மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்பிப்ரவரி 20-ம் தேதி முதல் மார்ச் 5-ம் வரை

மேஷம்: சாதிக்கும் திறன் படைத் தவர்களே... உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் மேலும் அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புதிய வீட்டில் குடிபுகுவீர்கள். 

ராசி பலன்கள்வியாபாரம்: புதிய சலுகைகள் மூலம் பழைய சரக்குகளை விற்பீர்கள்.

உத்தியோகம்: அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும்.

எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

ராசி பலன்கள்

ரிஷபம்: புகழ்ச்சிக்கு மயங்காத வர்களே... உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். புது வேலை அமையும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வீடு, மனை வாங்க முன்பணம் தருவீர்கள். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழிநடத்துவீர்கள்.

வியாபாரம்: புதிய ஒப்பந்தம் கிடைக்கும். லாபம் இரட்டிப்பாகும்.

உத்தியோகம்: பதவி உயர்வு உண்டு. இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள்.

சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள்.

மிதுனம்: மனவலிமை கொண்டவர் களே... வி.ஐ.பி-க்களின் உதவியால் சில விஷயங்களைச் சாதித்துக் காட்டுவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பூர்வீகச்சொத்தைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். அரசாங்க விஷயம் தாமதமாக முடியும். அநாவசியச் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

ராசி பலன்கள்வியாபாரம்:
பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய முதலீடு செய்வீர்கள்.

உத்தியோகம்: பொறுப்புகள் கூடும். அலைச்சல் அதிகமாகும்.

நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும்.

ராசி பலன்கள்

கடகம்: ஆளுமைத் திறன் கொண்ட வர்களே... பிதுர்வழி சொத்துகள் கைக்கு வரும். எதிர்பார்த்திருந்த தொகை வராவிட்டாலும், எதிர்பாராத வகையில் ஓரளவு பணவரவு உண்டு. கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

வியாபாரம்: லாபம் சுமார்தான். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குங்கள்.

உத்தியோகம்:
அதிகாரிகளால் அலைகழிக்கப் பட்டாலும், சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.

சூட்சுமங்களை அறிந்துகொள்வீர்கள்.

சிம்மம்:  எதற்கும் அலட்டிக்கொள்ளா தவர்களே... குடும்பத்தில் அமைதி நிலவும். கைம்மாற்றாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் தனிநபர் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதும் நல்லது.

ராசி பலன்கள்வியாபாரம்:
எதிர்பார்த்ததைவிட லாபம் கூடும். புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள்

உத்தியோகம்:
சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சக ஊழியர்களுக்கு வழிகாட்டுவீர்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

ராசி பலன்கள்

கன்னி: நினைத்ததை நிறை வேற்றுபவர்களே... எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வழக்கில் வெற்றி உண்டு. வீடு கட்ட அனுமதி கிடைக்கும். நவீன மின்னணு, மின்சார சாதனப் பொருள்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர் களுடன் அளவுடன் பழகுவது நல்லது.

வியாபாரம்: அதிரடி சலுகைகள் மூலம் லாபமடை வீர்கள்.

உத்தியோகம்: சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.

சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.

துலாம்: உறவினர்களை மதிப்பவர் களே... குடும்பத்தில் குதூகலம் நிலவும். பூர்வீகச்சொத்தை முறை யாகப் பராமரிப்பது நல்லது. உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். கவலை, தாழ்வுமனப்பான்மை வந்து விலகும். பிள்ளைகளை அவர்கள் போக்கில்விட்டுத் திருத்தவும்.

ராசி பலன்கள்வியாபாரம்: பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள்.

உத்தியோகம்: உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்பட வேண்டாம்.

யோகா, தியானத்தில் மனதைச் செலுத்து வீர்கள்.

ராசி பலன்கள்

விருச்சிகம்: கலை ரசனை கொண்டவர்களே... உங்களின் மதிப்பு மரியாதை கூடும். அதிகார மையத்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் வரும். முடிந்தும் முடியாமல் இருந்த அரசு வேலைகள் உடனே முடியும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வீடு மாறுவீர்கள்.

வியாபாரம்: புது யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வீர்கள்.

உத்தியோகம்:
உங்களின் நிர்வாகத் திறமை கூடும். செல்வாக்கு கூடும்.

புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

தனுசு: எதற்கும் அஞ்சாதவர் களே... உங்களின் முகப்பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். கணவன் மனைவி உறவு பலமாகும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பணவரவு அதிகரிக்கும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.

ராசி பலன்கள்வியாபாரம்: ஏற்றுமதி வகைகளால் லாபம் கூடும்.

உத்தியோகம்: எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.

பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள்.

ராசி பலன்கள்

மகரம்: எல்லாரையும் அனுசரித்துச் செல்பவர்களே... குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரர் வகையில் உதவியுண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.

வியாபாரம்: லாபம் அதிகரிக்கும். வேலையாட்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

உத்தியோகம்:
கூடுதல் நேரம் உழைக்கவேண்டி வரும்.

தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள்.

கும்பம்:  பலரால் நேசிக்கப்படுபவர் களே... எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். ஓரளவு பணவரவு உண்டு. நீங்கள் கொடுக்கும் அறிவுரைகளை ஏற்று, பிள்ளைகள் தேர்வை நல்ல முறையில் எழுதுவார்கள். விலை உயர்ந்த சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.

ராசி பலன்கள்வியாபாரம்:
புதியவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

உத்தியோகம்: எதிலும் அலட்சியம் வேண்டாம்.

அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

ராசி பலன்கள்

மீனம்: அதிகார பலம் கொண்டவர் களே... வி.ஐ.பி-க்களால் ஆதாயம் உண்டு. கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். என்றாலும் கட்டுக்கடங்காத செலவுகள், டென்ஷன் வந்து போகும்.

வியாபாரம்:
போட்டிகள் இருக்கும். லாபமும் அதிகரிக்கும்.

உத்தியோகம்: மேலதிகாரியைப் பற்றிய விமர்சனம் வேண்டாம்.

சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள்.