாட்களின் ஒத்துழைப்பு இல்லாமையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் பிரச்னைகள் வெடிக்கும். சக வேலையாட்களிடம் பேசும்போது கவனமாகப் பேசவும். கலைத்துறையினர்  தங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

பொறுமைத் தேவைப்படும் தருணம் இது.

ராசிபலன்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

விருச்சிகம்


நகைச்சுவையாகவும் நாசூக்காகவும் பேசும் நீங்கள் நாலும் அறிந்தவர்கள். செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். வீடு, மனை வாங்குவது மற்றும் விற்பது லாபகரமாக அமையும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பால்ய நண்பர் களைச் சந்திப்பீர்கள். 17-ம் தேதி முதல் ராசிக்குள் நிற்கும் சனியுடன் சூரியனும் சேர்வதால் முன்கோபம், உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி, கண் எரிச்சல் வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய சரக்கு களை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். கலைத் துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

மன உறுதியால் வெல்லும் நேரம் இது.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராசிபலன்தனுசு

தொலைநோக்கு சிந்தனை கொண்ட நீங்கள் எதிலும் உண்மையை விரும்புபவர்கள். உங்கள் ராசிநாதன் குரு பகவான் வலுவாக அமர்ந்திருப்ப தால் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டி குடியேறுவீர்கள். கணவன் மனைவிக் குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் வலியவந்து பேசுவார்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

 செவ்வாய் 10-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் உங்கள் ரசனை மாறும். வீட்டை அழகு படுத்துவீர்கள்.  குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றி வருவீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். வேலையாட்களை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத் துறையினர்களுக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் காலம் இது.

ராசிபலன்

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

மகரம்

இயற்கையை நேசிக்கும் நீங்கள், பாரம்பர்ய வழக்கங்களை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்ப்புகள் அடங்கும். வீடு கட்டுவது, வாங்குவது சாதகமாக அமையும். புது பொறுப்புகளும் பதவிகளும் தேடி வரும். பிள்ளைகளின் தவற்றைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள்.

வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள் வார்கள். நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில்  ஆலோசித்து முடிவெடுங்கள். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகமாகும். பங்குதாரர்கள், வேலையாட்களால் மதிக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சக ஊழியர் களிடம் கவனமாகப் பழகுங்கள். கலைத் துறையினர் புதுமையாகச் சில படைப்புகளை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

சாமர்த்தியமாகக் காய்நகர்த்த வேண்டிய வேளை இது.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

ராசிபலன்கும்பம்

தோல்வியைக் கண்டு துவளாத நீங்கள், அடைக்கலம் தேடி வருபவர் களை ஆதரிப்பவர்கள். புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய திட்டங்கள் நிறை வேறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை கூடிவரும். பிள்ளைகளுடன் மனம்விட்டு பேசுவீர்கள்.  உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள்.

 17-ம் தேதி முதல் சூரியன் 10-ம் இடத்தில் நுழைவதால் புது வேலை கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் அடைவீர்கள். தந்தையின் உடல்நலம் சீராகும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வீடு, மனை வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். பெற்றோரின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். வியாபாரத்தில் லாபம் குறையாது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும்.

தராதரம் அறிந்து செயல்படும் காலம் இது.

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

ராசிபலன்மீனம்

கவிதை, கற்பனை என்று சிறகடிக்கும் நீங்கள் இரக்கப்பட்டு ஏமாறுவீர்கள். கேது லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திடீர்ப் பணவரவு உண்டு. குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பிள்ளை களால் மதிப்புக் கூடும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. 

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். பூர்வீகச் சொத்தை மாற்றி, புது வீடு வாங்கு வீர்கள். வாகனப் பழுதை சீர் செய்வீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். 7-ம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் வீண் கவலை, வாழ்க்கைத் துணைவருக்கு மருத்துவச் செலவு, ஒருவித படபடப்பு வந்துபோகும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். கலைத்துறையினருக்கு அவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் தருணம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு