Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

டிசம்பர் 19 முதல் ஜனவரி 2 -ம் தேதி வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

டிசம்பர் 19 முதல் ஜனவரி 2 -ம் தேதி வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன்


மேஷம்

போராட்டங்களும் புரட்சிகரமான சிந்தனைகளும் உடைய நீங்கள், தன்னைப் போல் மற்றவர்களும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என நினைப்பீர்கள். இதுவரை அஷ்டமத்தில் நின்று திக்குத் திசையறியாது திண்டாட வைத்ததுடன், காரண காரியமே இல்லாமல், பிரச்னைகளில் சிக்க வைத்த சனிபகவான் இப்போது 9-ம் வீட்டில் அமர்வதால், உங்கள் வாழ்வு ஒளிவெள்ளத்தால் பிரகாசிக்கும்.

பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள்.

சுபநிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். சிறுக சிறுகச் சேமித்து ஒரு வீடோ, மனையோ வாங்கிவிட வேண்டுமென்று ஆசைப் பட்டீர்களே, இப்போது நிறைவேறும்! கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை முறியடிப்பீர்கள். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்ல சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையினரே, எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தேடி வரும்.

புதிய பாதையில் பயணித்து சாதிக்கும் நேரமிது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

ராசிபலன்வெள்ளையுள்ளமும் வெளிப் படையான பேச்சும் கொண்ட நீங்கள், யார் தயவிலும் வாழாமல், ‘தன் கையே தனக்கு உதவி’ என வாழ நினைப்பவர்கள். செவ்வாயும் புதனும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.

எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். பிள்ளைகளின் கூடாப்பழக்க வழக்கங்கள் விலகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். தெய்விக ஈடுபாடு அதிகரிக்கும். டி.வி., ஃபிரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள்.

சகோதரங்கள் மதிப்பார்கள்.  இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்திடுங்கள். யாருக்காகவும் ஜாமீன், சாட்சிக்கையொப்பமிட வேண்டாம். விலையுயர்ந்த நகைகள் வாங்குவீர்கள். வழக்கில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள், சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமையோடு  வேலையில் கவனம் செலுத்துங்கள்.  கலைத்துறையினருக்கு அவர்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தும் நேரம் விரைவில் கைகூடும்.

கடின உழைப்பால் இலக்கை எட்டும் காலமிது. 

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

மிதுனம்

ராசிபலன்‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்ற பழமொழியை அறிந்த நீங்கள், இங்கிதமான பேச்சால் மற்றவர்கள் மனதில் எளிதில் இடம் பிடிப்பவர்கள்.

குரு வலுவாக இருப்பதால், தடைப் பட்ட வேலைகள் விரைந்து முடியும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. புதியவர்களிடன் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. வழக்கு விஷயங்களில் கலந்தாலோசித்து முடிவுகளை எடுங்கள்.

செவ்வாய் 5 -ம் இடத்தில் நிற்பதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.  உடல் நலனில் அக்கறை செலுத்தவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத் தில் சக ஊழியர்களால் ஆதாயமடை வீர்கள். கலைத்துறையினர் களுக்கு மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங் களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

நிதானத்தால் வெற்றிபெறும் நேரமிது.

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

கடகம்

ராசிபலன்


தடைகளைக் கண்டு தளராமல், பீனிக்ஸ் பறவை போல ஓயாமல் போராடி உயிர்த்தெழும் குணம் கொண்ட நீங்கள், கடின உழைப்பாளிகள். இதுவரை 5-ம் இடத்தில் அமர்ந்து கொண்டு உங்களுக்குப் பல வகையிலும் சிரமங்களைத் தந்த சனிபகவான் இப்போது 6 -ம் இடத்தில் நுழைவதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். வருமானம் உயரும்.

பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். வழக்கு சாதகமாகும்.

சூரியன் 6-ம் இடத்தில் நிற்பதால் அரசு காரியங்கள் சுலபமாக முடியும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.  புதிய உடைகள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்களால் ஆதாயம் உண்டகும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கலைத்துறையினர்களின் கலைத்திறன் வளரும்.

நீண்டகாலக் கனவுகள் நனவாகும் வேளையிது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

சிம்மம்

ராசிபலன்தன்மானத்துக்கு முக்கியத்துவம் தரும் நீங்கள், நெருக்கடி நேரத்திலும் நெறி பிறழமாட்டீர்கள். உங்களின் யோகாதிபதி செவ்வாய் 3 -ம் இடத்தில் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், தன்னம்பிக்கை துளிர்விடும்.

துணிச்சலாகச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். உடன்பிறந் தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சனி 5 -ம் இடத்தில் நுழைவதால் தாயாரின் ஆரோக்கியம் சீராகும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்கவேண்டி வரும்.

உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு மகனை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், விலையுயர்ந்த மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி, லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய கடின உழைப்பை மூத்த அதிகாரி புரிந்துகொள்வார். கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்களின் நட்பு கிடைக்கும்.

யதார்த்தமான பேச்சால் முன்னேறும் தருணமிது.

