Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜனவரி 16 ம் தேதி முதல் 29 ம்தேதி வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

ஜனவரி 16 ம் தேதி முதல் 29 ம்தேதி வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்

ராசிபலன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!நினைத்தது நடக்கும்!

ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதையும் சாதிக்கும் நீங்கள், பெரியோர், சிறியோர் என்றில்லாமல் எல்லோரிடமும் அன்பாக நடந்துகொள்வீர்கள். சூரியன் 10-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். அதிகாரமுள்ள பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

எதிர்பாராத பணவரவு உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை அமையும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும்.

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், அந்தஸ்து உயரும். நண்பர்களைச் சந்தித்து மகிழ் வீர்கள். ராஜ கிரகங்களான சனியும் குருவும் வலுவாக அமர்ந்திருப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக் கும். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமா வார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் பாராட்டுவர். கலைத் துறை யினருக்கு வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். 

தொட்ட காரியங்கள் துலங்கும் நேரமிது.

ராசிபலன்

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

ஆரோக்கியம் சீராகும்!

செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்கும் நீங்கள், தொடங்கிய வேலையை முடிக்கும்வரை ஓயமாட்டீர் கள். ராகு சாதகமாக இருப்பதால், எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும்.

வீட்டைக் கட்டிமுடிக்க, வங்கிக்கடன் கிடைக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். ராசிநாதன் சுக்கிரனும், பூர்வ புண்ணியாதிபதி புதனும் சாதகமாக இருப்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

பழைய நண்பர்களைச் சந்தித்து மனம் விட்டுப் பேசுவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியம் சீராகும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய தலங் களுக்குச் சென்று, முடிந்து வைத்திருந்த காணிக்கையைச் செலுத்துவீர்கள். திருமணம் கூடிவரும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளைச் சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளாதீர்கள். கலைத் துறையினர், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

புதிய முயற்சியில் தீவிரம் காட்ட வேண்டிய வேளையிது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

மிதுனம்

ராசிபலன்


புதிய வாய்ப்புகள் வரும்!

‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்றில்லாமல் ஆழமாக யோசித்து முடிவெடுக்கும் நீங்கள், கடந்து வந்த பாதையை ஒரு போதும் மறவாதவர்கள். குருபகவான் வலுவாக அமர்ந்தி ருப்பதால், வி.ஐ.பிகளின் ஆதரவால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வங்கிக்கடன் பெற்றுக் குடியிருக்கும் வீட்டில் கூடுதலாக ஓர் அறை அல்லது தளம் கட்டுவீர்கள்.

சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வழக்கு சாதகமாகும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சகோதரர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். 22-ம் தேதி முதல் ராசிநாதன் புதன், சனியை விட்டு விலகுவதால் ஆரோக்கியம் சீராகும்.

சொந்தபந்தங்களால் இருந்து வந்த அன்புத்தொல்லைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் லாபம் குறைவாகக் கிடைக்கும். வாடிக்கை யாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவான பேச்சால் நிம்மதியடைவீர்கள். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் வரும்.

வளைந்துகொடுத்து வெற்றி பெறும் தருணமிது.   

ராசிபலன்

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

கடகம்

சந்தோஷம் பிறக்கும்!

எதிராளிகளையும் சிந்திக்க வைக்கும் நீங்கள், சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படாமல் தனக்கென தனிப்பாதையில் செல்பவர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள்.

பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். தோற்றப்பொலிவு கூடும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். புதிய வேலை கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள்.

20-ம் தேதி முதல் யோகாதிபதி செவ்வாய் 5-ம் இடத்தில் ஆட்சிப் பெற்று நுழைவதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். குலதெய்வப் பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

22 -ம்  தேதி முதல் புதன் 7-ம் இடத்தில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப்பதால் முகப்பொலிவு கூடும். வியாபாரத்தில், புதிய இடத்துக் குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில், வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத் துறையினர் நினைத்தது நடக்கும்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நேரமிது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

சிம்மம்

ராசிபலன்


பணவரவு அதிகரிக்கும்!

