Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்ஜனவரி 23-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை

ராசி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்ஜனவரி 23-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்
ராசி பலன்கள்

குடும்பம்: எதிலும் வெற்றி கிடைக்கும். வராது என்று நினைத்திருந்த பணம் வரும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள். புண்ணியத்தலங்கள் செல்வீர்கள். பிள்ளைகள் உங்களுடைய அருமையைப் புரிந்துகொள்வார்கள்.

வியாபாரம்: பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.   

உத்தியோகம்: உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் உங்களுடைய புது முயற்சிக் குப் பக்கபலமாக இருப்பார்கள்.

 எதையும் சாதித்துக்காட்டுவீர்கள்.

ராசி பலன்கள்

குடும்பம்:  எதையும் தைரியமாக எதிர்கொள் வீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துகொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை களைத் தீர்க்க புதுவழி பிறக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவீர்கள்.

வியாபாரம்: கணிசமாக லாபம் தரும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். வேலை யாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது.

உத்தியோகம்: மறைமுக விமர்சனங்கள் உண்டு. ஆனால், சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். 

 சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள்.

ராசி பலன்கள்

குடும்பம்:   குடும்பத்தில் அமைதி நிலவும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். தேவையான அளவு பணம் கிடைக்கும். அரசு காரியங்கள் சற்றுத் தாமதமாகும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.

வியாபாரம்: சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்யுங்கள். பங்குதாரர்களுடன் வளைந்துகொடுங்கள்.  

உத்தியோகம்: உங்களை யார் தாக்கிப் பேசினாலும் பதற்றப்படாதீர்கள்.

 நீண்டகால கனவுகள் நனவாகும்.

ராசி பலன்கள்

குடும்பம்:  எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. எதிலும் அவசரம் வேண்டாம். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தருவீர்கள்.

வியாபாரம்: போட்டிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.

உத்தியோகம்: அதிகாரிகள் உங்களுடைய ஆலோசனைகளை முதலில் மறுத்தாலும், பிறகு ஏற்றுக்கொள்வார்கள்.

 புகழ் வெளிச்சத்துக்கு வருவீர்கள்.

ராசி பலன்கள்

குடும்பம்:  அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் ஏற்படும். பிள்ளைகளுக்கான உங்கள் முயற்சிகள் சற்றுத் தாமதமாகி முடியும்.

வியாபாரம்: வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களைச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.    

உத்தியோகம்: அதிகாரிகளால் அலைக் கழிக்கப்பட்டாலும், சக ஊழியர்களால் ஆதரிக்கப் படுவீர்கள்.

 எதையும் திட்டமிட்டுச் செய்யுங்கள்.

ராசி பலன்கள்

குடும்பம்:  புதிய முயற்சிகள் பலிதமாகும். பெற்றோர் வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்துப் பிரச்னை நல்லவிதத்தில் முடியும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாதீர்கள்.

வியாபாரம்: ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள்.      

உத்தியோகம்: புதிய பொறுப்புகள் தேடிவரும்.  உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். 

 எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.

ராசி பலன்கள்

குடும்பம்:  தொட்ட காரியம் துலங்கும். எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.   புண்ணியத்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். பிள்ளைகளின் எதிர் பார்ப்பு பூர்த்தியாகும்.

வியாபாரம்: புதிய முதலீடுகள் செய்து  வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள்.  

உத்தியோகம்: வேலைச்சுமை அதிகம் இருந்தாலும், மேலதிகாரியிடம் நற்பெயர் கிடைக்கும்.

 நினைத்ததை முடிப்பீர்கள்.

ராசி பலன்கள்

குடும்பம்:  மனம் உறுதி பெறும். தோல்வி பயம் நீங்கும். உங்கள் செயலில் வேகம் கூடும். இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளை களின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.      

வியாபாரம்: அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை ஈடுகட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.     

உத்தியோகம்: அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

 ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

ராசி பலன்கள்

குடும்பம்:  சவால்களில் வெற்றிபெறுவீர்கள். பணப்பற்றாக்குறை அகலும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். சொந்தபந்தங்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குடும்பத்திலிருந்து வரன் அமையும்.

வியாபாரம்: இரட்டிப்பு லாபம் உண்டாகும். அனுபவமிக்க வேலையாட்கள் அமை வார்கள். 

உத்தியோகம்: உயர் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.

 பிரபலங்களின் உதவியால் முன்னேறுவீர்கள்.

ராசி பலன்கள்

குடும்பம்:  உங்கள் ரசனை மாறும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அதிகாரிகளின் தொடர்பு கிடைக்கும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப் பார்கள். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும்.       

வியாபாரம்: புதியவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகம்:மேலதிகாரியைப் பற்றிய விமர்சனம் செய்ய வேண்டாம்.

 எதிலும் நிதானித்துச் செயல்படுங்கள்.

ராசி பலன்கள்

குடும்பம்:  எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். பிள்ளைகளின் திறனை வளர்க்க பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள்.

வியாபாரம்: புதிய கிளைகள் தொடங்கு வீர்கள். வேலையாட்கள் உங்களுடைய வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள்.

உத்தியோகம்: உயர்வு உண்டு. சக ஊழியர் களின் சம்பள உயர்வுக்காகவும் போராடி வெற்றி பெறுவீர்கள்.

 புதிய பாதையில் வெற்றி பெறுவீர்கள்.

ராசி பலன்கள்

குடும்பம்:  பழைய சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். பல வேலைகளை ஒரே நேரத்தில் பார்க்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். கௌரவக் குறைவான சம்பவங்கள் ஒன்றிரண்டு நிகழக்கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

வியாபாரம்: போட்டிகள் குறையும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.

உத்தியோகம்: மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். 

 உங்கள் பலம், பலவீனத்தை உணருவீர்கள்.