Published:Updated:

கன்னி ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சிப் பலன்கள்! -கே.பி.வித்யாதரன் #Video

குருபகவான் இருக்கக்கூடிய காலக்கட்டத்தில் நீங்கள் நிதானமாகவும்,கவனமாகவும் இருப்பது நல்லது. ஏன்?

கன்னி ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சிப் பலன்கள்! -கே.பி.வித்யாதரன் #Video
கன்னி ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சிப் பலன்கள்! -கே.பி.வித்யாதரன் #Video

ங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2 - ம் வீட்டில் அமர்ந்துகொண்டு  தனம், தானிய,சம்பத்தையும் சமூகத்தில் அந்தஸ்தையும், வசதிவாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 4.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 3 - ம் வீட்டில் அமர்கிறார். இந்த  வீட்டில் குருபகவான் இருக்கக்கூடிய காலக்கட்டத்தில் நீங்கள் நிதானமாகவும்,கவனமாகவும் இருப்பது நல்லது. 

நீங்கள் ஒன்றைச் சொல்லப்போக, அதை மற்றவர்கள் வேறு மாதிரியாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு இருப்பதால், பேச்சில் கவனம் வையுங்கள். பணம் கொடுக்கல், வாங்கலிலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. எந்த ஒரு வேலையையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இழுபறியாகி இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். 'மூன்றாவது வீட்டு குரு, முட குரு' என்று சொல்வார்கள். நம்மை ஏதாவது ஒருவிதத்தில் முடக்கிப்போடவேச் செய்வார். அதனால், எந்த ஒரு காரியத்தையும்  செய்வதற்கு முன்பாகத் திட்டமிட்டே செய்யுங்கள். 

குரு பகவான் 3 - ம் வீட்டில் இருந்து கொண்டு 7 - ம் வீட்டைப் பார்ப்பதால் கணவன்- மனைவி உறவு பலப்படும். சின்னச்சின்னதாக சில சண்டைகள் வந்தாலும், அதெல்லாம் குடும்ப நன்மைக்குப் பயன்படும் விதமாகத்தான் இருக்கும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிலைத்திருக்கும். 

குரு பகவான் 7-ம் பார்வையாக பாக்கியஸ்தானத்தைப் பார்ப்பதால் பணவரவுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், அதேசமயம் ஒரு பக்கம் செலவுகளும் அதிகமாகிக்கொண்டே போகும். 9-ம் பார்வையாக குரு லாபஸ்தானத்தைப் பார்ப்பதால் புதிதாகத் தொழில் தொடங்குவீர்கள். லாபத்துக்கு எந்தக் குறைவும் இருக்காது. மூத்த சகோதரர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். பிள்ளைகளிடம் அவர்களின் குறைகளை மட்டும் பார்க்காமல், அவர்களை ஊக்குவிக்கும்விதமாக நடந்துகொள்ளுங்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்றி எந்தவித மருந்து, மாத்திரையையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். உறவினர்கள், நண்பர்களிடம் இடைவெளி விட்டுப் பழகுங்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். வியாபாரிகள், வியாபாரத்தின் சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவார்கள். பணியாளர்களிடம் கண்டிப்பு காட்டவேண்டாம். முக்கிய நாட்களில் அவர்கள் விடுமுறை எடுத்துக்கொள்வார்கள். அதுபோன்ற நேரங்களில் வேலைகளை நீங்களே இழுத்துப்போட்டு செய்ய வேண்டி இருக்கும். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். பங்குதாரர்களில் ஒருவர் உங்களை ஆதரித்தாலும், மற்றொருவர் மூலமாக மனவருத்தங்கள் வந்து போகும். 

உத்தியோகத்தைப் பொறுத்தவரை மூத்த அதிகாரியை அனுசரித்துப்போவது நல்லது.  அவருடன் ஈகோ பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பாதால், வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாகவும், அனுசரித்தும் போவது நல்லது. தேர்வில் வெற்றியும், உத்தியோகத்தில் பதவி உயர்வும் கிடைக்கும்.

மாணவ, மாணவிகள் படிப்பில் அக்கறை காட்டுங்கள். விளையாடுகிற நேரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். கணிதம், வேதியியல் பாடங்களைத் திரும்பத் திரும்ப எழுதிப்பாருங்கள். அறிவாற்றல் கூடும். சின்ன சின்னத் தவறுகளையும் திருத்திக் கொள்ளுங்கள்.

பெண்களுக்கு இந்த குருமாற்றம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வகையில் கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திடீரென்று அறிமுகமாகிறவர்களை நம்பி, வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம்.  தங்க நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள். கலைத்துறையினரைப் பொறுத்தவரை சின்னச்சின்ன தடைகளைத் தாண்டி போராடித்தான் வெற்றிபெற வேண்டியிருக்கும். படைப்புகள் வெளியாவதில் தாமதமானாலும் கடைசியில் வெற்றியே கிடைக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி  மாற்றம் சிறுசிறு தடைகளையும், தடுமாற்றங்களையும் தந்தாலும் இடையிடையே வெற்றியையும், மகிழ்ச்சியையும் தரும். 

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மாமண்டூரை அடுத்த வடபாதி எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீசுயம்பு துர்க்கை அம்மனை ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ராகு காலத்தில் சென்று தீபமேற்றி வணங்குங்கள். இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.  இந்த குரு மாற்றம் அமோகமானதாக அமையும்.