தொடர்கள்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ஜனவரி 30 முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன்


மேஷம்

புதிய முயற்சிகள் வெற்றி பெறும்

சூரியனும் புதனும் சாதகமாக இருப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். பணவரவு அதிகரிக்கும். தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புதிய வேலை கிடைக்கும். பிள்ளை களின் கல்யாணம், உயர்கல்வி முயற்சிகள் கூடிவரும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும்.  தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சர்ப்ப கிரகங்களான ராகு, கேது சாதகமாக இல்லாததால்  வீண் அலைச்சல், தர்மசங்கடமான சூழல்கள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் சம்பளம் உயரும். கடினமான வேலை களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்குப் புகழ், கௌரவம் உயரும்.

நினைத்ததை சாதித்துக்காட்டும் தருணம் இது. 

ராசிபலன்

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

பண வரவு திருப்தி தரும்

சுக்கிரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுகொண்டிருப்பதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும். பூர்வீகச் சொத்தை உங்களது விருப்பத்துக்குத் தகுந்தபடி மாற்றியமைப்பீர்கள். இதுவரையிலும் உங்கள் குடும்பத்துக்கும் உறவினர்களுக்கும் இருந்துவந்த கசப்பு உணர்வு நீங்கும். அவர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் வாழ்க்கைத்துணைவர் வழியில் எதிர்பாராத வகையில் ஆதாயம் கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்; அதனால் பிரச்னைகள் உருவாகலாம் என்பதால் கவனம் தேவை. வியாபாரத்தில், எதிர்பார்த்த அளவுக்குக் கணிசமான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும், சமாளிப்பீர்கள்.  தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் வரும்.

திட்டமிட்ட காரியங்கள் வெற்றிபெறும் வேளை இது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராசிபலன்


மிதுனம்

திடீர் நன்மைகள் உண்டாகும்

குரு வலுவாக அமர்ந்திருப்பதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். திடீர் நன்மை உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலருக்குப் புதிய வேலை கிடைக்கும். வாகனப் பழுதைச் சரிசெய்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பணம்  நிறையவே வந்தாலும், பற்றாக்குறையும் நீடிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கை நிதானமாகக் கையாள்வது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை உடனே செய்து முடித்து உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். கலைத்துறையினருக்கு வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும்.

இங்கிதமான பேச்சால் முன்னேறும் நேரம் இது.

ராசிபலன்

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

கடகம்

பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்

சனிபகவான் வலுவாக இருப்பதால் பெரிய பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். வி.ஐ.பிகளின் தொடர்புகள் கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டு.

குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிரும் புதிருமாகப் பேசிக்கொண்டிருந்த உறவினர்கள் தங்களின் தவற்றை உணர்வார்கள்.  ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். புதிதாக ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கலைத்துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

விட்டுக்கொடுத்து வெற்றிபெறும் வேளையிது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன்


சிம்மம்

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டு


ராசிநாதன் சூரியன் 6 - ம் வீட்டில் நிற்பதால் எடுத்த காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரமுள்ள பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. நேர்மறைச் சிந்தனைகள் தோன்றும். புதிய நிலம், வீடு வாங்குவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள். எதிர்பார்த்த பணம்  கைக்கு வரும்; பணப்பற்றாக்குறை நீங்கும்.

குலதெய்வக்கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். சாதுக்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியில் பகிர்ந்துகொள்ள வேண்டாம். கலைத்துறையினர் தங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும். எனினும் வெற்றிகள் உண்டு.

தன் கையே தனக்கு உதவி என்பதை உணரும் நேரம் இது.

ராசிபலன்

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

கன்னி

கடன் பிரச்னை கட்டுப்படும்

குரு வலுவாக இருப்பதால் சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும். வீட்டில் தள்ளிப்போன சுபகாரியங்கள் கூடிவரும். பங்குச் சந்தை மூலமாகப் பணம் வரும். சிலர், சொந்தத்தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

செவ்வாய் 3 - ம் இடத்தில் ஆட்சி பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால், அறிவின் துணை கொண்டு முன்னேறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் ஒற்றுமை பலப்படும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். புதிதாக வீடு வாங்குவீர்கள். கர்ப்பிணிகள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் கவனம் தேவை. கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் சமரசம் செய்துகொள்ள வேண்டாம்.

