Published:Updated:

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

Published:Updated:
சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!
சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

சந்தோஷமே அருள்வார் சனிபகவான்!

சனி பகவான் ஒரு நீதிபதி. கர்மவினைகளுக்கு ஏற்ப உரிய பலன்களை அளிக்கும் நீதிதேவன் என்றும் சொல்லலாம். ஒருவரின் ஜாதகத்தில் சனி சுபத்தன்மை அடைந்து அமர்ந்துவிட்டால், அவர் இளம் வயதிலேயே நீதிபதியாக அமர்ந்துவிடுவார்.  பாமரன் ஒருவனைப் பெரும் பதவியில் உட்காரவைக்கவும்,  முதன்மைப் பதவியில் இருப்பவர் களைச் சட்டென்று தூக்கி, ஒரு மூலையில் உட்காரவைக்கவும் சனி பகவானால் இயலும்.

இவரின் கதிர்வீச்சு ஒரு மனிதனைக் கோடீஸ்வரனாகவும் மாற்றும், அதேபோல் தெருக்கோடியில் தள்ளவும் செய்யும். நம் உடம்பில் ஓடும் நாடி, நரம்பு, தோல், நகம், தலைமுடி போன்றவற்றையெல்லாம் இவர்தான் ஆளுகிறார். பெட்ரோல், டீசல், நல்லெண்ணெய், கனரக இயந்திரங்கள், சுரங்கங்கள், காடு, மலை, காற்று இவற்றை யெல்லாம் ஆள்பவரும் இவர்தான்.

நம்பிக்கையே வாழ்வின் சக்தி என்பதை உணர்த்துபவரும் இவர்தான். பிறர் நம்மை எள்ளி நகையாடித் தூற்றும்போதும், பொறுமையாக இருக்கும் குணத்தைத் தருபவரும் சனி பகவானே. அதேபோல், ஒருவரது ஆயுள் பலத்துக்கும் இவரே காரணம்.
பறித்தல், பரிதவிக்கவைத்தல், பாதுகாத்துப் பல மடங்காக்கித் தருதல்தான் இவரது வேலை.

சனி பகவான், விரயச்சனி, ஜென்மச்சனி, பாதச்சனி, கண்டகச்சனி, அர்த்தாஷ்டமச் சனி, அஷ்டமத்துச்சனி, பாதகச் சனி, மங்குசனி, பொங்குசனி, தங்குசனி, மரணச்சனி எனப் பல வடிவங்களில் நம்மைத் தாக்கி, பின்பு தூக்கி நிறுத்துபவர்.

பக்தியோ, முக்தியோ அடைய வேண்டுமானால், முதலில் மனம் பக்குவப்பட வேண்டும். அந்த மனப் பக்குவத்தைத்தான் மேற்சொன்ன தனது காலத்தில் இவர் நமக்குத் தருகிறார்.

ஆணவம் - அகங்காரத்தை அகற்றி, `நீ என்னதான் முயற்சிகள் செய்தாலும், உன்னால் எதுவும் செய்ய முடியாது. படைத்தவன் ஒருவன் இருக்கிறான். அவன் பாதம் பணிந்து நில்' என நம் ஞானக் கண்ணைத் திறந்து வைத்துப் புது மனிதனாக்குவார். மாயைகளிலிருந்து நம்மை விரட்டி, வெளியேற்றிக் கொண்டு வந்து, பின்னர் இழந்த சொத்து, சுகங்களை எல்லாம் நம்மிடமே தந்துவிட்டுச்செல்வார்.

வான சாஸ்திரப்படி சனி

சனி, பெரிய கிரகம். இதன் உட்கருவே 1,20,536 கி.மீ பரந்து, விரிந்து கிடக்கிறது. இதில் முழுமையாகப் பல்வேறு வகை யான வாயுக்கள் அடங்கியுள்ளன.  சனிக்கு 49-க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் உள்ளன. அவற்றில் டைட்டான், கேலிப்ஸோ, அட்லஸ், மிமிஸ், ஜானுஸ் ஆகியன சக்தி வாய்ந்தவை. சனி பகவான், ரோமானியர்களால் பல காலமாக வணங்கப்பட்டுவருகிறார்.

முப்பது ஆண்டுகள்...

சனி பகவான், ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடகாலம் எடுத்துக்கொள்கிறார். எனவே, இவர் 12 ராசிகளையும் கடக்க 30 வருடங்களாகின்றன. அதனால் தான் முப்பது ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்தாருமில்லை, வீழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். சிலர், இளம் வயதில் நன்கு செழிப்பாக வாழ்ந்து, பின்னர் 31-ம் வயதிலிருந்து அல்லல்படுவர். சிலர் பிறந்ததிலிருந்து அல்லல் பட்டு 31-ம் வயதுக்குப் பிறகு சிறப்பாக வாழ்வர். இதற்கெல்லாம் காரணம் சனிபகவான்தான்.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மொத்தத்தில், நம்முடைய பாவக்கணக்குகளைத் தீர்த்து நல்லதே நடக்க அருள்புரிபவர் சனிபகவான்.

