Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

நவம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்

நவம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

பதவிகள் தேடி வரும்!

ராசி பலன்கள்


மேஷம்: கடினமாக உழைக்கும் குணமும், நல்லதை நினைக்கும் மனசும் கொண்ட நீங்கள், எதிர்பார்ப்புகளின்றி மற்றவர்களுக்கு உதவுபவர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். திருமணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். நகை வாங்குவீர்கள். வாகன வசதி பெருகும். வீடுகட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பதவிகள் தேடி வரும். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வழக்கு சாதகமாகத் திரும்பும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். உத்யோகத்தில் தலைமைக்கு உதவுவீர்கள். மதியுகத்தால் வெற்றி பெறும் தருணமிது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராசி பலன்கள்

எதிர்பார்த்த பணம் வரும்!

ரிஷபம்:
‘வணங்க ஆரம்பிக்கும்போதே வளர ஆரம்பிக்கலாம்’ என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள் நீங்கள்தான். எதிர்பார்த்த பணம் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்தைச் சீர் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வேலைச்சுமையால் சோர்வாக இருப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் முக்கியக் கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். அதிகாரிகளின் உதவி கிடைக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் வேளையிது.

அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்!

ராசி பலன்கள்மிதுனம்: மற்றவர்களைக் குறை சொல்லாது தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருக்கும் நல்லவர் நீங்கள். எதிர்பாராத வெற்றி கிட்டும். சொத்து, வாகன சேர்க்கை உண்டு. குழந்தைப்பேறு சிலருக்குக் கிடைக்கும். நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். வரவேண்டிய பணத்தைப் போராடிப் பெறுவீர்கள். விசா கிடைக்கும். அரசு விவகாரங்களில் இருந்துவந்த இழுபறிநிலை மாறும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அச்சம் விலகி அதிகாரம் பெருகும் வேளையிது.

ராசி பலன்கள்

புண்ணியஸ்தலம் போய் வரும்!

கடகம்: ‘விட்டுக் கொடுப்பவர்கள், எப்போதும் கெட்டுப் போவதில்லை என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள் நீங்கள்தான். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். பழைய பிரச்னைகள் தீரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். பணபலம் உயரும். நட்பு வகையில் ஆதாயம் உண்டு. புதிய வீடு வாங்குவீர்கள். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டாம். தொந்தரவுகள் நீங்கி, சாதிக்கும் காலமிது.

வி.ஐ.பி-க்களின் நட்பு கிடைக்கும்!

ராசி பலன்கள்சிம்மம்:
ஆழமாக யோசித்து, அதிரடியாகச் செயல்படும் குணமுடைய நீங்கள், எப்போதும் மனசாட்சிக்கு மதிப்பளிப்பவர்கள். சவாலான விஷயங்களைச் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். பண உதவி கிடைக்கும். டி.வி., ஃபிரிட்ஜ், வாகனம் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வாகனங்கள் செலவு வைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மதிப்பார்கள். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். திட சிந்தனையால் வெல்லும் நேரமிது.    

அயல்நாட்டுப் பயணம் அமையும்!

ராசி பலன்கள்கன்னி:
‘யார் தயவிலும் வாழாமல் தன் கையே தனக்குதவி’ என நினைப்பவர் நீங்கள். குரு வலுவாக இருப்பதால், சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். பணம் பலவழிகளில் வரும். வெளிநாட்டில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். அயல்நாட்டுப் பயணம் அமையும். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். தலைநிமிர்ந்து நடக்கும் காலமிது.

உங்கள் வருமானம் உயரும்!

ராசி பலன்கள்துலாம்:
கலங்காத மனதுடன் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு புதிய திட்டங்கள் தீட்டும் தொலைநோக்குச் சிந்தனையாளர் நீங்கள்தான். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளின் இசை, ஓவிய விளையாட்டுத் திறனை வளர்க்க பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். மகனுக்கு உயர்கல்வி நல்லவிதத்தில் அமையும். வருமானம் உயரும். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்கவேண்டி வரும். கனவுகள் நனவாகும் காலமிது.

ராசி பலன்கள்

பணிச்சுமை அதிகரிக்கும்!

விருச்சிகம்: தலைமைப்பண்பு கொண்ட நீங்கள் தலைக்கனம் இல்லாதவர். முகப்பொலிவு கூடும். வருமானம் உயரும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்ட கடன் கிடைக்கும். நல்ல விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். பிள்ளை களுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் இடம் கிடைக்கும். புதுச் சொத்து வாங்குவீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். அவ்வப்போது தூக்கம் குறையும். வியாபாரத்தில் பிரச்னை தந்த பங்குதாரர் விலகுவார். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். ஆனால், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தோல்வியிலிருந்து விடுபடும் நேரமிது.

வராது என்றிருந்த பணம் வரும்!

ராசி பலன்கள்


தனுசு: வெள்ளை உள்ளமும், விடாப்பிடியான செயல் திறனும் கொண்ட நீங்கள், எப்போதும் கல கலப்பாக இருப்பவர். அரசு அதிகாரிகள் உதவுவார்கள். வெளியூர் பயணம் உண்டு. வராது என்றிருந்த பணம் வரும். வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழுதாகியிருந்த வாகனம் ஓடும். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த ஈகோ பிரச்னை விலகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பதவி உயர்வு உண்டு. நல்லவர்களின் நட்பால் சாதிக்கும் வேளையிது.

திடீர் பணவரவு உண்டு!

ராசி பலன்கள்மகரம்: மூளை பலமும் முற்போக்குச் சிந்தனையும் உடைய நீங்கள், எடுத்த காரியத்தை முடிக்கும் வரையில் ஓயமாட்டீர்கள். மனவலிமை கூடும். பணவரவு உண்டு. சமையலறைச் சாதனங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன்  அமையும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். விலகியிருந்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். தூக்கமின்மை, கண் எரிச்சல் வந்துபோகும். சிலரது ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் இல்லாமல் போகும். புதிய திட்டங்கள் தீட்டும் தருணமிது.

புதிய முயற்சிகள் பலிதமாகும்!

ராசி பலன்கள்கும்பம்: அடக்குமுறைக்கும் ஆணவத்துக்கும் அஞ்சாத நீங்கள், அன்புக்கு அடிமையாகிவிடுவீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். ரசனைக்கேற்ற வீடு, வாகனம் அமையும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். திடீரென்று அறிமுகமாகிறவர்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களைக் கவனமாகக் கையாளுங்கள். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்யோகத்தில் அதிகாரிகள் அலுவலக ரகசியங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். கடின உழைப்பால் முதலிடம் பிடிக்கும் வேளையிது.

 சித்தர்களின் ஆசி கிடைக்கும்!

ராசி பலன்கள்மீனம்: ஏற்றிவிட்ட ஏணிப்படியையும், கடந்து வந்த பாதையையும் எப்போதும் மறவாதவர் நீங்கள்தான். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலை தேடிக்கொண்டிருந்த வர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். எதிலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. அரசு விவகாரங்கள் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் வந்துபோகும். சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். வெளுத்ததெல்லாம் பாலில்லை என்பதை உணரும் காலமிது.