வஞ்சப்புகழ்ச்சியால் சுற்றி இருப்பவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் நீங்கள், எப்போதும் நீதி நேர்மைக்குக் குரல் கொடுப்பவர்கள். செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். அதிகாரிகளின் தொடர்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும்.

வீடு, மனை வாங்குவது, விற்பது நல்லவிதத்தில் முடியும். பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசியல் வாதிகளின் ஆதரவு கிடைக்கும்.

தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர், நண்பர்களால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். அரசு வகையில் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் லாபம் உண்டு. புதிய முயற்சிகளில் அதிக கவனம் தேவை. உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னைகள் வந்து போகும். கலைத் துறையினருக்கு உரிய மரியாதை கிடைக்கும்.

மூளை பலத்தால் முன்னேறும் காலமிது.

ராசிபலன்

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

கன்னி

வியாபாரம் செழிக்கும்!

எப்போதும் தியாகம் செய்து கொண்டு, பிரதிபலன் பாராத சேவையால் எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பவர்கள் நீங்கள். குருபகவான் வலுவாக நிற்பதால், குடும்பத்தில் உங்கள் கை ஒங்கும். பணப்பழக்கம் அதிகமாகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குழந்தை பாக்கியம் உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனைச் செலுத் துவீர்கள். வெளிநாட்டு வாய்ப்புகள் வரும்.

யோகாதிபதி சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், சிக்கல் களுக்குத் தீர்வு காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள். உங்கள் ராசிநாதன் புதன் 22-ம் தேதி முதல் சனியை விட்டு விலகுவதால் டென்ஷன், மனக்குழப்பங்களெல்லாம் நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்க்கவும். வியாபாரம் செழிக்கும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறு வீர்கள். கலைத் துறையினருக்கு வருமானம் உயரும்.

விவேகமான முடிவுகளால் வெற்றிபெறும் தருணமிது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

துலாம்

ராசிபலன்


பணப்புழக்கம் அதிகரிக்கும்!

எல்லோரையும் எடுத்த எடுப்பி லேயே நம்பும் நீங்கள், காலம் கடந்துதான் சிலரின் கல்மனதைப் புரிந்துகொள்வீர்கள். ராசிநாதன் சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்ப தால் தொட்ட காரியம் துலங்கும்.

கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமா வார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற சொத்து வாங்குவீர்கள். வெளி வட்டாரத்தில் கௌரவப் பதவிகள் தேடி வரும்.

உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. தள்ளிப்போன வழக்கில், தீர்ப்பு சாதகமாக வரும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங் களைத் தீட்டுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். ரியல் எஸ்டேட், மர வகை களால் லாபமடைவீர்கள். உத்தியோகத் தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் அதிகாரிகளின் பாராட்டுகளால் உற்சாகமடைவீர்கள். கலைத் துறை யினருக்குப் புதிய வாய்ப்புகள் வரும்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நேரமிது.

ராசிபலன்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

விருச்சிகம்

வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்!


கனிவான விசாரிப்பால் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் நீங்கள், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச மாட்டீர்கள். 20-ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய் ஆட்சிபெற்று ராசியிலேயே அமர்வதால், புதுத் தெம்பு பிறக்கும். நீண்ட நாள்களாகத் தள்ளிப்போன காரியங்கள் முடியும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பணவரவு சரளமாக இருக்கும். சகோதர வகையில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல மாற்றம் ஏற்படும்.

பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்றுப் புதுமனை வாங்க முன்பணம் தருவீர்கள். சூரியன் 3-ம் இடத்தில் நிற்பதால், அரசு வகையில் ஆதாயம் உண்டாகும்.

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர, புதுச் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளைப் போராடி முடிக்கவேண்டி வரும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

சமயோஜித புத்தியால் சாதிக்கும் வேளையிது.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

தனுசு

ராசிபலன்வியாபாரம் சூடு பிடிக்கும்!