வழிபாட்டில் வலிமை வாய்ந்தது தீப வழிபாடாகும். சனியின் தானியம் எள். எள் தீபம் ஏற்றினால் முன்னோர்கள் செய்த பாவங்கள், தவறுகள் எல்லாம் உடனே நீங்கும். இந்தப் பிறப்பை நாம் எடுத்திருக்கிறோமே இது ஏழேழு பிறப்பா, அல்லது எண்பதாவது பிறப்பா! இதற்குமுன் நாயா, நரியா, கோழியா, கொக்கா... நாம் என்னவாக இருந்தோம் என்பது நமக்குத் தெரியாது அல்லவா?

ஆனால், பல பிறப்பு எடுத்து இப்போது மானிடப் பிறப்பெடுத்து வந்துள்ளோம். அதனால் தான் ஜாதகம் கணிக்கும்போது இருப்பு திசை என்று ஒன்றைக் கணக்கிடுகிறோம். அதாவது, கர்ப்பத்தில் சென்றதுபோக மீதியிருக்கும் திசை, வருடம், மாதம், நாள் எனக் குறிக்கிறோம். இதிலிருந்தே தெரிகிறதா... நாம் ஏற்கெனவே பல பிறப்புகள் எடுத்திருக்கிறோம் என்பது.  இப்படிப் பல பிறவிகளில் நாம்செய்த பாவங்களிலிருந்து இந்த எள் தீபம் நம்மைக் காக்கும். அதேபோல் நீல மலர், ஊமத்தம் பூ, வன்னி இலை, கொன்றை மலர், தும்பைப் பூ போன்றவற்றால் சனீஸ்வர பகவானை வழிபட்டால், நமக்கு நன்மைகள் உண்டாகும்.

இனி, பன்னிரு ராசிகளுக்கும் உரிய சனிப்  பெயர்ச்சி பரிகாரத் தலங்களை அறிவோம்.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

சனிப் பெயர்ச்சி பலன்கள்...வீடியோ வடிவில் காண ஒவ்வொரு ராசிக்கும் உரிய பக்கங்களில் உள்ள QRCODE - ஐ பயன்படுத்தவும்.

மேஷம்

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவபெருமாள்

சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீபெரும்புதூர். ஸ்ரீராமானுஜர் அவதரித்த திருத்தலம்.

திருக்கயிலாயத்தில் சிவனார் மெய்ம்மறந்து நடனமாடும் போது, அங்கிருந்த பூதகணங்கள் சற்றே ஏளனமாகச் சிரித்தனவாம்! இதில் கோபமுற்ற சிவனார், பூலோகத்தில் இருக்கும்படி பூத கணங்களைச் சாபமிட்டார். வேதனையுடன் ஸ்ரீபிரம்மாவைச் சந்தித்தன பூதகணங்கள். ‘ஸ்ரீமந் நாராயணரைக் கடும் தவம் இருந்து பிரார்த்தியுங்கள்; சாப விமோசனம் கிடைக்கும்’ என அருளினார் பிரம்மா.

அதன்படி, திருமாலை நோக்கி பூதகணங்கள் தவம் இருக்க... ஸ்ரீஆதிகேசவ பெருமாளாகத் காட்சி தந்து அருள்பாலித்தார் திருமால். அத்துடன் அனந்தனை,  அதாவது பாம்பைக் கொண்டு, அங்கே திருக்குளம் ஒன்றை உருவாக்கினார். அதில் பூதகணங்கள் நீராடியதும் சாப விமோசனம் பெற்றன.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

பூதகணங்கள் தவமிருந்ததால் அது பூதபுரி எனப்பட்டு, தற்போது ஸ்ரீபெரும்புதூர் எனப் படுவதாகச் சொல்கிறது ஸ்தல புராணம் இங்கே, ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார் ஸ்ரீஆதிகேசவ பெருமாள்.

ஸ்ரீராமர், ஸ்ரீவேணுகோபாலன், ஸ்ரீஆளவந்தார், ஸ்ரீதிருக் கச்சி நம்பி ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. தாயாரின் திருநாமம் - ஸ்ரீயதிராஜநாத வல்லித் தாயார்.

இங்கே சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீராமானுஜரை வணங்கினால், சகல பாவங்களும் சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்! 

