மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புத்தாண்டு பலன்கள் 2018

புத்தாண்டு பலன்கள் 2018
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தாண்டு பலன்கள் 2018

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

பல வழிகளில் பணம் வரும்!

புத்தாண்டு பலன்கள் 2018மேஷம்: நினைத்ததை முடிக்கும் நெஞ்சுரம் மிக்கவர்களே! உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சந்திரன் இருக்கும் வேளையில் புத்தாண்டு பிறக்கிறது.  கடுமையான கோடை வெயிலில் நடந்துவந்த உங்களுக்கு இந்தப் புத்தாண்டு குளிர்தரும் சோலைவனமாகத் திகழப்போகிறது. குடும்பத்தில் குதூகலம் நிலவும். பணம் பல வழிகளிலும் வரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை சேர்க்கும்விதமாகக் கல்வியில் சாதனை படைப்பார்கள். நீண்ட நாள்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.  வி.ஐ.பி-க்களின் தொடர்புகள் கிடைக்கும். சமுதாயத்தில் அந்தஸ்துமிக்க புதிய பதவிகள் உங்களைத் தேடிவரும். வியாபாரத்தில் இதுநாள்வரை இருந்த பிரச்னைகள் விலகி நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் தேடிவரும். இந்தப் புத்தாண்டு எல்லாவகையிலும் நற்பலன்களை அள்ளித்தரும்.

திறமைக்கான அங்கீகாரம் உண்டு!

புத்தாண்டு பலன்கள் 2018ரிஷபம்:
அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டுமே நம்பும் ரிஷப ராசிக்காரர்களே! உங்கள் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்கள் உழைப்புக்கும் திறமைக்கும் ஏற்ற அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். எவ்வளவு கடினமான வேலைகளையும் விவேகத்துடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இதுநாள்வரை உங்களைக் குறைத்து மதிப்பிட்டுவந்தவர்கள் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். ஒரு சிலருக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாள்களாக எண்ணியிருந்த வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள் வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக நேரம் முடிந்தும் கூடுதலாகப் பணிபுரிய வேண்டியிருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும்; அதற்கேற்ற பலனும் கிடைக்கும். சோதனைகளைத் தாண்டி, சாதனை படைக்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையும்.

வித்தியாசமான அணுகுமுறையால் வெற்றி நிச்சயம்!

புத்தாண்டு பலன்கள் 2018


மிதுனம்: எல்லோரையும் சமமாக நினைத்து சகஜமாகப் பழகும் மிதுன ராசிக்காரர்களே! உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் குரு பகவான் இருக்கும் வேளையில் புத்தாண்டு பிறப்பதால் வித்தியாசமான ஆண்டாக இந்த ஆண்டு அமையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றி வருவீர்கள். சிலருக்குச் சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வாடகை    வீட்டில் இருப்பவர்கள் புதிய வீட்டுக்குக்  குடியேறுவார்கள். புதிய நகைகள், வாகனங்கள் வாங்குவீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துப்போவது நல்லது. வீண் விவாதங்கள், ஈகோ பிரச்னைகளைத் தள்ளிவையுங்கள். வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளின் மூலம் லாபம் பார்க்கவேண்டிய நேரமிது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். அன்றாட வேலைகளைத் தள்ளிப்போடாமல் அவ்வப்போது செய்துவிடுங்கள். வித்தியாசமான அணுகு முறைகளால் வெற்றியை ஈட்டும் ஆண்டாக  இந்தப் புத்தாண்டு அமையும்.

மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது!

புத்தாண்டு பலன்கள் 2018கடகம்: நண்பர்கள் நலனில் மிகுந்த அக்கறைகாட்டும் கடக ராசிக்காரர்களே! உங்களுடைய ராசிக்கு 11-ம் வீடான லாப வீட்டில் சந்திரன் இருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மகிழ்ச்சிக் கும் வருமானத்துக்கும் குறைவு இருக்காது. கடுமையாக உழைத்தும் பலனில்லையே என்ற வருத்தத்தில் இருந்த உங்களுக்கு பிறக்கப் போகும் புத்தாண்டு வட்டியும் முதலுமாக வாரி வழங்கப்போகிறது. புதிய நண்பர்கள் பலர் அறிமுகமாவார்கள். அயல்நாட்டு வேலைக்குச்  விண்ணப்பித்தவர்களுக்கு வேலைக்கான உத்தரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு விலகும். கணவர், உங்களுடைய புதிய முயற்சிகளுக்குப் பின்புலமாக இருந்து உதவி செய்வார். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் புதிதாகக் கிளைகளைத் தொடங்கி தங்கள் வியாபாரத்தை விரிவாக்குவார்கள். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளும் அளவு சிறந்த ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமைந்திடும்.

நிர்வாகத்திறமை முழுமை பெறும்!