‘தான் உண்டு தன் வேலை உண்டு’ என்றிருக்கும் நீங்கள், அடுத்தவர் விஷயத்தில் அநாவசியமாகத் தலையிட மாட்டீர்கள். குரு பகவான் வலுவாக இருப்பதால், மதிப்பு, மரியாதை கூடும். புதிய வேலை கிடைக்கும். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

எதிர்பார்த்த வகையில் பணம் வரும். உங்களின் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் 20-ம் தேதி முதல் 12-ம் இடத்தில் ஆட்சிபெற்று அமர்வதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் வலியவந்து உதவுவார்கள்.

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் அடகு வைத்திருந்த ஆபரணங்கள், பத்திரங்களை மீட்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். வியாபாரம் சூடு பிடிக்கும். பழைய சரக்குகளை, புதிய யுக்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கலைத் துறை யினருக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும்.

தடைகளைத் தாண்டி முன்னேறும் தருணமிது.

ராசிபலன்

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

மகரம்

நல்ல செய்திகள் வரும்!

வித்தியாசம் பார்க்காமல் பழகும் நீங்கள், வீட்டு நலனுடன், நாட்டு வளர்ச்சி குறித்தும் அதிகம் யோசிப்பீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த இடத்திலி ருந்து கடனுதவி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நிலவி வந்த கசப்பு உணர்வுகள் மறையும். ஆடை அணிகலன்கள் வந்து சேரும். வீடு, வாகன வசதி பெருகும். புதன் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்திகள் வரும். உறவினர்கள், நண்பர்களின் வருகை யால் வீடு களைகட்டும்.

வெளிவட்டாரத்தில் சிலர் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். முடிந்துவைத்திருந்த காணிக்கையைச் செலுத்தி நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால்,  வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.

வியாபாரத்தில் லாபம் வரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். மேலதிகாரி ஆதரிப்பார். கலைத் துறையினருக்கு எதிராக விமர்சனங்கள் வந்தாலும் அஞ்ச வேண்டாம்.

போராட்டங்களைக் கடந்து முன்னேறும் நேரமிது.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

கும்பம்

புகழ் கூடும்!

ராசிபலன்‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ என்பதற்கேற்ப வாழும் நீங்கள், கோபப்பட்டாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும். ராஜ கிரகங்களான குரு, சனி மற்றும் சர்ப்ப கிரகமான ராகு உங்களுக்குச் சாதகமாக இருப்பதால் அழகும் அறிவும் கூடும். உங்களின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் வரும்.

பணவரவு அதிகரிக்கும். குடும்பத் தில் மகிழ்ச்சி தங்கும். புதுவீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு அயல்நாட்டில் வேலை அமையும். நவீனச் சமையலறைச் சாதனங்கள் வாங்குவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.

பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். சூரியன் 12-ம் இடத்தில் மறைந்திருப்பதால், அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். வியாபாரத்தில், சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர். உத்தியோகத்தில் உங்களின் திறமை யைக் கண்டு மேலதிகாரி வியப்பார். கலைத் துறையினர்களின் புகழ் கூடும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

வெற்றிக்கு வித்திடும் காலமிது.

ராசிபலன்

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

மீனம்

அனுகூலம் உண்டாகும்!

துயரங்களுக்காகத் துவளாத நீங்கள் ‘நாளை நமதே’ என்ற நம்பிக்கையில் வாழ்வீர்கள். 20-ம் தேதி முதல் செவ்வாய் ஆட்சி பெற்று 9-ம் இடத்தில் நுழைவதால், திடமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவன் மனைவிக்குள் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். வீடு கட்டும் வேலையை முழுமையாக முடிப்பதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

புதன் சாதகமாக இருப்பதால், சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்களைச் சந்திப்பீர்கள். விழாக் களை முன்னின்று நடத்துவீர்கள்.

சூரியன் சாதகமாக இருப்பதால், அரசியல்வாதிகள் உதவுவார்கள். புகழ், கௌரவம் உயரும். வேற்றுமொழி மாநிலத்தவர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித்தருவார். கலைத் துறை யினருக்கு மூத்த கலைஞர் களின் நட்பு கிடைக்கும்.

அதிரடி முன்னேற்றங்களைச் சந்திக்கும் தருணமிது.