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

ஸ்ரீராமானுஜரை வணங்கி ஒரு விளக்கு ஏற்றி வழிபட்டால் மன அமைதி கிட்டும்; மூன்று தீபங்கள் ஏற்றினால், கல்வியிலும் ஞானத்திலும் சிறக்கலாம்; ஒன்பது தீபங்கள் ஏற்றி வழிபட்டால், கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ரிஷபம்

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!பரிக்கல் ஸ்ரீநரசிம்மர்

விழுப்புரத்துக்குத் தெற்கே சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பரிக்கல். ஒரே நேர்க்கோட்டில் அமைந்த மூன்று நரசிம்ம திருத்தலங்களில் ஒன்று இது. மற்றவை: சிங்ககிரி, பூவரசங்குப்பம்.

ஸ்ரீநரசிம்மருக்காக வசந்த ராஜன் என்ற மன்னன் ஒருவனால் ஆரம்பிக்கப்பட்ட கோயில் திருப்பணி, பரிகலாசுரனால் தடைப்பட்டது. அரசன், தன் குருநாதரான வாமதேவ முனிவரை அணுகினான்.

வேறோர் இடத்தில் கோயில் கட்டுமாறு அறிவுறுத்திய வாம தேவர், அதற்காக மூன்று நாள்கள் இரவும் பகலும் இடையறாது வேள்வி நடத்துமாறும் மன்ன னைப் பணித்தார். அதன்படியே வேள்வி தொடங்கியது. அதையறிந்து ஆவேசத்துடன் வந்த அசுரன், வேள்விச் சாலையைச் சிதறடித்தான். மன்னனைத் தேடினான்.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

வசந்தராஜனோ, குரு தேவரின் அறிவுரைப்படி புதரில் மறைந்திருந்து, மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருந்தான். அசுரன், புதரை விலக்கி மன்ன னைத் தாக்கினான்; கோடரியால் வசந்தராஜனின் தலையைப் பிளந்தான்.

முன்பு, தூணைப் பிளந்து வெளியேறி இரண்யனை வதைத்த நரசிம்மர், இப்போது அசுரனால் பிளக்கப்பட்ட வசந்தராஜனின் தலையில் இருந்து தோன்றி, பரிகலாசுரனை வதைத்தார். பிறகு, மன்னனை உயிர்ப்பித்து, ஸ்ரீலட்சுமி நரசிம்மராகக் காட்சி தந்தார்.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

இங்ஙனம் நரசிம்மர், பரிகலாசுரனை வதைத்ததால் இந்தத் தலம் பரிகலாபுரம் எனப்பட்டு, பிறகு பரிக்கல் என்று மருவியதாம். இந்தத் தலத்துக்குச் சென்று வந்து ஸ்ரீநரசிம்மரை வழிபடால், கடன்களும் நோய்களும் தீரும்; எதிரிகளால் ஏற்படும் ஆபத்துகள் விலகும்.

ரிஷப ராசிக்காரர்கள் ஒருமுறை பரிக்கல் நாயகனைத் தரிசித்து மனதார வழிபட்டு வாருங்கள்; தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும்.

மிதுனம்

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!காரமடை  - இருளர்பதி ஸ்ரீசுயம்பு பெருமாள்

மிதுன ராசிக்காரர்கள் சனிப் பெயர்ச்சியையொட்டி, கோவை மாவட்டம், காரமடை அருகே இருக்கும் இருளர்பதி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் சுயம்பு பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டால், நல்ல பலன்களைப் பெறலாம்.

இந்தப் பகுதியில் வசித்த  மக்களுக்குக் கால்நடை வளர்ப்பே முக்கியத் தொழில். அவர்களில் ஒருவர், தனது பசுக்களில் ஒன்று சில நாள்களாகப் பால் தராமல் இருப்பதை அறிந்தார். ஒருநாள் பசுவைப் பின்தொடர்ந்தார். அது , வனத்துக்குள் ஓரிடத்தில் இருந்த சுயம்பு மூர்த்தியின்மீது பால் சொரிவதைக் கண்டான். ஆத்திரம் அடைந்தவன் பசுவை அடித்ததோடு, சுயம்புவையும் அகற்ற முற்பட்டான். மறுகணமே அவனுக்குப் பார்வை பறிபோனது.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

விஷயம் அறிந்த பெரியவர் ஒருவர், எல்லோரையும் அழைத் துக்கொண்டு அந்த இடத்துக்கு வந்து சுயம்பு மூர்த்தியிடம் மன்னிப்பு வேண்டினார்.

விளைவு, அங்கே சுயம்புவாய் வெளிப்பட்டிருந்த பெருமாளின் திவ்விய தரிசனம் கிடைத்தது. பின்னர், பெருமாளின் திருவுளப்படி எளிய கோயில் கட்டப்பட்டு வழிபாடும் துவங்கியது. அன்றிலிருந்து தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வரம்வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீசுயம்பு பெருமாள்.

