Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

பிப்ரவரி 13 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

பிப்ரவரி 13 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன்மேஷம்

மரியாதை கூடும்

லாப வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் வலுவாக அமர்ந்திருப்பதால், செல்வாக்குக் கூடும். அனுபவ அறிவினால் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளால் மரியாதை கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். மகனுக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் புதிய வேலை அமையும். புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள்.
கூடுதலாக வேலை பார்க்கவேண்டி வரும். வீண் அலைச்சல்கள் அதிகமாகும். திடீர் பயணங்களால் செலவுகள் உண்டாகும். அவ்வப்போது தூக்கம் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகஊழியர்கள் தங்களின் திறமையை மனதாரப் பாராட்டுவார்கள். கலைத்துறையி னருக்கு வெளிநாட்டு நிறுவனங்களி லிருந்து வாய்ப்பு வரும்.

நினைத்ததை முடிக்கும் தருணமிது.

ராசிபலன்

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

புது வீடு வாங்குவீர்கள்


சூரியன் 10 -ம் வீட்டில் வலுவாக அமர்ந்ததால், இழுபறியாக இருந்த காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். மேல் நிலை அரசியல்வாதிகள் உதவுவார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பெற்றோரின் உடல் நலம் சீராகும். புதிய வாகனம் வாங்குவீர்கள். பூர்வ புண்ணியாதிபதி புதன், சாதகமான வீடுகளில் செல்வதால், பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.  பழைய இடத்தை விற்று, புது வீடு வாங்குவீர்கள்.

தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேருவார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். பிள்ளைகள் உயர்கல்வியைத் தொடர்வார்கள். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்த தோழியைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பனிப்போர் நீங்கும். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினருக்கு  ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் தருணமிது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராசிபலன்மிதுனம்


நட்பு வட்டம் விரியும்.


சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், தைரியம் கூடும். மனோபலம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனத்தைச் சீர்செய்வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். அநாவசியச் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். புதிய வீடு, மனை வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

நண்பர்களால் ஆதாயம் உண்டு.உடல்நலனில் அக்கறை தேவை.தடைபட்ட காரியம் மெதுவாக நடந்தேறும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தை அதிகரிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். கலைத்துறையினர், விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

தொலைநோக்குச் சிந்தனையால் முன்னேறும் நேரமிது.

ராசிபலன்

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

கடகம்

சுபநிகழ்ச்சிகள் தொடரும்.


குருபகவான் அதிசார வக்கிரமடைந்து ராசிக்கு 5 - ம் வீட்டில் நுழைவதால், எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். தன்னம்பிக்கை அதிகமாகும். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்க, வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிநாட்டிலிருப்பவர் களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத் தில் எதிர்பார்த்த லாபம் வரும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

புதிய பாதையில் பயணித்து வெற்றி பெறும் வேளையிது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன்சிம்மம்

அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்கள் பேச்சில் கனிவு கூடும். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். பிள்ளைகள் உங்கள் அருமை யைப் புரிந்துகொள்வார்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். விலை உயர்ந்த சமையலறைச் சாதனங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.

சகோதரியின் திருமணத்தை முன்னின்று முடிப்பீர்கள். பாதி பணம் தந்து முடிக்கப்படாம லிருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். கேது வலுவாக அமர்ந்திருப்பதால், அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவர்களுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத் தில் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் புகழடைவார்கள்.

சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறும் காலமிது.

ராசிபலன்

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

கன்னி

ஆதாயம் உண்டு.


ராகு வலுவாக இருப்பதால், பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஷேர் - மார்க்கெட் லாபம் தரும். திடீர் பணவரவு உண்டு. வீடு, வாகன வசதி பெருகும். திடீர் திருப்பம் உண்டாகும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். அரசால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல் நலம் சீராகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.  பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும்.

ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைச் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். மனைவி வழி சொந்தங்களால் ஆதாயம் உண்டு. மகன், மகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.  வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள்.உத்தியோகத்தில் வேலைப்பளு சற்று அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நலம். கலைத்துறையினர் கவனமாக இருபது நல்லது.

காரியத்தில் கவனம் செலுத்தவேண்டிய தருணமிது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ராசிபலன்துலாம்

ஒத்துழைப்பு அதிகரிக்கும்.


புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களுடைய அணுகு முறையை மாற்றுவீர்கள். பணப்புழக்கம் உண்டு. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். உடல் நலம் சீராகும். தோற்றப் பொலிவு கூடும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவார்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

எதிர்பாராத வகையில் பணவரவு அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்து, லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிரடி முன்னேற்றம் உண்டாகும் வேளையிது.

ராசிபலன்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

விருச்சிகம்

மதிப்புக் கூடும்


சப்தமாதிபதி சுக்கிரன் சாதகமாக இருப்பதால், புதிய முயற்சிகள் யாவும் நிறைவேறும். பிரபலங்கள் நண்பர்களா வார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. அழகு, இளமை கூடும். பிள்ளைகளிடம் மறைந்திருந்த திறமைகளை இனம் கண்டறிவீர்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு அறையைக் கட்டுவீர்கள். மகனுக்கு உங்கள் ரசனைக்கேற்ற மணப்பெண் அமையும். சூரியனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள்.

 உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். டிரெஸ்ட், சங்கங்கள் தொடங்குவீர்கள். வேண்டிக்கொண்டபடி கோயிலில் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள், ஈகோ பிரச்னையைத் தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் கவனம் தேவை. கலைத்துறையினர் காத்திருந்து போராட வேண்டும்.

உத்தியோகத்தில் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கப் போராட வேண்டிய நேரமிது

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராசிபலன்தனுசு

யோகம் உண்டாகும்


புதன் சாதகமாக இருப்பதால், நிர்வாகத் திறன் கூடும். ஓரளவு பணம் வரும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதி லிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை எடுத்து நடத்துவீர்கள். சூரியனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் திடீர் யோகம் உண்டாகும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு.

பிதுர்வழி சொத்து கைக்கு வரும். வழக்கால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தடைப்பட்ட வீடு கட்டும் பணி விரைந்து முடியும். குரு 12-ல் அதிசார வக்ரமடைவதால் குறுக்கு வழியில் ஆதாயம் தேட வேண்டாம். பணப்பற்றாக்குறை நீடிக்கும். பயணங்கள் அதிகமாகும். ராசிக்குள் சனி நிற்பதால் சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளை யோசித்து செய்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

ராசிபலன்

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

மகரம்

வருமானம் உயரும்.

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் சிலர் உங்களுக்கு உதவி செய்வார்கள். வெளியூர் பயணங்களால் திருப்தி உண்டாகும். வாழ்வின் சூட்சுமத்தை உணர்வீர்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு.  திடீர் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானம் உயரும். காரியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.

கணவன், மனைவிக்குள் நிலவி வந்த மோதல்கள் விலகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கல்யாணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் ஆதரவாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.  கலைத்துறையினருக்கு, மூத்த கலைஞர்களின் ஆதரவு கிட்டும்.

அனுபவ அறிவால் சாதிக்கும் வேளையிது. 

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம் 

ராசிபலன்கும்பம்

புத்துணர்ச்சி பெருகும்.

உங்களது ராசி நாதன் சனிபகவான் லாப வீட்டில் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்துக்கொண்டிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். புது சொத்து வாங்குவீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புத்துணர்ச்சி பெருகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். பிரியமானவர் களைச் சந்திப்பீர்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்காதீர்கள். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் ஆதாயம் இருக்கும். தேங்கிக் கிடக்கும் சரக்குகளை, சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். கலைத்துறையினருக்கு சம்பள பாக்கி கைக்கு வரும்.

அனுசரித்துப் போவதால் வெற்றி பெறும் நேரமிது.

ராசிபலன்

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

மீனம்

பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

14 -ம்  தேதி முதல் உங்களுடைய ராசிநாதன் குரு பகவான்  9 - ம் வீட்டில் நுழைவதால் தொட்டது துலங்கும். மனக்குழப்பம் நீங்கி, தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். புதிய வேலை, பதவிக்குத் தேர்தெடுக்கப் படுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளை களின் நட்பு வட்டம் விரியும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.

 பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவிகள் உண்டு. நண்பர்களின் ஆதரவுக்கிட்டும். இளைஞர்கள், பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில், அதிகாரிகள் உங்களுடைய கடின உழைப்பைப் புரிந்து கொள்வார்கள். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

உழைப்பால் உயரும் வேளையிது.