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் தருணம் இது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ராசிபலன்


துலாம்

வழக்குகளில் வெற்றி கிடைக்கும்

சனி சாதகமாக இருப்பதால் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கியத் திட்டங்களைத் தீட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். வழக்கில் வெற்றி கிட்டும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.

பாக்கியாதிபதி புதன் சாதகமாக இருப்பதால் விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வர வேண்டிய பணம் கைக்கு வரும். கடன் பிரச்னை ஒன்றை நினைத்துக் கவலைப்படுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். கலைத்துறையினர் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

சகிப்புத் தன்மையால் முன்னேறும் வேளை இது.

ராசிபலன்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

விருச்சிகம்

கெளரவப் பதவிகள் தேடி வரும்

சூரியனும் செவ்வாயும் வலுவாக இருப்பதால், சவாலான காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணம் பல வழிகளில் வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

உடன் பிறந்தவர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலை அமையும். புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால், அடகிலிருந்த நகையை மீட்டு புதிய டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். கேது வலுவாக இருப்பதால், வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

திடீர்த் திருப்பங்கள் நிறைந்த தருணம் இது.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராசிபலன்


தனுசு

பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டும்

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற சொத்து வாங்குவீர்கள். மகனின் கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். பழைய வீட்டைப் புதிதாக மாற்றி அமைப்பீர்கள். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு.

செவ்வாய் சாதகமாக இருப்பதால், உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வழக்கு சாதகமாகும். தாய்வழி உறவினர்கள் உதவுவார்கள். பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். கலைத் துறையினருக்கு மூத்த கலைஞர்கள் உதவுவார்கள்.

கடின உழைப்பால் இலக்கை எட்டும் நேரம் இது.

ராசிபலன்

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

மகரம்

நினைத்த காரியம் நிறைவேறும்

செவ்வாய் லாப வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். ஓரளவு பணவரவு உண்டு. பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். பங்குச்சந்தை மூலம் பணம் வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துகொள்வீர்கள்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சிலர், இருக்கும் வீட்டை கொஞ்சம் விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். யாருக்கும் ஜாமீன் கையொப்பம் போடாதீர்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். குடும்ப விஷயங்களை வெளியே பகிர்ந்துகொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்களால் லாபத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனாலும், சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் வரும்.

கோபத்தைக் கட்டுப்படுத்தினால் வெற்றிபெறும் வேளை இது.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி 1,2,3-ம் பாதம்

ராசிபலன்


கும்பம்

நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும்

ராஜ கிரகங்களான சனி, குரு மற்றும் சர்ப்ப கிரகமான ராகு வலுவாக இருப்பதால் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். அனுபவ அறிவால் தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். விலையுயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

வெளிவட்டாரம் மகிழ்ச்சி தரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி தொடரும். கல்யாணம், காதுகுத்து என சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சொந்தங்கள் மதிக்கும் அளவுக்கு நடந்துகொள்வீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். ஏளனமாகப் பார்த்த உறவினர்களுக்குத் தகுந்த பதிலடி தருவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். எல்லோரும் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். புதிய முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

உண்மையால் உயரும் தருணம் இது.

ராசிபலன்

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

மீனம்

புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும்


லாப வீட்டில் சூரியனும் கேதுவும் நிற்பதால், திடீர் யோகம் உண்டாகும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் தொடர்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும்.  பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கும் புகழும் கூடும். இளைய சகோதர வகையில் நன்மை உண்டு.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பேச்சால் காரியம் சாதிப்பீர்கள்.  வாழ்க்கைத் துணைவர் வழியில் நல்ல செய்திகள் வரும். புதன் சாதகமாக இருப்பதால் பால்ய நண்பர்கள் தேடி வருவர். கைமாற்றுக் கடனைத் தந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினருக்குக் கடின உழைப்புக்குப் பிறகே அங்கீகாரம் கிடைக்கும்.

நட்பால் ஆதாயம் அடையும் வேளை இது.