மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்பிப்ரவரி 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

குடும்பம்: சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். திடீர்ப் பயணங்கள் இருக்கும். பிள்ளைகள் நீண்ட நாள்களாகக் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள்.

ராசி பலன்கள்வியாபாரம்: பழைய பாக்கிகள் வசூலாகும் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

உத்தியோகம்: புதிய சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.

  வெற்றிக்கு வித்திடும் நேரமிது.

ராசி பலன்கள்

குடும்பம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். பணவரவு திருப்தி தரும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்வு கிடைக்கும். சகோதரர்களால் பயனடைவீர்கள். தடைகள் விலகும். பிரபலங்கள் உதவுவார்கள். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். 

வியாபாரம்:
புதிய முதலீடுகள் செய்வது குறித்து யோசிப்பீர்கள். வாடிக்கையாளர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள்.

உத்தியோகம்: பல வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.  

 எதிர்பார்ப்புகள் நிறைவேறும் காலமிது.

குடும்பம்: புகழ், கௌரவம் உயரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சொந்தபந்தங்களின் சுய ரூபத் தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். பிள்ளைகளின் தனித் திறமைகளைக் கண்டறிவீர்கள்.

ராசி பலன்கள்வியாபாரம்: வேலையாட்களை அவர்களின் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. 

உத்தியோகம்:
மேலதிகாரி உங்களை நம்பி, சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.

 திடீர் திருப்பங்கள் நிறைந்த வேளையிது.

ராசி பலன்கள்

குடும்பம்: சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் பிறக்கும். வி.ஐ.பி-க்களின் நட்பு கிடைக்கும். உற்சாகமாக பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடன் பிரச்னையிலிருந்து விடுபடுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.

வியாபாரம்: வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து செயல்படுவீர்கள்.

உத்தியோகம்: அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்துங்கள். 
    
 திட்டமிட்ட யாவும் தடையின்றி முடிவடையும் தருணமிது.

குடும்பம்: எதிலும் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. வழக்கு சாதகமாக முடியும். உறவினர், நண்பர்களுடனான மோதல்கள் விலகும். அரசாங்க காரியங்கள் சற்றுத் தாமதமாகி முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். 

ராசி பலன்கள்வியாபாரம்: சூழ்ச்சிகளை முறியடிப்பீர் கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்தியோகம்: பணிகளைப் போராடி முடிப்பீர்கள். அதிகாரிகளால் மறைமுகப் பிரச்னைகள் வந்துபோகும்.

 நண்பர்களால் உதவிக்கு வரும் வேளையிது.

ராசி பலன்கள்

குடும்பம்: பணிகள் அனைத்தும் தடையின்றி முடியும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டாகும். பணவரவு திருப்தி தரும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துப்போவது நல்லது. உறவினர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். பிள்ளைகளின் அடி மனதிலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். 

வியாபாரம்: கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம்.

உத்தியோகம்: அதிகாரிகள் மனம்விட்டுப் பேசுவார்கள். பல ஆலோசனைகள் தருவீர்கள்.

 சந்தேகத்தைத் தவிர்க்கவேண்டிய காலமிது.

குடும்பம்: நினைத்தது நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும்.

ராசி பலன்கள்வியாபாரம்: பங்குதாரர்கள் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். 

உத்தியோகம்: அமைதியான சூழ் நிலை உருவாகும். சக ஊழியர்களுடனான மோதல்கள் விலகும்.

 தன்னம்பிக்கை துளிர்விடும் தருணமிது.

ராசி பலன்கள்

குடும்பம்: உங்கள் பிடிவாதப் போக்கைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்வீர்கள். பழைய சிக்கல்களைத் தீர்ப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.   
   
வியாபாரம்: புது ஏஜென்சி எடுப்பீர் கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.    

உத்தியோகம்: சக ஊழியர்கள் விவ காரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.

 ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது.

குடும்பம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிரபலங்கள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். அரசால் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். செலவுகள், வேலைச்சுமை கூடும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்லவிதத்தில் முடிவடையும்.

ராசி பலன்கள்வியாபாரம்: வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். கடையை மாற்றுவது குறித்து யோசிப்பீர்கள்.

உத்தியோகம்: இடமாற்றம் உண்டு. சக ஊழியர் களால் பிரச்னைகள் வெடிக்கும்.

 தடைகளையும் தாண்டி முன்னேறும் காலமிது.

ராசி பலன்கள்

குடும்பம்: உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். வங்கிக் கடன் கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள். திடீர் யோகம், பணவரவு உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள்.  
     
வியாபாரம்: பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள்.

உத்தியோகம்:
நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.

 அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும் வேளையிது.

குடும்பம்: உங்கள் கை ஓங்கும். பணவரவு அதிகரிக்கும். வெற்றிபெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.

ராசி பலன்கள்வியாபாரம்: அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

உத்தியோகம்: மின்னல் வேகத்தில் செயல்பட்டு அதிகாரிகளை ஆச்சர்யப்படுத்துவீர்கள்.

 புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் தருணமிது.

ராசி பலன்கள்

குடும்பம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தடைகளெல்லாம் விலகும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் நட்புவட்டம் விரிவடையும்.

வியாபாரம்:
புதிதாக சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.

உத்தியோகம்: மூத்த அதிகாரி உங்களுக்குப் புதிய பொறுப்புகளை வழங்குவார்.

 எதையும் சாதிக்க முயலும் நேரமிது.