Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்மார்ச் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

ராசி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்மார்ச் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்: எதிர்பாராத வகையில் பணம் வரும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி கூடும். வழக்குகள் சாதகமாகும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். நிலப் பிரச்னைகளைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்வது நல்லது. 

ராசி பலன்கள்வியாபாரம்:
அனுபவமிக்க வேலையாட்களைத் தேடுவீர்கள். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள்.

உத்தியோகம்:
முக்கிய முடிவுகளைத் தைரியமாக எடுப்பீர்கள். மேலதிகாரிக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள்.

அனைவராலும் மதிக்கப்படுவீர்கள்.

ராசி பலன்கள்

ரிஷபம்: பழைய கடனொன்றை பைசல் செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். திடீர்ச் செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அவசரம் வேண்டாம்; நிதானம் தேவை.

வியாபாரம்: புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத் தைப் பெருக்குவீர்கள். புது பங்குதாரரைச் சேர்ப்பீர்கள்.

உத்தியோகம்: அலுவலகச் சூழ்நிலை அமைதி யாகும். உதாசீனப்படுத்திய உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.

புதிய பொறுப்பும் வாய்ப்புகளும் கதவைத் தட்டும்.

மிதுனம்: பழைய பிரச்னைகளில் ஒன்று முடிவுக்கு வரும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசு விவகாரங்கள் சாதகமாக முடியும். சொந்தபந்தங்களிடையே கலகலப்பாகப் பேசி மகிழ்வீர்கள். புதிய வேலை கிடைக்கும். 

ராசி பலன்கள்வியாபாரம்: புதிய முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகம்: வேலையாட்களால் இருந்துவந்த பிரச்னைகள் நீங்கும். அதிகாரிகளுடன் இருந்த மோதல்கள் விலகும்.

இழுபறி நிலைமாறி ஏற்றம் பெறுவீர்கள்.

ராசி பலன்கள்

கடகம்: தைரியமாகச் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். திடீர்ப் பயணம் அமையும். குடும்ப வருமானம் உயரும்.  துணையிடமும் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்து வீர்கள். உடல் உபாதைகள் விலகும். புதிய எண்ணங்கள் தோன்றும். அண்டை வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது.

வியாபாரம்: வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் நன்றி மறந்து பேசுவார்கள்.

உத்தியோகம்:
அதிகாரிகளால் அலைக்கழிக்கப் பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.

சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்புவட்டம் விரியும். பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் செலவுகள் வரும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும்.

ராசி பலன்கள்வியாபாரம்: 
லாபம் அதிகரிக்கும். வேலையாட்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.

உத்தியோகம்: உங்களின் திறமை வெளிப்படும். சக ஊழியர்களுடன் விவாதங்கள் வந்துபோகும்.

சகிப்புத்தன்மையால் சாதிப்பீர்கள்.

ராசி பலன்கள்

கன்னி: பணவரவு சீராக இருக்கும். எடுத்த வேலையை எப்படியாவது முடித்துவிடுவீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்க கடன் கிடைக்கும்.

வியாபாரம்: சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

உத்தியோகம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

மனோபலத்தால் வெற்றி பெறுவீர்கள்.

துலாம்: அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும். மகளுக்குத் திருமணம்கூடி வரும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயாரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். உறவினர்களிடம் பேசும்போது கவனமாகப் பேசுவது நல்லது.

ராசி பலன்கள்வியாபாரம்:
புதிய வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களை அனுசரித்துப்போவது நல்லது.

உத்தியோகம்:
அதிகாரிகளின் விஷயத்தில் பக்குவமாக நடந்துகொள்வது நல்லது.

உணர்ச்சிவசப்படாமல் இருப்பீர்கள். 

ராசி பலன்கள்

விருச்சிகம்: சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. துணை வரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருள்கள் சேரும். பேச்சில் கடுமை வேண்டாம்.

வியாபாரம்:
வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் புது ஒப்பந்தங்கள் வரும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.

உத்தியோகம்: அதிகாரிகள் உங்கள் திறமைகளை அறிந்துகொள்வார்கள்.

சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு: பணிகளை முடிப்பதில் எந்தவிதத் தயக்கமும் தடுமாற்றமும் இருக்காது. அரசால் அனுகூலமுண்டு. புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வழக்கு விவகாரங்களில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

ராசி பலன்கள்வியாபாரம்: வரவு உயரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும்.

உத்தியோகம்: பதவி உயரும். சம்பளம் கூடும். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.

அச்சம் விலகி அதிகாரம் பெறுவீர்கள்.

ராசி பலன்கள்

மகரம்: திடீர் யோகம் உண்டாகும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். பலவழிகளில் பணம் வந்தாலும் பற்றாக் குறைதான் நீடிக்கும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரம்:
புதிய மாற்றங்களைக் கொண்டுவருவீர் கள். வேலையாட்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம்.

உத்தியோகம்: அதிகாரியிடம் விவாதம் வேண்டாம். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கையால் தலைநிமிருவீர்கள்.

கும்பம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். எதிர்பார்த்த பணம் வரும். தடைப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடையும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளியிடங்களில் நிதானித்துப் பேசுவது நல்லது. 

ராசி பலன்கள்வியாபாரம்: வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகம்: உங்கள் திறமையை அதிகாரிகள் புரிந்துகொள்வார்கள். சக ஊழியர்களுக்காகப் போராடுவீர்கள்.

தட்டுத் தடுமாறி கரையேறுவீர்கள்.

ராசி பலன்கள்

மீனம்: வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவி மனம்விட்டு பேசிக்கொள்வது நல்லது. பூர்வீகச் சொத்தை மீட்பீர்கள். சொந்தங்கள் வலிய வந்து உதவுவார்கள்.

வியாபாரம்: லாபம் சுமாராகத்தான் இருக்கும். வேலையாட்களை அனுசரித்துப்போவது நல்லது.

உத்தியோகம்: பொறுப்பு அதிகரிக்கும். சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம்.

எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.