அவள் 20
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசிபலன்கள்

ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்கள்

நவம்பர் 28-ம் முதல் டிசம்பர் 11-ம் வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

மேஷம்

ராசிபலன்கள்குடும்பம்:
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வர வேண்டிய பணம் வந்து சேரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகள் சாதகமாகும்.

பிள்ளைகள்: அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது.

வியாபாரம்: போட்டிகளைச் சமாளித்து ஓரளவு லாபம் கிடைக்கும்.

உத்தியோகம்:  பொறுப்புகள் அதிகரிக்கும்.

டிசம்பர் 2-ம் தேதி முதல் கணவன்  மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது அவசியம்.

ராசிபலன்கள்

ரிஷபம்

குடும்பம்: புதிய முயற்சிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பணம் ஓரளவு வரும். பழைய கடன் பிரச்னைகள் ஓரளவுக்கு தீரும். விலை உயர்ந்த மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

பிள்ளைகள்: திருமண வயதில் உள்ள பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள்.

வியாபாரம்: கமிஷன் மூலம் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகம்: சக ஊழியர்களை அனு சரித்துச் செல்வது நல்லது.

கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

மிதுனம்

ராசிபலன்கள்

குடும்பம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு பதவிகளில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும்.

பிள்ளைகள்: அவர்களிடம் கனிவாக நடந்துகொள்ளவும்.

வியாபாரம்: வழக்கமாகக் கிடைக்கும் லாபம் கிடைக்கும்.

உத்தியோகம்: சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள்.

உறவினர்கள், நண்பர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

ராசிபலன்கள்

கடகம்

குடும்பம்: இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ரசனைக்கேற்ற வீடு அமையும்.

பிள்ளைகள்: அவர்கள் வழியில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும்.

வியாபாரம்: புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகம்: அதிகாரிகள் சுட்டிக்காட்டும் தவறுகளை அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

திட்டமிட்ட காரியங்கள் அனுகூலமாக முடியும்.

சிம்மம்

ராசிபலன்கள்குடும்பம்: எதிலும் வெற்றி உண்டாகும். வழக்குகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். சொத்துப் பிரச்னைகளில் பொறுமை அவசியம்.

பிள்ளைகள்: உங்கள் விருப்பப்படி நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும்.

வியாபாரம்: புது முதலீடு செய்வது பற்றி யோசித்து முடிவெடுப்பீர்கள்.

உத்தியோகம்: சக ஊழியர்கள் பணிகளில் ஒத்துழைப்பார்கள்.

 பொறுப்பை உணர்ந்து செயல்படுவீர்கள்.

ராசிபலன்கள்

கன்னி

குடும்பம்: தடைப்பட்ட வேலைகள் முடியும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

பிள்ளைகள்: அவர்களுடைய புதிய முயற்சிகளைப் புரிந்துகொண்டு ஆதரிப்பீர்கள்.

வியாபாரம்: லாபம் அதிகரிக்கும். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகம்: உங்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்த அதிகாரி மாற்றப்படுவார்.

தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

துலாம்

ராசிபலன்கள்குடும்பம்: முக்கியப் பிரமுகர்களால் ஆதாயம் உண்டாகும். அடகில் இருந்த நகைகளை மீட்பதற்கு வழி பிறக்கும். அரசாங்க அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். வெளிவட்டாரத்தில் பக்குவமாக நடந்துகொள்ளவும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

பிள்ளைகள்: உங்கள் அறிவுரைப்படி நடந்துகொள்வார்கள்.

வியாபாரம்: விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.

உத்தியோகம்: வேலைச்சுமை அதிகரிக்கக் கூடும். பணிகளில் கவனம் தேவை.

கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

ராசிபலன்கள்

விருச்சிகம்

குடும்பம்: திறமைகள் வெளிப்படும். உறவினர் களால் ஆதாயம் உண்டாகும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். பயணங்களால் செலவுகள் அதிகரிப்பதுடன் அலைச்சலும் ஏற்படக்கூடும். ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டி வரும்.

பிள்ளைகள்:அவர்களின் செயல்பாடுகள் மகிழ்ச்சி தருவதாக அமையும்.

வியாபாரம்: போட்டிகள் இருந்தாலும் சமாளித்து ஓரளவு லாபம் பெறுவீர்கள்.

உத்தியோகம்: அதிகாரிகளிடம் பக்குவ மாக நடந்துகொள்ள வேண்டும்.

பொறுமையுடன் இருந்து காரியம் சாதிப்பீர்கள்.

தனுசு

ராசிபலன்கள்குடும்பம்: புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வழக்கில் வெற்றி கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் தாமதமாக முடியும். புதியவர்களின் நட்பு உற்சாகம் தரும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள்.

பிள்ளைகள்: அவர்களின் செயல்பாடுகள் உங்கள் அந்தஸ்தை உயர்த்தும்.

வியாபாரம்: பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

புது வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

உத்தியோகம்: அதிகாரிகளுக்கு நெருக்க மாவீர்கள். சலுகைகள் கிடைக்கும்.

எண்ணிய காரியங்கள் எண்ணியபடி முடியும்.

ராசிபலன்கள்

மகரம்

குடும்பம்: சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத் துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டாகும்.

பிள்ளைகள்: அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது.

வியாபாரம்: விற்பனை பரபரப்பாக நடைபெற்று லாபம் கிடைக்கும்.

உத்தியோகம்:  அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.

எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் எளிதாகச் சமாளிப்பீர்கள்.

கும்பம்

ராசிபலன்கள்குடும்பம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் முடியும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். கைமாற்றாக வாங்கிய பணத்தைத் திருப்பித் தருவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும்.

பிள்ளைகள்: தங்கள் தவறை உணர்ந்து திருத்திக்கொள்வார்கள்.

வியாபாரம்: அதிரடி சலுகைகளால் லாபம் அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.

உத்தியோகம்:  சக ஊழியர்கள் பாராட்டு வர். சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும்.

ராசிபலன்கள்

மீனம்

குடும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலங்களின் அறிமுகம் ஏற்படும். பழுதான எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை மாற்றுவீர்கள்.

பிள்ளைகள்: அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது.

வியாபாரம்: விற்பனையும் பற்று வரவும் சுமாராகத்தான் இருக்கும்.

உத்தியோகம்: புது முயற்சிகளில் அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்கவும்.

பொறுமையுடன் இருந்து சாதிக்க வேண்டும்.