Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

டிசம்பர் 5 முதல் 18 வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

டிசம்பர் 5 முதல் 18 வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன்மேஷம்

டந்து வந்த பாதையை மறக்காதவர்களே!

தனாதிபதி சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். வீட்டின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விலையுயர்ந்த மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். புதன் 8-ல் இருப்பதால், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு பெருகும்.

ராசிநாதன் செவ்வாய் 7-ல் இருப்பதால், கணவன்  மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மற்றவர்களுக்கு சாட்சிக் கையொப்பம் போடவேண்டாம். 16-ம் தேதி முதல் சூரியன் 9-ம் இடத்துக்குச் செல்வதால், அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். ஆனால், சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், ஏமாற்றம், தலைச்சுற்றல் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் அடுத்தடுத்த வேலைகளால் மன இறுக்கம் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினரே, உங்களுக்குப் புதுச் சலுகைகள் கிடைக்கும்.

அலைச்சல் குறைந்து ஆதாயம் பெருகும் தருணம் இது

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ராசிபலன்ரிஷபம்

ற்றவர்கள் செய்த உதவியை மறக்காதவர்களே!

செவ்வாய் வலுவாக இருப்பதால், மனோபலம் அதிகரிக்கும். துணிந்து முடிவு எடுப்பீர்கள். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் உதவுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் கட்டுப்படும். வீடு, மனை வாங்கும் முயற்சி வெற்றி பெறும். புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ராகு 3-ல் இருப்பதால், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். ஆனால், சூரியன் சனியுடன் சேர்ந்திருப்பதால், சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உடனே சரியாகிவிடும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மேலதிகாரி பரிசோதிப்பார். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினரே, உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

திட்டமிட்டுக் காரியம் சாதிக்கும் தருணம் இது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராசிபலன்மிதுனம்

திர்காலத்தைப் பற்றித் தீவிரமாக யோசிப்பவர்களே!

குரு 5-ல் வலுவாக இருப்பதால், திடீர் பணவரவையும் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் தருவார். அரசால் ஆதாயம் உண்டு. ஷேர்மூலம் பணம் வரும். குடும்பத்தில் நன்மைகள் நடக்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

சுக்கிரனும் புதனும் 6-ல் மறைந்திருப்பதால், அடிக்கடி கோபம் வந்து செல்லும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் கருத்து  வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். செவ்வாய் 5-ல் நிற்பதால், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து செல்லும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிக்கப் புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். கலைத்துறையினரே, உங்களைப் பற்றி வதந்திகள் பரவக்கூடும்.

காத்திருந்து காரியம் சாதிக்கவேண்டிய காலம் இது.

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

ராசிபலன்கடகம்

மயோசித அறிவு அதிகம் கொண்டவர்களே!

புதன் சாதகமாக இருப்பதால், கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வாகனப் பழுது நீங்கும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.

17-ம் தேதி முதல் சூரியன் 6-ல் அமர்வதால், எதிர்ப்புகள் அடங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். செவ்வாய் 4-ல் அமர்ந்திருப்பதால், புது வீடு வாங்குவீர்கள். குரு 4-ல் இருப்பதால், யாருக்கும் வாக்குறுதி தரவேண்டாம். மற்றவர்களுக்கு சாட்சிக் கையொப்பம் போடவேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் போராட வேண்டி இருக்கும். உயரதிகாரிகளின் விஷயங்களில் தலையிடாதீர்கள். கலைத்துறையினரே, விமர்சனங்களையும் கடந்து முன்னேறுவீர்கள்.

தடைகளைக் கடந்து வெற்றி பெறும் நேரம் இது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன்சிம்மம்

கொள்கையை எப்போதும் மாற்றிக்கொள்ளாதவர்களே!

செவ்வாய் வலுவாக இருப்பதால், மனவலிமை கூடும். சுயமாகச் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வீடுகட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால், புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டில் உற்சாகம் அதிகரிக்கும். அடகில் இருந்த நகை மற்றும் சொத்துப்பத்திரங்களை மீட்க வழி பிறக்கும். அர்த்தாஷ்டமச் சனியுடன் சூரியனும் இருப்பதால், கால்களில் ரத்தம் உறைதல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு நீங்கும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். கேது 6-ல் இருப்பதால், பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் உங்கள் பணிகளில் மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. கலைத்துறையினரே, உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் வேளை இது.

ராசிபலன்

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்

கன்னி

னிமையாகப் பேசி, காரியம் சாதிப்பவர்களே!

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், மனதில் தைரியம் கூடும். அரசாங்கத்தினரின் நட்பு கிடைக்கும். விரயச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு கட்ட பிளான் அப்ரூவலாகி வரும். அரசால் அனுகூலம் உண்டாகும். வராது என்று நினைத்த பணம் கைக்கு வரும். ராகு லாப வீட்டில் இருப்பதால், பிற மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும்.

யோகாதிபதி சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், நவீன மின்சார, மின்னணுச் சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். செவ்வாய் 2-ல் இருப்பதால், செலவுகள் அதிகரிக்கும். ராசிநாதன் புதன் சனியுடன் இருப்பதால், சளித்தொந்தரவு, தூக்கமின்மை வந்து செல்லும். குரு 2-ல் வலுவாக இருப்பதால், சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்களின் பாராட்டு கிடைக்கும்.

அடிப்படை வசதிகள் பெருகும் நேரம் இது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

துலாம்

ராசிபலன்பாரபட்சம் இல்லாமல் பழகுபவர்களே!