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

கன்னி

ராசிபலன்


கற்பனைத் திறன் அதிகம் உள்ள நீங்கள், ஆகாயக் கோட்டை கட்டுவதில் வல்லவர்கள். ராகு லாப வீட்டில் வலுவாக இருப்பதால், சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

குருபகவான் 2 -ம் இடத்தில்  நிற்பதால், சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். பூர்வீகச் சொத்தை விற்று, புது நிலம், வீடு வாங்குவீர்கள்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் புத்துணர்ச்சி பெருகும். மனைவி வழியில் எதிர்பார்த்த  உதவிகள் கிடைக்கும். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கலைத் துறையினரின் திறமை வெளிப்படும்.

காரியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

துலாம்

ராசிபலன்நடுநிலை தவறாத நீங்கள், நியாயத்தின் பக்கம் எப்போதும் நிற்பீர்கள். சனி 3-ம் இடத்தில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். முதல் முயற்சியிலேயே காரியங்களையும் முடித்துக்காட்டுவீர்கள். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

அறிவுபூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். தைரியமாகவும் தன்னிச்சையாகவும் செயல்படத் தொடங்குவீர்கள். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். மகளுக்கு வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். மாதாமாதம் லோன் பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என்றெல்லாம் கலங்க வேண்டாம். அதற்கான வழிவகைகள் பிறக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு நீண்ட நாள் கனவு நனவாகும்.

தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றி பெறும் காலமிது.

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

விருச்சிகம்

ராசிபலன்உள்ளத்தில் அழுதாலும், உதட்டால் புன்னகைக்கும் நீங்கள், தன்னை எதிர்ப்பவர்களுக்கும் நல்லதே நினைப்பவர்கள். இதுவரை ஜென்மச் சனியாக இருந்து உங்களைப் பாடாய்ப்படுத்திய சனிபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி பாதச் சனியாக அமர்வதால், இனி உடல் ஆரோக்கியம்  பெறும். அழகு, இளமை கூடும். உற்சாகமாகப் பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள்.  எதையும் பொறுமையாகக் கையாளுங்கள்.

சுக்கிரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள்.

மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. நினைத்திருந்த டிசைனில் ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.  வியாபார ரீதியாக பிரபலங்களைச் சந்திப்பீர்கள். புதிய உத்திகளைக் கையாண்டு லாபத்தை அதிகரிப்பீர்கள்.  உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சகஊழியர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டு விலகும். கலைத்துறையினரே, மூத்த கலைஞர்களுடன் இணக்கமாக இருந்து பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

நாசூக்காகப் பேச வேண்டிய தருணமிது.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

தனுசு

ராசிபலன்எதிர்பார்த்தபோது கிடைக்காத வெற்றி எப்போது கிடைத்தாலும் தோல்விதான் என்பதை உணர்ந்த நீங்கள், எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால், வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் உயரும்.

குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்றுப் புதிய இடம் வாங்குவீர்கள். குரு வலுவாக இருப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் அடங்கும்.

ராசிக்குள் சூரியன் நிற்பதால் பெற்றோரால் டென்ஷன், அறுவை சிகிச்சை, அலைச்சல்கள் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். வழக்கை கவனமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பை மூத்த அதிகாரி புரிந்துகொண்டு உதவுவார். கலைத் துறையினருக்குப் புது வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும்.

தன் பலம் பலவீனம் உணர்ந்து செயல்படவேண்டிய வேளையிது.

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

மகரம்

ராசிபலன்


‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற கொள்கையுடைய நீங்கள், பாகுபாடு பார்க்காமல் பலரிடமும் பாசமாகப் பழகுவீர்கள். செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால், திட்டவட்டமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

யோகாதிபதிகளான புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர்களால் நன்மை உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும்.

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். சனி ராசிக்கு 12-ல் மறைந்து விரயச் சனியாக வருவதால், வீண் அலைக்கழிப் புகள் அதிகமாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். வேலையாட்களை மாற்ற வேண்டிவரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற, போராட வேண்டி வரும். கலைத் துறையினருக்கு இத்தனை நாளாக வரவேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும்.

தடைகளையும் தாண்டி முன்னேறும் வேளையிது.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

ராசிபலன்


கும்பம்

அருகிலிருப்பவர்களின் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப் படுத்தும் நீங்கள், யாருக்காகவும் தன் குறிக்கோளை மாற்றிக்கொள்ளாதவர். சனி லாப வீட்டில் வலுவாக அமர்வதால், தொட்ட காரியங்கள் துலங்கும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ராகு வலுவாக அமர்ந்திருப் பதால் திடீர் பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். கலைத்துறையினருக்குப் பெரிய வாய்ப்புகள் வரும்.

நினைத்ததை முடித்துக்காட்டும் நேரமிது.

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

மீனம்

ராசிபலன்வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்ததுதான் என்பதை உணர்ந்த நீங்கள், இழப்புகள், ஏமாற்றங்களைக் கண்டு என்றும் அஞ்சியதில்லை. சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்த்தவர்கள் நண்பர்களாவர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அரசியலில் செல்வாக்குக் கூடும். மூத்த சகோதரிக்குத் திருமணம் பேசி முடிப்பீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால்,  பணவரவு அதிகரிக்கும்.

எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்களால் மகிழ்ச்சியுண்டு. வீட்டை அழகுபடுத்து வீர்கள். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பு நிகழும். புதுச் சொத்து வாங்கு வீர்கள். பதிய முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். புதிய சலுகைகள் கிடைக்கும். கலைத்துறை யினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

திடீர் திருப்பங்கள் நிறைந்த தருணமிது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism