Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

ஜனவரி 9 -ம் முதல் தேதி 22 -ம் தேதி வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்

ஜனவரி 9 -ம் முதல் தேதி 22 -ம் தேதி வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்
ராசி பலன்கள்

குடும்பம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமை யாகப் பேசப்படுவீர்கள். விலை உயர்ந்த ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.  

வியாபாரம்: வங்கிக் கடன் கிடைக்கும். வேலையாட்களை அவர்களின் போக்கிலேயே விட்டுப்பிடிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள்.

உத்தியோகம்: உயர்பதவிகள் தேடிவரும். ஊதியப் பிரச்னைக்குப் புதுவழி பிறக்கும். 

* சவால்களில் வெற்றிபெறுவீர்கள்.

ராசி பலன்கள்

குடும்பம்:: புதிதாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். கணவர் வழியில் உதவிகள் உண்டு. குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.  பிள்ளைகளின் அலட்சியப்போக்கு மாறும்.

வியாபாரம்: புதிய யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.

உத்தியோகம்: வேலைச்சுமை அதிகம் இருக்கும். ஆனால், உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள்.

* விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

ராசி பலன்கள்

குடும்பம்: வழக்கமான உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களுடைய உதவியை நாடுவார்கள். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள்.

வியாபாரம்: வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப வியாபாரம் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள்.

உத்தியோகம்: கூடுதல் பொறுப்புகளை உங்களை நம்பி மூத்த அதிகாரி ஒப்படைப்பார்.

* வீரியத்தைக் குறைத்துக்கொண்டு காரியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

ராசி பலன்கள்

குடும்பம்: செல்வாக்கு உயரும். பழைய பிரச்னை களுக்குச் சுமுகத் தீர்வு காண்பீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேருவீர்கள். பிள்ளைகள் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார்கள். 

வியாபாரம்: சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.          

உத்தியோகம்: அதிகாரிகளால் பிரச்னை கள் வந்தாலும், சக ஊழியர்களால் நன்மை உண்டாகும்.

* எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

ராசி பலன்கள்

குடும்பம்: பாதியில் நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.

வியாபாரம்: போட்டிகளைச் சமாளிக்க அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். பங்கு தாரர்களுடன் மோதல்கள் வரக்கூடும்.    

உத்தியோகம்: சக ஊழியர்களால் பிரச்னைகள் வெடிக்கும். சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

* உணர்ச்சிவசப்படாமல் செயல்படுவீர்கள்.

ராசி பலன்கள்

குடும்பம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறை வேறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் இனிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்புவரும். சொத்து வாங்கும்போது கவனம் தேவை. பிள்ளைகளின் ஆசை களைப் பூர்த்திசெய்வீர்கள்.

வியாபாரம்: புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.     

உத்தியோகம்: சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள்.  

* புதிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்.

ராசி பலன்கள்

குடும்பம்: சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அரசாங்க காரியங்கள் நல்லவிதத்தில் முடிவடையும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.   

வியாபாரம்: கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர் களை அனுசரித்துப்போவது நல்லது.   

உத்தியோகம்: சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுங்கள். பணிகளைப் போராடி முடிக்க வேண்டிவரும்.

* தடைகளை உடைத்து வெற்றிபெறுவீர்கள்.

ராசி பலன்கள்

குடும்பம்: நீண்ட நாள்களாகத் தள்ளிப்போன சவாலான விஷயங்களைச் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். கணவரின் உடல்நிலை சீராகும். சுப நிகழ்ச்சி களில் கலந்துகொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். சொத்துகள் வாங்குவது விற்பது லாபகரமாக இருக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும்.      

வியாபாரம்: எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேலையாட்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள்.     

உத்தியோகம்: சக ஊழியர்களால் உங்கள் பெயர் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

* தீராத பிரச்னைகள் தீரும்.

ராசி பலன்கள்

குடும்பம்: திட்டமிட்ட காரியங்கள் முடியும். பண வரவு திருப்தி தரும். கல்யாணப் பேச்சுகள் சாதகமாக முடியும். உறவினர்களுடன் இருந்த நெருடல்கள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம்.  பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.

வியாபாரம்: வாடிக்கையாளர்களைக் கவர்ந் திழுக்கக் கடையை விரிவுப்படுத்துவீர்கள், அழகுப்படுத்துவீர்கள்.

உத்தியோகம்: உயரதிகாரி சில சூட்சுமங் களைச் சொல்லித்தருவார். 

* அனுபவ அறிவால் எதையும் சாதிக்க முயல்வீர்கள்.

ராசி பலன்கள்

குடும்பம்: பேச்சில் அனுபவ அறிவு வெளிப் படும். முக்கிய முடிவுகள் சிலவற்றை எடுப்பீர்கள். சுபச்செலவுகள் அதிகமாகும். கணவன் வழி உறவினர்களால் அலைச்சல் செலவுகள் இருக்கும். யாரும் உங்களைப் புரிந்துகொள்ளவில்லையே எனச் சில நேரங்களில் வருந்துவீர்கள். பிள்ளைகளின் வருங் காலத் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.      

வியாபாரம்: வாடிக்கையாளர்களின் நம்பிக் கையைப் பெற போராட வேண்டி வரும்.

உத்தியோகம்: காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டிவரும். 

* சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுத்துச் செல்வீர்கள்.

ராசி பலன்கள்

குடும்பம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். யதார்த்தமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் திருமணப் பேச்சுவார்த்தை நல்லவிதத்தில் முடியும்.

வியாபாரம்: பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேருவார்கள். பாக்கிகள் வசூலாகும். புதிதாக சிலவற்றில் முதலீடுகள் செய்வீர்கள்.

உத்தியோகம்: அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும்.  

* தொட்ட காரியங்கள் துலங்கும்.

ராசி பலன்கள்

குடும்பம்: இதுவரை இருந்துவந்த இழுபறி நிலைமை மாறும். அரசால் அனுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகமாகும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.  பிள்ளைகள் உங்களுடைய அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள்.

வியாபாரம்: ரகசியங்கள் எங்கே கசிகிறது எனப் பார்த்து, அதை சரிசெய்வீர்கள்.

உத்தியோகம்: வேலைச்சுமை இருந்தாலும், மூத்த அதிகாரியின் உதவியால் முன்னேறுவீர்கள்.    

* சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள்.