புதன் தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்த பணவரவு உண்டு. பிள்ளைகளின் நட்பு வட்டம் விரிவடையும். உறவினர்கள் தேடி வருவார்கள். ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருப்பதால், திட்டமிட்ட காரியங்கள் நல்லபடியாக முடியும். வாகனத்தை மாற்றுவீர்கள். 15-ம் தேதி வரை சூரியன் 2-ல் இருப்பதால் பேச்சில், உடல்நலனில் கவனம் தேவை. ஆனால், 16-ம் தேதி முதல் 3-ல் அமர்வதால், அரசால் ஆதாயம் உண்டாகும். பதவிகள் தேடி வரும்.

ஜன்ம குரு செவ்வாயுடன் சேர்ந்திருப்பதால், தூக்கமின்மை, கனவுத்தொல்லை, வயிற்று வலி வந்து செல்லும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், வீண் விரயம், தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படக்கூடும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும். கலைத்துறையினரே, பழைய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும்.

எதிர்ப்புகளைச் சமாளித்து முன்னேறும் வேளை இது.

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

ராசிபலன்


விருச்சிகம்

நினைப்பதை மறைக்காமல் பேசுபவர்களே!

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால், புதிய கோணத்தில் சிந்தித்து, பழைய சிக்கல்களைத் தீர்ப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கடனாகக் கிடைக்கும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். பழைய நண்பர்கள் உதவுவார்கள். உறவினர்கள் உங்கள் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அமைப்பீர்கள்.

ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால், வீண் செலவுகள், திடீர்ப்  பயணங்கள்  இருக்கும். தூக்கமின்மை வந்து செல்லும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். உடன்பிறந்தவர்களுடன் மனத்தாங்கல் ஏற்பட்டு நீங்கும். கேது 3-ல் இருப்பதால், ஷேர் மூலம் லாபம் கிடைக்கும். ஆனால், குரு 12-ல் இருப்பதால், வீண் சந்தேகம், மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். பங்குதாரர்களிடம் கறாராக இருக்க வேண்டாம். உத்தியோகத்தில் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. கலைத்துறையினரே, மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தவேண்டிய நேரம் இது.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராசிபலன்தனுசு

ந்த நிலையிலும் திடமாக இருப்பவர்களே!

செவ்வாய் வலுவாக இருப்பதால், முயற்சிகள் வெற்றியடையும். பாதிப் பணம் கொடுத்திருந்த சொத்துக்கு மீதிப் பணத்தைத் தந்து பதிவு செய்துகொள்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி தங்கும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பாராத பணவரவு உண்டு. வெள்ளிப் பொருள்கள் வாங்குவீர்கள். குரு லாபவீட்டில் அமர்ந்திருப்பதால், பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். 16-ம் தேதி முதல் சூரியன் சனியை விட்டு விலகி ராசிக்குள் அமர்வதால், தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு காரியங்கள் இழுபறியாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சர்வசாதாரணமாக முடிப்பீர்கள். கலைத்துறையினரே, புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கும்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரம் இது.

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

ராசிபலன்மகரம்

சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்காதவர்களே!

 சனி லாப வீட்டிலியே தொடர்வதால், பெரிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மகனின் உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். புதன் சாதகமாக இருப்பதால், வரவேண்டிய பணம் கைக்கு வரும். 

யோகாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடன் கிடைக்கும். சூரியன் 16-ம் தேதி முதல் 12-ல் மறைவதால் திடீர்ப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். செலவுகள், டென்ஷன் வந்து செல்லும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், புதியவர்களை நம்பவேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்த வேண்டும். கலைத்துறையினரே, சம்பள விஷயத்தில் கறாராக இருக்கவும்.

அமைதியாக இருந்து சாதிக்கவேண்டிய நேரம் இது.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி 1,2,3-ம் பாதம்

ராசிபலன்கும்பம்

ற்றவர்களை மகிழ்வித்து மகிழ்பவர்களே!

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்த்தவர்கள் நண்பர்கள் ஆவார்கள். பெரிய பதவிகளில் இருப்பவர்களால் ஆதாயமும் கிடைக்கும். செல்வாக்கு கூடும். வீடு கட்டும் பிளான் அப்ரூவல் ஆகி வரும். குடும்பத்தினர்  உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வர். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பணவரவு திருப்தி தரும்.

புதன் 10-ல் நிற்பதால், நண்பர்கள் வட்டம் விரிவடையும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செவ்வாய் 9-ல் இருப்பதால், புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். ராகு வலுவாக இருப்பதால், தன்னம்பிக்கையுடன் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் வரும். பெரிய பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள் உத்தியோகத்தில் மேலதிகாரி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினரே, வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்பு வரும்.

வி.ஐ.பி-களின் உதவியால் வெற்றி பெறும் வேளை இது.

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

ராசிபலன்மீனம்

டுத்த காரியத்தைத் திட்டமிட்டு முடிப்பவர்களே!

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பேச்சைக் குறைத்து, செயலில் வேகம் காட்டுவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றிப் புது வீடு வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நவீனரக வாகனம் வாங்குவீர்கள். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும்.

கேது லாப வீட்டில் தொடர்வதால், தைரியம் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் நன்மை ஏற்படும். குரு 8-ல் மறைந்திருப்பதால், மற்றவர்களை நம்பி ஏமாற வேண்டாம். 15-ம் தேதி வரை சூரியன் 9-ல் நிற்பதால், சேமிப்புகள் கரையும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். செவ்வாய் 8-ல் தொடர்வதால், வில்லங்கம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடக் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், பிறகு ஏற்றுக்கொள்வார்கள். கலைத்துறையினரே, வசதி வாய்ப்புகள் பெருகும்.

பணிந்துகொடுத்து முன்னேறும் காலம் இது.