Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜனவரி 2 முதல் 15-ம் தேதி வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

ஜனவரி 2 முதல் 15-ம் தேதி வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன்


மேஷம்

புதிய பதவி தேடி வரும்!

குரு 7-ம்  இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால், செயலில் வேகம் கூடும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவர். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிலருக்குப் புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு.  சனி பகவான் 9-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் தடைப்பட்ட வேலைகள் முடிவடையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, சேமிக்கத் தொடங்குவீர்கள்.

வெளியூர்ப் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். புது வீடு வாங்குவீர்கள். 14-ம் தேதி முதல் சூரியன் 10-ம்  இடத்தில் அமர்வதால் தந்தையின் உடல் நலம் சீராகும். திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் புதிதாக முதலீடு செய்வீர்கள். பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும்.

புதிய வியூகங்களால் வெற்றி பெறும் காலம் இது.

ராசிபலன்

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

பயணங்களால் திருப்பம் உண்டு!

செவ்வாய் 6-ம்  இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.. எதிர்பார்த்தபடி வீடு-மனை வாங்குவீர்கள். சகோதரர்களுக்குள் ஒற்றுமை வலுவடையும்.  3-ம்  இடத்தில் ராகு வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பயணங்களால் திருப்பம் உண்டாகும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்குப் புதிய வேலை கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அஷ்டமச் சனி நடப்பதால், அநாவசியப் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் தள்ளுபடி விலைக்குப் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து போகும். கலைத்துறையினருக்கு வேற்றுமொழிப் பட வாய்ப்புகள் கிடைக்கும்.

எதிர்ப்புகளைக் கடந்து முன்னேறும் வேளை இது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராசிபலன்மிதுனம்

எதிர்பாராத பண வரவு உண்டு!

4-ம் தேதி முதல் உங்களுடைய ராசிநாதன் புதன் 7-ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப்பதால் அரைகுறையாக நின்ற வேலைகளெல்லாம் முடியும். துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். மோதல்கள் விலகும். யோகாதிபதி சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பணம் வரும். வாகனம் வாங்குவீர்கள். சிலர், புதிய வீட்டுக்குச் செல்வீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

குரு பகவான் சாதகமாக இருப்பதால், சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். கண்டகச் சனி நடைப்பெறுவதால் முக்கியக் கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் தனலாபம் உண்டு. பங்குதாரர்களுடன் வளைந்துகொடுத்துப் போங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் வியக்கும்படி நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வரும்.

விட்டுக்கொடுத்து சாதிக்கும் தருணம் இது.

ராசிபலன்

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

கடகம்

அரசால் அனுகூலம் உண்டாகும்!


சனிபகவான் 6 -ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். வீட்டுமனை வாங்குவீர்கள். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். அரசால் அனுகூலம் உண்டாகும். வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும்.                                                                   

4 -ம் இடத்தில் செவ்வாய் நிற்பதால், உடன்பிறந்தவர்கள் மதிப்பார்கள்.

குரு 4-ம் இடத்தில் தொடர்வதால், சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீடு மாறுவீர்கள். வியாபாரத்தில் போராட்டம் இருக்கும். உத்தியோகத்தில், இடையூறுகள் வரும். கலைத்துறையினரே, எளிதில் யாரையும் நம்ப வேண்டாம்.

பொறுப்புகள் அதிகரிக்கும் நேரம் இது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன்சிம்மம்

மனைவி வழியில் அனுகூலம் உண்டாகும்!


உங்களின் யோகாதிபதியான செவ்வாய் 3-ம் இடத்தில் வலுவாக முகாமிட்டிருப்பதால், திடீர் யோகம், பணவரவு உண்டாகும். வழக்கில் வெற்றி உண்டு. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிலருக்குப் புதிய வேலை கிடைக்கும். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீடு, மனை வாங்குவீர்கள்.  சுக்கிரன் சாதகமாக இருப்பதால், மனைவி வழியில் அனுகூலம் உண்டு. தந்தைவழியில் மதிப்பு கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

5-ம் இடத்தில் சனியும், சூரியனும் நிற்பதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கர்ப்பிணிகள் எடை மிகுந்தப் பொருள்களைச் சுமக்க வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னையில் இப்போது தலையிடாதீர்கள். கேது 6 -ம் இடத்தில் நிற்பதால், ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்தியோகக்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு வேற்றுமொழி வாய்ப்புகள் கிடைத்து புகழ் பெறுவார்கள்.

சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறும் வேளை இது.

ராசிபலன்

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்

கன்னி

அயல்நாட்டு நண்பர்களால் ஆதாயம் உண்டு!