புத்தாண்டு பலன்கள் 2018


சிம்மம்: எதிர்ப்புகள் வந் தாலும், பரவாயில்லையென தன் மனதுக்கு சரி எனப் பட்டதைத் துணிந்து செய்யும் சிம்ம ராசிக்காரர்களே! சிம்ம ராசிக்கு யோகாதிபதியான செவ்வாய் 6-ம் இடத்தில் இருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், சவால் களையெல்லாம் வாய்ப்பாக எண்ணி முன்னேறி வெற்றிபெறுவீர்கள். உங்களுடைய நிர்வாகத்திறமை முழுமை யாக இந்த ஆண்டு வெளிப்படும். முன்கோபம் அடிக்கடி தலைதூக்கும். அதைக் கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது. உங்களைச் சுற்றியுள்ளவர்களில் உங்கள் கருத்துகளுடன் இசைந்து போகிறவர்களுடன் பயணம் செய்யுங்கள். பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை சேர்க்கும்விதமாக நடந்து கொள்வார்கள். புதிய சொத்து, வீட்டு மனை வாங்கும்போது கவனம் தேவை. குடும்பத்தினருடன் கோயில் குளங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றி புதுமையான பாதையை அமைக்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையும்

புத்தாண்டு பலன்கள் 2018

வில்லங்கம் விலகும்!

கன்னி: `விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை' என்பதை உணர்ந்தவர்களே! உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சந்திரன் இருக்கும்போது  இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களுக்கு ஒரு பிரச்னையென்றால் ஓடிவந்து உங்கள் நண்பர்கள் கைகொடுத்து உதவுவார்கள். பிள்ளைகள் கல்வியில் புதிய சாதனை படைப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்காமலிருந்த தம்பதிக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஈகோ பிரச்னைகள் வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. தேவையற்ற வீண் ஆடம்பரச் செலவுகளைச் செய்யக் கூடாது. தந்தைவழி சொத்தில் இதுநாள்வரை இருந்த வில்லங்கம் விலகும். வியாபாரிகளுக்குப் போட்டிகள் அதிகரிக்கும். தேவையான அளவு மட்டுமே முதலீடு செய்து வியாபாரம் செய்யவும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி முன்னேறுவார்கள். கடுமையான உழைப்பு மட்டுமே இந்தப் புத்தாண்டில் சாதனை படைக்க உதவும்.

செல்வாக்கு அதிகரிக்கும்!

புத்தாண்டு பலன்கள் 2018


துலாம்: ‘தனித் தன்மையே நம்மை முதன்மையாக்கும்’ என்பதை உணர்ந்த துலாம் ராசிக்காரர்களே! உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் நீங்கள் நினைத்த காரியமெல்லாம் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகள் நீங்கள் விரும்பியவாறு நடந்துகொள்வார்கள். புதிதாகச் சொந்த வீடு வாங்கி குடியேறுவீர்கள். அரசு வகையில் புதிய சலுகைகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். புதிய கௌரவப் பதவிகள் உங்களைத் தேடிவரும். குடும்பத்தினருடன் புண்ணிய தலங்களுக்குப் போய் வருவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக் கும். சக ஊழியர்கள் உங்களிடம் அனு சரணையாக நடந்துகொள்வார்கள். இந்தப் புத்தாண்டு உங்களுக்கு எல்லா வகையிலும் சாதகமாக அமையும்.

கஷ்டங்கள் விலகும்!

புத்தாண்டு பலன்கள் 2018விருச்சிகம்: மரியாதை கொடுத்து மரியாதை வாங்கும்  விருச்சிக ராசிக்காரர்களே! ஜன்மச் சனியினால் இது நாள்வரை நீங்கள்பட்ட கஷ்டங்கள் எல்லாம் இனி படிப்படியாக விலகத் தொடங்கும். உங்கள் வாழ்க்கைப் பாதையிலிருந்த தடைகள் எல்லாம் நீங்கும். பாதியில் நின்றுபோயிருந்த வீடுகட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். வங்கிக்கடன் எளிதாகக் கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வியாபாரிகள் கையில் இருக்கும் பொருள்களை விற்றுவிட்டு, புதிய முதலீடுகளில் ஈடுபடுவது நல்லது. குறைவான லாபத்தில் அதிக அளவில் வர்த்தகம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். புதிய பங்குதாரர்களை நம்பி காரியத்தில் இறங்க வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அன்றாட வேலைகளைத் தள்ளிப்போடாதீர்கள். அவ்வப்போதே செய்து முடித்துவிடுங்கள். திட்டமிட்டுக் காய் நகர்த்தினால் இந்தப் புத்தாண்டில் நிச்சயமாக வெற்றி பெறலாம்.

புதிய பதவிகள் தேடிவரும்!