இங்குள்ள பெருமாள், பக்தர்கள் எண்ணியதை எண்ணியபடி முடித்துத் தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

வேண்டுதலின் பொருட்டு  இங்குவரும் பக்தர்கள் பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி, நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள்.  தமிழ் மாதத்தின் 3-வது சனிக்கிழமை விசேஷம். மிதுன ராசி அன்பர்கள், ஒருமுறை இருளர்பதி சுயம்பு பெருமாளைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள். வாழ்வில் இருள் நீங்கி ஒளிபிறக்கும்.

கடகம்

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!ஸ்ரீபொங்கு சனி பகவான்

திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ் வரர் ஆலயம்.  இது, பொங்கு சனீஸ்வர க்ஷேத்திரம் எனப் போற்றப்படுகிறது.

சனி பகவான் தன் சாபம் நீங்குவதற்காக, இந்தத் தலத்துக்கு வந்து, இங்கேயுள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, சிவ பூஜை செய்தார். அவரின் தவத்தில் மகிழ்ந்த சிவனார், தேவியுடன் அவருக்குத் திருக்காட்சி தந்தார். அப்போது, `‘தனம் மற்றும் தானியங்களுக்கு அதிபதியாக இருந்து அனைவருக்கும் அடியேன் அருளவேண்டும். குபேர சம்பத்துகளைத் தருபவனாக, ஆயுளுக்கும் ஆரோக்கியத் துக்கும் அதிபதியாக இருந்து, உயிர்களுக்கு வரமளிக்க வேண் டும்’' எனச் சிவனாரிடம் வரம் கேட்டார் சனி பகவான். ‘அப்படியே ஆகட்டும்’ என வரத் தைத் தந்தருளினார் சிவனார்.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

அன்று முதல், திருக்கொள்ளிக் காடு தலத்துக்கு வந்து, தன்னைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு, சகல செல்வங்களையும் நீண்ட ஆயுளையும் வழங்கி வருகிறார் ஸ்ரீசனீஸ்வரர்.

இங்கே, பொங்கு சனீஸ்வரராக, கையில் கலப்பையுடன் திருக்காட்சி தந்தருள்கிறார் சனி பகவான். எனவே, இவரை வணங்கிவிட்டு, விதைப்பது அனைத்துமே பொன்னென விளைந்து, செல்வத்தைத் தரும். வீட்டில், சகல சௌபாக்கியங்களும் ஐஸ்வரியங்களும் சேரும் என்பது ஐதீகம். மேலும் இவர், ஸ்ரீமகாலட்சுமிக்கான இடத்தில் சந்நிதி கொண்டிருப்பதால், பக்தர்களுக்குக் குபேர சம்பத்துக்களையும் யோகத்தையும் அருள்வார் என்பது ஐதீகம்.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

இங்கேயுள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீபஞ்சினும் மெல்லடியாள்  சமேத ஸ்ரீஅக்னீஸ் வரரையும், ஸ்ரீசனி பகவானையும் வழிபட்டு வாருங்கள்; இந்தச் சனிப்பெயர்ச்சி காலம் என்றில்லை இந்த ஜென்மம் முழுக்கவே சீரும் சிறப்புமாக, சகல செல்வங்களும் பெற்று, பெரு வாழ்வு வாழலாம்!

சிம்மம்

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!நாமக்கல் தரிசனம்!

சனிப்பெயர்ச்சியை ஒட்டி சிம்ம ராசிக்காரர்கள் தரிசிக்க வெண்டிய தலம் நாமக்கல்.

சஞ்சீவி மூலிகை எடுக்கச் சென்ற அனுமன், வழியில் கண்டகி நதிதீரத்தில் அற்புத மான சாளக்கிராம கல் ஒன்றைக் கண்டு, எடுத்துப் பத்திரப்படுத்திக்கொண்டார். அவர் திரும்பிவரும் வழியில், பூமியில் கமலாலயக் குளத்தைக் கண்டு தரையிறங்கி, சற்றே களைப்பாறினார். அது, திருமகளின் தபோவனமாக இருந்தது. சாளக்கிராமத்தைக் கீழே வைத்துவிட்டு, எம்பெருமானைத் தியானித்துத் தவம்செய்யும் தாயாரை வழிபடச் சென்றார் அனுமன். அவர் திரும்பி வருவதற்குள், சாளக்கிராமம் பெரும் மலையாக வளர்ந்துவிட்டதாம்!

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

இன்னொரு திருக்கதையும் உண்டு. களைப்பாறத் தரை இறங்கிய அனுமன், அங்கு திருமகள் வழிபடுவதைக் கண்டார். தேவியை வணங்கி தவத்துக்கான காரணம் கேட்க, திருமாலை ஸ்ரீநரசிம்ம வடிவில் தரிசிக்க வேண்டி தவமிருப்ப தாகச் சொன்னார் அன்னை.

பிறகு, சாளக்கிராமத்தை அவரிடம் தந்த அனுமன், தான் நீராடிவிட்டு வந்து பெற்றுக் கொள் வதாகச் சொன்னார். ‘குறிப்பிட்ட நேரத்துக்குள் வராவிட்டால் சாளக்கிராமத்தை தரையில் வைத்துவிடுவேன்’ எனும் நிபந்தனையுடன் அதைப் பெற்றுக் கொண்டார் லட்சுமிதேவி. அனுமன் வரத் தாமதமாகவே, லட்சுமி தேவி சாளக்கிராமத்த்தை தரையில் வைத்ததா கவும், அது பெரும் மலையாக வளர, அந்த மலையின் மீது ஸ்ரீநரசிம்மர் தோன்றி திருமகளுக்கு அருளியதாகவும் சொல்வர்.  அனுமன், அருள் வேண்டி எதிர்நோக்கி இருப்பது, ஸ்ரீயோக நரசிம்மரின் திருக்கோயிலை!  இந்த நரசிம்மரின் திருமார்பில் திருமகள் உறைந் திருப்பது விசேஷம்! 

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

எதிர்காலம் சிறக்க, சனிக் கிழமைகளில் நாமக்கல் அனுமனையும், ஸ்ரீநரசிம்மரையும் வழிபட்டு வரம்பெற்று வரலாம்.

கன்னி

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!தண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர்

தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்துக்கு அருகில் உள்ளது தண்டந்தோட்டம். இங்கே, அரசலாற்றங்கரையில் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு நடனபுரீஸ்வரர்.

முப்பத்து முக்கோடி தேவர் களுக்காகவும் முனிவர்களுக் காகவும் சிவனார் திருநடனம் புரிந்தார் அல்லவா? அப்போது, அவர் காலில் இருந்த சலங்கை யின் மணிகள், தெறித்து எங்கெங்கோ விழுந்தனவாம். அப்படி மணிகள் சிதறிய இடங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டன. அவற்றில், நடார் எனும் திருத்தலத்தில் ஸ்ரீமணிகண்டேஸ்வரர் என்றும், தாண்டவர்தோட்டம் எனும் கிராமத்தில் திருநடனபுரீஸ்வரர் என்கிற திருநாமத்துடனும் சிவ பெருமான் அருள்பாலிக்கிறார் அகத்தியருக்குச் சிவனார் காட்சி தந்தபோது, ‘இந்தத் தலத்துக்கு வரும் அன்பர்களுக்குத் திருமணத்தடை முதலான சகல தடைகளும் நீங்கப்பெற்று, சுபிட்சமாக வாழ வேண்டும். அதேபோல், இங்கு வந்து வழிபட்டால், திருக்கயிலாயத் துக்கு வந்து தங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்க வேண்டும்’ என வரம் கேட்க... ‘அப்படியே ஆகட்டும்’ என அருளினார் சிவனார். எனவே, கயிலைக்கு இணையான தலம் என்றும் போற்றுகிறது ஸ்தல புராணம்.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

அம்பாளின் திருநாமம்  ஸ்ரீசிவகாம சுந்தரி. இங்கு, 12 ராசி மண்டலங்களுக்கு மேலே பீடமிட்டு அமர்ந்திருக்கிறார் ஸ்ரீகுரு தட்சிணா மூர்த்தி. எனவே, இவரை ராசி மண்டல குரு எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்கினால், 12 ராசிக்காரர்களின் சகல தோஷங்களையும் போக்கியருள்வார் என்பது ஐதீகம்.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

கன்னிராசிக்காரர்கள் மட்டுமின்றி அனைத்து ராசிக்காரர்களும் இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டு வரம்பெற்று வரலாம்.

துலாம்

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!ஐவர் வழிபட்ட தலம்!

சிவபெருமானுடைய சிறப்புமிக்க ஆயிரத்தெட்டுத் தலங்களில், நான்கு தலங்கள் மிக முக்கியமானவை; அவற்றுள், விருத்தாசலமும் ஒன்று (காசி, சிதம்பரம், காளஹஸ்தி ஆகியவை ஏனைய மூன்று).

இந்தத் தலத்து இறைவனைத் தரிசித்துப் பாடாமல் சென்று விட்டாராம் சுந்தரர்.  உடனே, முருகப்பெருமான்மூலம் அருளாடல் நிகழ்த்தி, சுந்தரரை இங்கு வரவழைத்து, தன்னைப் போற்றிப் பாடவைத்துக் கேட்டு மகிழ்ந்தாராம் இத்தலத்தின் இறைவனான பழைமலைநாதர்.
விருத்தகிரீஸ்வரர், முதுகுன்றீசர் ஆகிய திருப்பெயர் களும் இவருக்கு உண்டு. கல்வெட்டுகளில், ‘நெற்குப்பைத் திருமுதுகுன்றம் உடையார்’ என்று குறிக்கப்பெறுகிறார்.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

சுந்தரர் வேண்டிக்கொண்ட தற்கு இணங்க இறைவன் பொற்காசுகள் வழங்கியதும் இவர்தான். அந்தக் காசுகளைக் கணக்கிட்டுச் சொன்ன ஆழத்துப் பிள்ளையார் அருள்பாலிப்பதும் இந்தத் தலத்தில்தான். 