குரு 2-ம் இடத்தில் நிற்பதால் இங்கிதமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிலும் வெற்றி, பணவரவு உண்டு. குடும்பத்தில் மதிப்பு கூடும். கல்வியாளர்களின் அறிமுகம் கிடைக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

உறவினர்கள், நண்பர்கள் ஆதரவு பெருகும். நீண்டகாலமாகப் பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். உங்களது ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் மனநிலையை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். கலைத்துறையினரது படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

தன்னடக்கத்தால் சாதிக்கும் தருணம் இது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ராசிபலன்துலாம்

அரசியலில் செல்வாக்குக் கூடும்!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், புது முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பூர்வீகச் சொத்துச் சிக்கல் தீரும். செல்வாக்குக் கூடும். விருந்தினர்களின் வருகையால், வீட்டில் உற்சாகம் பொங்கும். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும். எதிர்பாராத பண வரவு உண்டு. சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், அரசியலில் செல்வாக்குக் கூடும்.

வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வழக்கு சாதகமாகும். தகுதிக்கேற்ப வேலை கிடைக்கும். பள்ளிப் பருவ தோழிகளைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார்.  கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது.

வெற்றிக்கு வித்திடும் காலம் இது!

ராசிபலன்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

விருச்சிகம்

திடீர் பயணங்கள் உண்டு!

கேது 3 -ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். பேச்சில் கம்பீரம் தெரியும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். பதவிகள் தேடி வரும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். புது வேலை அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் கூடிவரும். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்வார்கள். தாயாரின் உடல்நலம் சீராகும்.

புதன் சாதகமாக இருப்பதால் திடீர் பயணங்கள் உண்டு. புது நட்பு மலரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கப்பாருங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் உங்களைத் தாக்கிப் பேசினாலும், பதற்றப்படாதீர்கள். சக ஊழியர்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள்.

தடைகளைத் தாண்டும் வேளை இது.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராசிபலன்தனுசு

புதிய ஒப்பந்தங்களால் லாபம் வரும்!

ராசிநாதன் குரு பகவான் லாபஸ்தானத்தில் தொடர்வதால், தொட்டது துலங்கும். வி.ஐ.பிகள், அறிமுகமாவார்கள். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதிய வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. 

விலகிச்சென்ற பழைய சொந்தங்களெல்லாம் உங்களின் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.  வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். கலைத்துறையினருக்குப் புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள்.

சின்னச்சின்ன தேவைகள் பூர்த்தியாகும் தருணம் இது.

ராசிபலன்

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

மகரம்

கடன் பிரச்னை கட்டுக்குள் வரும் !

செவ்வாய் 10 -ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் உங்களின் நிர்வாகத் திறன் கூடும். சொத்து வாங்குவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உங்களைத் தாழ்த்திப் பேசியவர்கள் திருந்துவார்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்ட. சுக்கிரன் சாதகமாக இருப்பதால், கனிவாகப் பேசி சாதிப்பீர்கள்.

புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மற்றவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பழக வேண்டாம். வியாபாரத்தில் கணிசமான லாபம் உயரும். வேலையாட்கள், பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகும். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

போராடி வெல்லும் நேரம் இது.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி 1,2,3-ம் பாதம்

ராசிபலன்கும்பம்

நல்ல செய்தி விரைவில் கிடைக்கும்!

ராஜ கிரகங்களான குரு, சனி மற்றும் நிழல் கிரகமான ராகுவும் சாதகமாக இருப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். மனத்தெளிவு, உற்சாகம் பிறக்கும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். புத்திர பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதிய பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் மரியாதை, செல்வாக்குக் கூடும். 

சூரியனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த பணம் வரும். எதிலும் மகிழ்ச்சி தங்கும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். திருமணம் கூடி வரும். சிலர் வீடு மாறுவீர்கள். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மனதை மூத்த அதிகாரி புரிந்துகொண்டு உதவுவார். சக ஊழியர்களுக்காகப் பரிந்து பேசுவீர்கள். கலைத்துறையில் வெகு நாள்களாகத் தடைபட்ட வாய்ப்பு இனி கூடிவரும்.

புகழ் வெளிச்சத்துக்கு வரும் வேளை இது.

ராசிபலன்

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

மீனம்

புதிய நகைகள் வாங்குவீர்கள்!

சூரியனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். பெரிய பதவிகள், புதிய வேலை கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சொந்தபந்தங்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

கேது வலுவாக அமர்ந்திருப்பதால், சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். குரு சாதகமாக இல்லாததால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பணப் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தி யோகத்தில், கவனமாக இருக்கவும். கலைத்துறையினர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

கடின உழைப்பால் வெற்றி பெறும் தருணம் இது.