தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சனிப்பெயர்ச்சி பலன்கள்

19.12.2017 தேதி முதல் 26.12.2020 தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

நிகழும் ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை (19.12.2017) பிரதமை திதி, மூலம் நட்சத்திரத்தில் காலை 9.30 மணிக்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குள் சனி பகவான் நுழைகிறார். 19.12.2017 முதல் 26.12.2020 வரை இங்கு அமர்ந்து பலன் தரப்போகிறார்.

வாழ்வை உயர்த்தும்!

சனிப்பெயர்ச்சி பலன்கள்எங்கும் எதையும் உடனே செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களே! குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்களது வார்த்தைக்கு மதிப்புக்கூடும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேருவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எடுத்த காரியம் யாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். வராமலிருந்த பாக்கித் தொகைகள் உடனடியாக வசூலாகும். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிக ஊதியம் கிடைத்து, நிலையான வேலையில் அமருவீர்கள். பதவி, சம்பள உயர்வெல்லாம் இனி எதிர்பார்த்தபடி கிடைக்கும். இந்த சனி மாற்றம், உங்களை வாழ்வின் உயரத்துக்கு அழைத்துச் செல்லும்.

பரிகாரம்:
சென்னை, மயிலாப்பூரில்  இருக்கும் ஸ்ரீமாதவப் பெருமாளை சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

ஆதாயத்தைத் தரும்!

‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என எல்லோரும் எல்லாமும் பெற வேண்டுமென நினைப்பவர்களே! வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து இனி பேச வேண்டாம். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரைக் கலந்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகளை அளவுடன் கண்டியுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து லாபம் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். இந்த சனி மாற்றம், உங்களுக்கு அனுபவ அறிவையும் ஆதாயத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம், சுந்தராபுரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவாலீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள்.

புதிய பாதை அமையும்!

சனிப்பெயர்ச்சி பலன்கள்


செயற்கரிய செயல்களைச் செய்துவிட்டு, சாதாரணமாக இருப்பவர்களே! அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் உடனே செலுத்திவிடுவது நல்லது. குடும்பத்தில் எல்லோரிடமும் அனுசரித்துப் போவது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாகச் செலவு செய்யுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். அனுபவமிக்க வேலையாட்களைத் தக்க வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். இந்த சனி மாற்றம், உங்களைப் புதிய பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

பரிகாரம்:
கோயம்புத்தூர் மாவட்டம், கொழுமம் எனும் ஊரில் அருள்பாலிக்கும், ஸ்ரீகல்யாண வரதராஜப் பெருமாளை ஏகாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

திடீர் யோகங்களைத் தரும்!

கலகலப்பாகப் பேசி சிரிப்பதுடன், மற்றவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பவர்களே!  வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும். சொந்த வீட்டில் குடி புகுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்துக் காகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள், வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் அங்கீகாரம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் நல்ல பதவியில் சென்று அமர்வீர்கள். இந்த சனி மாற்றம், திடீர் யோகங்களையும் எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: தருமபுரி மாவட்டம், தீர்த்தமலை எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீதீர்த்தகிரீஸ்வரரை திருவாதிரை நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

இனிய சூழ்நிலை உருவாகும்!

சனிப்பெயர்ச்சி பலன்கள்


பொதுவுடைமைச் சிந்தனையுடன் மற்றவர்களிடம் மனம்நோகாமல் பேசிப் பழகுபவர்களே! குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்துப்பேசி மகிழக்கூடிய இனிய சூழ்நிலை உருவாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது.  வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். ஷேர் மூலம் பணம் வரும். நெடு நாள்களாக வராமலிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். விளம்பர சாதனங்களைச் சரியாகப் பயன்படுத்தி விற்பனையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட இடத்துக்கே இட மாற்றம் கிடைக்கும். இந்த சனி மாற்றம், உங்களைப் பரபரப்பாக்குவதுடன் பண வரவையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:
கடலூர் மாவட்டம், புதுப்பாளையம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீராஜகோபால சுவாமியை சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

ஏற்றத்தையும் வசதியையும் வழங்கும்!

மலர்ந்த முகத்துடன் வந்தாரை உபசரித்து உதவும் குணம்கொண்டவர்களே! மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் அமையும். பண வரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வேறு வேலைக்கு மாறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கனிவாக நடத்துங்கள். கடையைக் கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் முக்கிய பதிவேடுகளைக் கவனமாகக் கையாளுங்கள். சம்பள பாக்கியைப் போராடி பெறுவீர்கள். இந்த சனி மாற்றம், இடையூறுகளுடன் ஏற்றத்தையும் வசதியையும் வழங்குவதாக அமையும்.

பரிகாரம்:
திண்டுக்கல் மாவட்டம், ஸ்ரீகுபேர லிங்கேஸ்வரரை திங்கட்கிழமையில் சென்று வணங்குங்கள்.

தொட்டதெல்லாம் துலங்கும்!