28 ஆகமங்களையும், 28 சிவலிங்கங்களாக உருவகப் படுத்தி, முருகப்பெருமான் வழிபட்ட திருத்தலமும் இதுதான்.

அதுமட்டுமா? திருமால், பிரம்மா, இந்திரன், குபேரன் மற்றும் குபேரனின் தங்கை ஆகிய ஐந்து தேவர்களும், சுக்கிரன், யாக்ஞ வல்கியர், அகத்தியர், அத்திரி, காசியபர் ஆகிய ஐந்து ரிஷிகளும் இங்குவந்து சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் இது.

மகிமைகள் மிகுந்த இந்தத் திருத் தலத்துக்குச் சென்று,
‘மத்தா வரை நிறுவிக்கடல் கடைந்த அவ்விடமுண்ட
தொத்தார் தருமணி நீண்முடிச் சுடர் வண்ணனது இடமாம்
கொத்தார் மலர் குளிர் சந்தகில் ஒளிர் குங்குமம்கொண்டு
முத்தாறு வந்தடி வீழ் தரு முதுகுன்று அடைவோமே!’

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

என்று சம்பந்தர் போற்றி வணங்கிய பழைமலை நாதரை வணங்கி வழிபட்டு வந்தால் வாழ்க்கை செழிக்கும்.

விருச்சிகம்

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!திருக்கடவூர் தரிசனம்!

பக்த மார்க்கண்டேயனும் அபிராமிப்பட்டரும் அருள் பெற்ற தலம், தேடிவந்து வழிபடும் பக்தர்களுக்கு ஆயுள்பலம் அருளும் திருத்தலம் திருக்கடவூர் என்பது நாமறிந்ததே.

மட்டுமின்றி, தேவர்கள் அமிர்தம் பருகுவதற்கு ஏற்ற புனித இடமாகச் சிவபெருமானால் அடையாளம் காட்டப்பட்ட தலமும் இதுதான் என்கின்றன ஞானநூல்கள். இந்தத் தலத்துக்குவந்த தேவர்கள், அமிர்த கலசத்தை ஓர் இடத்தில் வைத்துவிட்டு, சிவபெருமானைத் தியானித்தபடி புனித நீராடச் சென்றனர். திரும்பிவந்து பார்த்தபோது, தேவர்கள் வைத்த அமிர்தகலசம் போலவே எண்ணற்ற வில்வ கலசங்கள்தான் அங்கே காணப்பட்டன. அமிர்தகலசம் அங்கே இல்லை. பாற்கடலில் தோன்றிய அமிர்தகலசத்தை எடுப்பதற்கு முன்பாகத் தேவர்கள் விநாயகரை வழிபட மறந்ததால், விநாயகர்தான் அமிர்தகலசத்தை எடுத்து மறைத்து வைத்துவிட்டாராம்!

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

அதனால்தான் இங்கு விநாய கருக்குக் கள்ளவாரண விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. அதனாலேயே இங்குள்ள விநாயகர், தும்பிக்கையில் அமிர்த கலசத்துடன் அருள்கிறாராம்.

தேவர்கள் விநாயகரை வழிபட்ட பிறகு, அமிர்தகலசத்தைப் பெற்றனர். அமிர்தகலசத்தில் இருந்த அமிர்தத்தைத் தேவர்களுக்குப் பரிமாறுவதற்குமுன், மஹாவிஷ்ணு அமிர்தகடேசரை பூஜை செய்ய நினைத்தார். சிவபெருமானை பூஜிக்க வேண்டுமானால் அம்பிகையும் உடன் இருக்க வேண்டுமே!  மகாவிஷ்ணு, தான் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி வைத்துத் தியானிக்கத் தொடங்க, அந்த ஆபரணங்களில் இருந்து தோன்றியவள்தான் அன்னை அபிராமி.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

ஆக, அம்பிகைக்கு அண்ணனான மகாவிஷ்ணு அவளுக்கு அன்னையுமான தலம் இது. இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டு வந்தால், அமிர்த மயமான வாழ்வைப் பெறலாம்.

தனுசு

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!குச்சனூர் சனி பகவான்

தனுசு ராசிக்காரர்கள் தரிசிக்கவேண்டிய திருத்தலம் குச்சனூர். தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது குச்சனூர்.