புத்தாண்டு பலன்கள் 2018


தனுசு:
வெற்றி இலக்கை எட்டும் வரை வீறுகொண்டு போராடும் தனுசு ராசிக்காரர்களே! ‘நம் ராசியில் ஜன்ம சனி சஞ்சரிக்கும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறதே’ என்று கவலைப்பட வேண்டாம். உங்களது மதிநுட்பத்தால், ‘எதைச் செய்ய வேண்டும்; எதைச் செய்யக் கூடாது’ என்பதை மட்டும் புரிந்துகொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்தான். புதிய பதவிகள் உங்களைத் தேடிவரும். தயங்காமல் ஏற்றுச் சிறப்பாகச் செயல்படுங்கள். பிள்ளைகளின் கல்வியில் புதிய அத்தியாயம் தொடங்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வியாபாரிகள், புதிதாகக் கடன் வாங்க வேண்டாம். பணியாளர்களிடம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் அவசரப்பட்டு எதையும் செய்ய வேண்டாம். ஒருமுறைக்கு இரண்டுமுறை எதையும் யோசித்துச் செய்யுங்கள். இந்தப் புத்தாண்டு புதிய படிப்பினைகளைத் தருவதாகவும், வாழ்க்கையில் வெற்றிபெற எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாகவும் அமையும். நிதானமாகச் செயல்பட்டு வெற்றி இலக்கை அடைய வேண்டிய ஆண்டு.

புத்தாண்டு பலன்கள் 2018

கவலைப்பட வேண்டாம்!

மகரம்: `தானத்தில் சிறந்தது நிதானம்' என்று வாழும் மகர ராசிக்காரர்களே! உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சந்திரன் இருக்க, இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தொலைநோக்குச் சிந்தனையுடன் உங்கள் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வீர்கள். `ஏழரைச் சனி தொடங்கியிருக்கிறதே' என நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.     முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு உழைக்கவேண்டிவரும். கணவன் மனைவி இடையே தேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.  புதிய வாகனங்கள், டி.வி, ஃப்ரிட்ஜ் போன்ற பொருள்களை வாங்குவீர்கள். பணம் பல வழிகளில் வரும். அதை சுபச் செலவுகளாக மாற்றுங்கள். வியா பாரிகள் வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகளை அளிப்பதன் மூலம் லாபத்தைப் பெருக்கலாம். புதிய தொழில் புதிய முதலீடுகளில் இறங்க வேண்டாம். கடன் வாங்க வேண்டாம்; கொடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், வீண்பழி உங்களை வந்து சேரும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவது நல்லது. போராடினால்தான் புது வாழ்வு என்பதை உணர்த்தும் ஆண்டு, இந்தப் புத்தாண்டு.

இழந்ததைப் பெறுவீர்கள்!

புத்தாண்டு பலன்கள் 2018


கும்பம்: எல்லாம் அறிந்திருந்தும் எதுவும் அறியாதவர் போல் அமைதி காக்கும் கும்ப ராசிக்காரர்களே! இதுநாள்வரை இழந்ததை யெல்லாம் நீங்கள் பெறுகிற நேரம் வந்துவிட்டது. `இவ்வளவு நாள்களாக உழைத்தும் பலனில்லை, அங்கீகாரம் இல்லை' என்ற ஆதங்கத்தில் இருந்த உங்களுக்கு, இனி அவை எல்லாமே தேடி வரும். வீட்டை புதுப்பொலிவுடன் மாற்றி அமைப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். ஆளுக்கொரு பக்கமாக இருந்த கணவன் மனைவி ஒன்றுசேருவார்கள். புதிய பதவிகள் தேடிவரும். கௌரவமான பதவியை ஏற்கும்படி ஊர் பிரமுகர்கள் உங்களை அழைப்பார்கள். பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெற்று, பெரிய கல்வி நிறுவனங்களுக்கு உயர்கல்வி படிக்கச் செல்வார்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள்  நடக்கும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதிய புதிய கிளைகளைத் தொடங்குவீர்கள். வெளிநாடுகளுக்கு வெளிமாநிலங்களுக்கு, பொருள்களை ஏற்றுமதி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் தேடி வரும். சிலருக்குப் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். நீங்கள் யார் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையும்.

புத்தாண்டு பலன்கள் 2018

கருத்துவேறுபாடுகள் விலகும்!

மீனம்: ‘கட்டிக்கொண்டு வா என்றால், வெட்டிக்கொண்டு வந்து நிற்கும்’ மீன ராசிக்காரர்களே! உங்களின் வித்தியாசமான அணுகுமுறையாலும்  சாதுர்யமான பேச்சாலும் எதையும் சாதகமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவு இருக்காது. நீண்ட நாள்களாக வரன் அமையாமல் இருந்த பெண்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாள்களாக வராமலிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.  வருமானத்துக்கேற்ப சுபச்செலவுகளும் செய்யவேண்டி யிருக்கும். வீட்டைப் புதிதாக மாற்றி அமைப்பீர்கள். ஆடை ஆபரணங்கள் சேரும். நீண்ட நாள்களுக்குப் பிறகு உங்களின் பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள். வியாபாரிகளுக்கு வெளிநாட்டு, வெளிமாநில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நிதானமாகச் சென்று வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையும்.