சனிப்பெயர்ச்சி பலன்கள்


அடுக்கடுக்கான தோல்விகள் வந்தாலும் அஞ்சாமல் அதிரடியாகச் செயல்பட்டு, வெற்றி இலக்கை எட்டுபவர்களே! ராஜயோகமும் வெற்றியும் சந்தோஷமும் உங்களைத் தேடிவர இருக்கிறது. தொட்டதெல்லாம் துலங்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். சொந்த வீட்டில் குடியேறுவீர்கள். சொந்த பந்தங்கள் வியக்கும்படி மகளின் திருமணத்தை முடிப்பீர்கள். வி.ஐ.பி-க்களின் அந்தஸ்தைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் உயர்படிப்பு, திருமணத்துக்காக அதிகம் செலவு செய்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.  மகான்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அயல்நாட்டு தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். வழக்கு சாதகமாகும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். இந்த சனி மாற்றம், உங்களை சுகபோக வாழ்வுக்கு அழைத்துச் செல்வதுடன், எதிலும் எளிதாக வெற்றிபெறவும் வைக்கும்.

பரிகாரம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசொக்கநாதரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

அலைபாய்ந்த மனது அமைதியாகும்!

எந்தச் சூழ்நிலையிலும்  உண்மையையே பேசி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துபவர்களே! ஜன்மச் சனியாக இருந்த சனி பகவான் உங்கள் ராசியை விட்டு விலகி, பாதச் சனியாக அமர்ந்து, உங்களை ஆளப்போகிறார். அலைபாய்ந்த மனசு அமைதியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னைகளும் சிறு மனஸ்தாபங்களும் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அனுசரித்துச் செல்லுங்கள். வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். உங்களைக் கசக்கிப் பிழிந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாறுவார். இந்த சனி மாற்றம், வெற்றி, லாபத்துடன் சிறு சிறு ஏமாற்றங்களையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:
நாகப்பட்டினம் மாவட்டம், மணக்குடி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரரை திருவாதிரை நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

சவால்களில் வெற்றி கிட்டும்!

சனிப்பெயர்ச்சி பலன்கள்


தும்பைப்பூ சிரிப்பும் பலரை வழிநடத்தி செல்லும் அளவுக்குப் பட்டறிவும் கொண்டவர்களே! உங்கள் ராசிக்குள்ளேயே ஜன்மச் சனியாக அமர்ந்து உங்களை ஆளப் போகிறார். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளைக் குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அவசரம் வேண்டாம். வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்காதீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் மரியாதைக் கூடும். சிலர் சுயதொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்துகொடுத்துச் செல்லுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமைகள் அதிகரித்துக்கொண்டே போகும். தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் இனி தாமதம் இல்லாமல் கிடைக்கும். இந்த சனி மாற்றம், சற்றே கவனத்துடன் நிதானமாகச் செயல்பட்டால், முன்னேற்றம் அளிப்பதாக அமையும்.

பரிகாரம்:
விழுப்புரம் மாவட்டம், கல்பட்டு எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீசனீஸ்வரரை சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள்.

சுபச் செலவுகள் அதிகரிக்கும்!

சனிப்பெயர்ச்சி பலன்கள்கொடுத்துச் சிவந்த கரங்களுடையவர்களே! கம்பீரமாகப் பேசி மாறுபட்ட அணுகு முறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும்.  பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். ஆனால், செலவுகளும் இருக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழிப்பிறக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். திடீர்ப் பயணங்கள் குறையும். வியாபாரத்தில் போட்டிகளையும் மீறி ஓரளவு சம்பாதிப்பீர்கள். அனுபவம்மிக்க புது வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். இந்த சனி மாற்றம், சில தடைகளை ஏற்படுத்தினாலும், முன்னேற்றங்களைத் தருவதாகவே அமையும்.

பரிகாரம்:
திருவண்ணாமலை மாவட்டம், ஏரிக்குப்பம் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஎந்திர சனீஸ்வரரைச் சென்று வணங்குங்கள்.

மதிப்பு மரியாதை கூடும்!

சனிப்பெயர்ச்சி பலன்கள்எதிர்மறையாக யோசித்து, நேர்மறையாகச் செயல்படுவதில் வல்லவர்களே! குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பணவரவுக்கு இனி குறைவிருக்காது. சேமிக்க வேண்டுமென்ற எண்ணமும் ஏற்படும். நாடாளுபவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய கடன் பிரச்னைகளைத் தீர்க்க புது வழி பிறக்கும். மனைவி வழியில் மதிப்பு மரியாதை கூடும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.  வியாபாரத்தில் பணியாளர்களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். இந்த சனி மாற்றம், உங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுடன், மன நிம்மதியையும் வசதியையும் அதிகரிக்கும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ‘அமிர்தபுரி’ எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாளை திருவோணம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

கவலைகளை விரட்டியடிக்கும்!

சனிப்பெயர்ச்சி பலன்கள்சுதந்திர மனப்பான்மையும் சுய ஒழுக்கமும் உடையவர்களே! தொட்டது துலங்கும். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். உறவுகளால் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் பெறுவீர்கள். ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை முறியடிப்பீர்கள். பழைய கடையைப் புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். வியாபார நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். கணிசமான லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அநாவசிய விடுப்புகளைத் தவிர்க்கவும். இந்த சனி மாற்றம், கவலைகளை விரட்டியடிப்பதுடன் மகிழ்ச்சியையும் பொருளாதார முன்னேற்றத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅமிர்த நாராயணப் பெருமாளை  சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள்.