தன் தந்தைக்கு ஏற்பட்ட சனிக்கிரக தோஷ பாதிப்புகள் விலக வேண்டி,  சந்திரவதனன் என்ற பக்தனால் வழிபடப் பட்டவர், குச்சனூர் சனி பகவான்.  சந்திரவதனன் சுயம்பு வடிவ சனீஸ்வரப் பகவானுக்குக் குச்சுப் புல்லினால் கோயில் கட்டியதால், இவ்வூருக்குக் குச்சனூர் என்ற பெயர் வந்த தாகச் சொல்வர்.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

சந்திரவதனின் தந்தை சனி தோஷத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் மீது அதீத அன்புகொண்ட சந்திரவதனன், சனி பகவானின் திருவருளைப் பெற்று தந்தையின் இன்னலைத் தீர்க்க எண்ணினான். அதன்படி, சுரபி நதி தீரத்துக்கு வந்தவன், சனி பகவானை வழிபட்டான். அவன் முன் காட்சியளித்த  சனிபகவானிடம் தன் தந்தைக்கு ஏற்பட்டிருக்கும் ஏழரைச் சனி பாதிப்புகள் நீங்க வேண்டும் என வேண்டிக்கொண்டான். 

சனிபகவானும், அவன் தந்தைக் கான ஏழரை வருட பாதிப்புகளை ஏழரை நாழிகைக்குள் அடங்கும்படி அருளினாராம்.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

இந்த ஆலயம் சுரபி நதிக் கரையில் அமைந்துள்ளது. பெரியாறும் சுருளியாறும் இணைந்து உருவானது தான் சுரபி ஆறு. தமிழகத்தில் சனி பகவானுக்கான தனிக்கோயில் இதுமட்டுமே என்பது சிறப்பு. சனிக் கிழமைகளில் இங்கே விசேஷம். சனிப்பெயர்ச்சி விழாவும் சிறப்புற நடைபெறுகிறது. இக்கோயிலில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனி பகவானைக் கருங்குவளை மலர்களாலும் வன்னி இலையாலும் அர்ச்சித்து வழிபடலாம். மேலும், அவரின் வாகனமாக உள்ள காகத்தை வணங்கி உணவிட்டு வழிபட வேண் டும். எள் தீபமிட்டு, கறுப்பு வஸ்திரம் சாத்தி, எள்ளு சாதம் பிரசாதம் வைத்துச் சனிபகவானின் ஆசிர்வாதத்தைப் பெறலாம்.

மகரம்

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!கோலியனூர் வாலீஸ்வரர்!

விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் பிரதான சாலையில், விழுப்புரத் தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோலியனூர் திருத்தலம்.பாண்டிச்சேரியில் இருந்து சுமார் முப்பது கி.மீ. தொலைவு.

இந்தக் கோயிலில் அருளும் ஈஸ்வரன் பெயர்- ஸ்ரீவாலீஸ்வரர்.  கல்வெட்டில் திருவாலீசுரமுடைய நாயனார் என்ற குறிப்பு உண்டு. அம்பாளின் திருநாமம் ஸ்ரீப்ரஹன்நாயகி (தமிழில் பெரியநாயகி). பெயருக்கேற்ப வரங்கள் வாரி அருள்வதில் மிகப்பெரியவள் இந்த அம்பிகை!
வானரத் தலைவனான வாலி, சிறந்த சிவபக்தன். இந்திரனின் மகன். கிஷ்கிந்தையின் அரசன். சுக்ரீவனின் அண்ணன். எட்டுத் திசைகளிலும் உள்ள கடல்களில் புனித நீராடி, ஆயிரத்தெட்டு சிவலிங்கங்களுக்கு பூஜை செய்து, அதன் பிறகே தனது நித்தியப் பணிகளை மேற்கொள்வது வாலியின் வழக்கம்.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

இத்தகைய சிறப்புகள் கொண்ட வாலி, இந்தத் தலத்தின் சிவனாரை வணங்கி வழிபட்டுப் பெருமை பெற்றானாம். அவ்வாறு வாலி வழிபட்டதால், ஈஸ்வரரும் வாலீஸ்வரர் ஆனார். இதுபோல், வாலி வெவ்வேறு தலங்களில் வழிபட்ட லிங்க சொரூபங்கள், வாலீஸ்வரர் என்ற பெயராலேயே இன்றைக்கும் அழைக்கப்படுகின்றன. இந்த வாலீஸ் வரருக்கு ஒரு சிறப்பு உண்டு. இவர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இது, அபூர்வமான அமைப்பு என்பார்கள்.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

திருவாதிரை, சோமாவார தினங்கள், பிரதோஷம் போன்ற புண்ணிய தினங்களில்  இந்தத் திருக்கோயிலுக்குச் சென்று அருள்மிகு வாலீஸ்வரரை வழிபட்டு வர, தடைகள் யாவும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். அதேபோல், அம்பிகைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

கும்பம்

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!கல்லிடைக்குறிச்சி ஸ்ரீஆதிவராகர்

திருநெல்வேலியில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில், அம்பாசமுத்திரம் அருகில் உள்ளது கல்லிடைக்குறிச்சி. இங்கே, குபேரன் வழிபட்ட அந்த ஆதிவராகர், மிக அற்புதமாகக் கோயில்கொண்டிருக்கிறார்.

இரண்யாக்ஷனை வதம் செய்து பூமியைக் காப்பாற்றிய ஸ்ரீவராகமூர்த்தி மேலுலகம் கிளம்ப யத்தனித்தபோது, தன்னிடத்திலேயே தங்கி, உலக மக்கள் செழிப்புற அருள் புரிய வேண்டும் என்று பூமாதேவி வேண்டிக்கொண்டாளாம். அதன்படி, ஸ்ரீஆதிவராகர் கோயில்கொண்ட தலம் இது என்கின்றன ஞானநூல்கள்.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

அதேபோல், இந்தத் தலத்தின் அருகிலுள்ள ஸ்ரீவராக தீர்த்தத்தில் கண்டெடுத்து, வீரசேன மகா ராஜாவால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீஆதிவராகரின் விக்கிரகத்தை, குபேரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் ஒரு தகவல் உண்டு. ஆகவே, கல்லிடைக்குறிச்சியில் கோயில் கொண்டிருக்கும் ஆதி வராகரைத் தரிசித்து வழிபட, குபேர சம்பத்துகள் கிடைக்கும்!

திருக்கோயிலின் அர்த்த மண்டபத் தில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார், உற்ஸவர் ஸ்ரீலட்சுமிபதி. கல்யாண வரம் வேண்டும் பக்தர்கள் இவருக்குத் திருமஞ்சனம் செய்விப்பதாகப் பிரார்த்தித்துக்கொள்கிறார்கள். அவ்வாறு வழிபடும் பக்தர்களுக்கு விரைவில் மணப்பேறு வாய்க்குமாம்.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

கருவறையில்... மேலிரு திருக் கரங்களில் சங்கு - சக்கரம் திகழ, கீழ் இடக்கரத்தால் ஸ்ரீபூதேவியை அணைத்தபடி, கீழ்வலக்கரத்தால் அபயம் அருளியபடி அருள்கிறார் ஸ்ரீஆதிவராகர்! நிலம் தொடர்பான பிரச்னைகள் தீரவும், புதிதாக வீடு - மனை வாங்க விரும்பியும், தடைகள் நீங்கி விரைவில் கல்யா ணம் நடைபெறவும் ஸ்ரீஆதிவராகரை மனமுருகி வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள்.

மீனம்

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!தென்காளத்தி தரிசனம்!

தேனி மாவட்டத்தில், தேனியில் இருந்து கம்பம் செல் லும் வழியில், சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தம பாளையம் என்னும் ஊரில் உள்ளது, தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் ஸ்ரீகாளத்தீஸ்வரர் கோயில்.

இங்கே, ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீகாளத்தி நாதர்; அம்பாள் - ஸ்ரீஞானாம்பிகை. புராதனமான இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டால், ராகு-கேது கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

இந்த ஆலயத்தின் சிறப்பம்சங் களில் ஒன்று குபேர தரிசனம். ஆம்! பொன்னையும் பொருளையும் அள்ளிக்கொடுக்கும் குபேரனும், இந்த ஆலயத்தில் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார்! குபேரனுடன் ஸ்ரீலட்சுமி தேவியும் காட்சி தந்தருள்கிறார்.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

புதன் மற்றும் வெள்ளிக்கிழமை களில் இந்தக் கோயிலுக்குச் சென்று  ஸ்வாமி அம்பாளைத் தரிசிப்பதோடு, குபேரரையும் வழிபடுவதால் வீட்டில் செல்வ கடாட்சம் பெருகும்; சகல ஐஸ்வரியங்களுடன் வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.

அட்சய திருதியை நாளில், குபேர னின் திருவடியில், பொன் அல்லது ஒரு ரூபாய் நாணயம் வைத்து, நெய் தீபமேற்றி வழிபட்டு வணங்கினால், ஆயுள் முழுவதும் காசுக்குப் பஞ்சமின்றி, சந்தோஷத்துடன் வாழலாம் என்கின்றனர், தேனி மாவட்டத்து மக்கள்.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!

மீன ராசிக்காரர்களுக்கு இப்போது தொழில் ஸ்தானமான 10-ம் இடத்துக்கு வருகிறார் சனி பகவான். மூன்று ஆண்டு காலம் இந்த இடத்தில் இருந்து நல்ல நல்ல பலன்களைத் தரப்போகிறார். புதிதாகத் தொழில் தொடங்க வேண்டுமென நினைப்பவர்கள் இப்போது தொழில் தொடங்கலாம். அத்துடன் தொழிலில் லாபம் பெருகவும் பொருளாதாரம் சிறக்கவும் தென்காளத்தி நாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு; சிவனருளோடு குபேரனின் திருவருளையும் பெற்று வரலாம்.

சனிப்பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism