Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மார்ச் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

மார்ச் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன்மேஷம் 

எதிர்பார்த்த காரியம் நடந்தேறும்!


குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். பழைய கடனை நினைத்து பயம் வரும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சின்னச் சின்ன தடைகள் வரக்கூடும். ராசி நாதன் செவ்வாய், சனியுடன் சேர்ந்து நிற்பதால் தூக்கம் குறையும். வேலை அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று எடுத்து நடத்துவீர்கள்.

எதிர்பார்த்த காரியம் நடந்துமுடியும். பணவரவு எதிர்பார்த்த வகையில் அமையாது. உடல்நலனில் அக்கறை  தேவை. முக்கிய நபர்களின் தொடர்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் உடல்நலனில் அக்கறை தேவை.

வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். போட்டியாளர் களைவிட அதிக லாபம் சம்பாதிக்க புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளைக் கொஞ்சம் போராடி முடிக்கவேண்டி வரும். மேலதிகாரியுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். கலைத் துறை யினருக்கு எதிர்பார்த்த நிறுவனத் திலிருந்து வாய்ப்பு வரும்.

போராடி வெற்றிபெறும் நேரம் இது.

ராசிபலன்

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

வியாபாரம் சூடுபிடிக்கும்


இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நண்பர் களிடமிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்களை வாங்குவீர்கள்.புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தாயார், தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். புதிய வாகனம் வாங்குவீர்கள். செவ்வாயும், சனியும் 8-ம் இடத்தில் சேர்ந்திருப்பதால், சகோதரர்களுடன் பகை வரும். செலவுகள் அதிகமாகும்.

வியாபாரம் சூடுபிடிக்கும். தொழில் ரகசியம் வெளியில் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலையாட்களிடம் கனிவு தேவை. போட்டிகளை சமயோசித புத்தியால் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில், எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். உடன் வேலை செய்வோரிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு வெற்றி கிடைக்கும். 

பிரபலங்களின் உதவியால் முன்னேறும் தருணம் இது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராசிபலன்மிதுனம் 
 
லாபம் அதிகரிக்கும்


பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தடைப்பட்டு நின்றுபோன பல காரியங்கள் வெற்றி கரமாக முடிவடையும். மனஇறுக்கங்கள் நீங்கும். புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

செவ்வாய், சனியுடன் சேர்ந்து 7-ம் இடத்தில் காணப்படுவதால் இறுமல்,  சளித் தொந்தரவு, அலர்ஜி வந்து நீங்கும்.  மருத்துவச் செலவு அதிகரிக் கும். வீடு கட்டும் திட்டம் தள்ளிப்போகும். செய்யும் காரியத்தில் கவனமாக இருக்கவும். 

வியாபாரத்தில் அதிரடியான திட்டங் களால் சாதிப்பீர்கள். வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தேடி வரும். கலைத் துறை யினருக்கு, அவர்களது படைப்புகளால் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

நினைத்த காரியத்தை நடத்தி முடிக்கும் காலம் இது.

ராசிபலன்

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

கடகம்

வழக்குகள் சாதகமாகும்


மனப்போராட்டங்கள் ஓயும். சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். வி.ஐ.பி-கள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டில் கூடுதலாக ஓர் அறை அல்லது தளம் கட்டுவீர்கள். தகப்பனாருடன்  வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

நினைத்தக் காரியம் நடக்கும். குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். ஆன்மிகப் பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும்.செவ்வாயும், சனியும் 6-ம் இடத்தில் நிற்பதால், சகோதர வகையிலும் ஆதாயம் கிடைக்கும்.  குடும்பத்தாரை அனுசரித்துச் செல்வது நல்லது. சொத்து வழக்குகள் சாதகமாக முடியும். வாடகை பாக்கி வசூலாகும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் வந்துசேரும்.

வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில், மேலதிகாரிகளுடன் இணக்கமான போக்கைக் கடைபிடியுங்கள். கலைத் துறையினர், மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவார்கள்.

ரகசியம் காக்க வேண்டிய வேளை இது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன்சிம்மம்

பழைய கடனில் ஒரு பகுதி அடைபடும்


சுக்கிரனும், புதனும் 8-ம் இடத்தில் மறைந்திருப்பதால், செலவுகள் கூடிக்கொண்டே போகும். பழுதான மின்சார சாதனங்கள், சமையலறைச் சாதனங்களைச் சரி செய்வீர்கள். ராசிக்கு 5-ம் இடத்தில் செவ்வாயும், சனியும் சேர்ந்து நிற்பதால், இனந்தெரியாத மனக்கவலைகள், எதிர்காலம் குறித்த பயம் வந்து போகும்.

ஞானகாரகன் கேது சாதகமாக இருப்பதால், வெளிநாட்டில்  இருப்பவர்கள் உதவுவர். குழந்தைகள் உங்கள் எண்ணத்தை அறிந்து செயல் படுவார்கள். அக்கம்பக்கத்தாருடன் இணக்கம் உருவாகும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். பணவரவு இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும்.

வியாபாரம் செழிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். பங்குதாரர்கள் மதிப்பர். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பழைய பிரச்னைகள் யாவும் தீரும் நேரம் இது.

ராசிபலன்

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

கன்னி

கல்யாண முயற்சிகள் வெற்றி பெறும்


சுக்கிரனும், ராசிநாதன் புதனும் ராசியைப் பார்ப்பதால், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். சிலர் புதிய வாகனம்  வாங்குவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். 

சூரியன் 14-ம் தேதி முதல் 7-ம் இடத்தில் அமர்வதால், குடும்பத்தில் நீங்கள் அனுசரித்துப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் இடத்தில் செவ்வாயும், சனியும் சேர்ந் திருப்பதால் வாயுக் கோளாறால் வயிற்று வலி, நெஞ்சு வலி ஆகியன வந்துபோகும்.

வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை எளிதில் சமாளிப்பீர்கள். வாடிக்கையாளர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சிறு தடங்கல்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். கலைத் துறை யினருக்குத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

விடாமுயற்சியால் வெற்றி பெறும் தருணம் இது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ராசிபலன்துலாம்

மகனுக்கு வேலை கிடைக்கும்


செவ்வாய் 3-ம் இடத்தில் நிற்பதால், புதுத் தெம்பு பிறக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஆனால், சூரியன் சாதகமாக இருப்பதால், பிள்ளைகளுடன் இருந்து வந்த கருத்துமோதல்கள் விலகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத் தில் நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைக்கும்.
 
சிலருக்கு அயல்நாட்டில் உயர்கல்வி, உத்தியோகம் அமைய வாய்ப்பிருக்கிறது.  குடும்பத்தில் எதிர்பாராத வகையில் மருத்துவச் செலவு அதிகரிக்கும்.மனைவியுடன் கருத்துமோதல்கள் வந்துபோகும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களது திறமையை அறிந்து பாராட்டுவர். கலைத்துறையினர் சம்பள விஷயத்தில்  முன் எச்சரிக்கை யாக செயல்படுவது நல்லது.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் காலம் இது.

ராசிபலன்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

விருச்சிகம்
 
புதிய ஒப்பந்தங்கள் லாபம் தரும்


புதன் சாதகமாக இருப்பதால் நண்பர்கள், உறவினர்கள் தேடி வருவார்கள். வாழ்க்கைத்துணைவரின் உறவினர்களால் ஆதாயம் உண்டு. மூத்த சகோதரர் உங்களின் நிலை அறிந்து உதவுவார். வெகுநாள்களாகப் போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று  வழிபட்டு வருவீர்கள்.

சூரியன் 14-ம் தேதி முதல் 5-ம் இடத்தில்  நிற்பதால், பிள்ளைகளால் அலைச்சல், செலவினங்கள் அதிகம் ஆகும். செவ்வாயும், சனியும் 2-ம் இடத்தில் சேர்ந்து நிற்பதால், பேச்சில் நிதானம் அவசியம். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்திலும் கறாராக இருங்கள். சகோதரர்களால் மன சஞ்சலங்கள் அதிகரிக்கும். சிலர், குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள்.

வியாபாரத்தில் புது ஒப்பந்தங் களால் லாபம் பெருகும்.  வாடிக்கை யாளர்களைக் கவர புதிய திட்டங்களை அறிவிப்பீர்கள் உத்தியோகத்தில் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண் டாம். கலைத் துறையினர், சக கலைஞர் களிடம் கவனமாக இருக்கவேண்டும்.

எதிலும் விட்டுக்கொடுக்க  வேண்டிய வேளை இது.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராசிபலன்தனுசு

வீடு வாங்கும் யோகம் உண்டாகும்


சுக்கிரன், சூரியன், புதன் சாதகமாக இருப்பதால், தடைப்பட்ட காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். மனக்குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் அமைப்பு உண்டாகும்.

சொந்த ஊரில் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பணவரவு அதிகரிக்கும். உங்கள் ராசியிலேயே செவ்வாயும், சனியும் அமர்ந்திருப்பதால் முன்கோப மும் சலிப்பும் வந்துபோகும். எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளா தீர்கள்.

வியாபாரத்தில், சில நுணுக் கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வி.ஐ.பிகள் உங்களின் வாடிக்கை யாளர்களாவாகள். உத்தியோகத்தில் இடமாற்றம், மூத்த அதிகாரியுடன் மோதல்கள் வந்துபோகும். முக்கிய அதிகாரிகள் உங்களிடம் இணக்கமாக நடந்துகொள்வர். கலைத் துறை யினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும்; பொருளாதாரம் உயரும்.

முயற்சியால் முன்னேற்றம் உண்டாகும் காலம் இது.

ராசிபலன்

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

மகரம்


வழக்கு நிலவரம் சாதகமாகும்


புதன், சுக்கிரன், சூரியன், ஆகிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால், பேசுவதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். பேச்சிலே ஒரு தெளிவு உண்டாகும். அனுபவபூர்வமாகவும், அறிவுபூர்வமாக வும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். கோபம் குறையும். பணவரவு அதிகரிக்கும். வி.ஐ.பி-கள் உதவுவர். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். இழுபறியாக இருந்த வழக்கு களில் நல்ல மாற்றம் ஏற்படும்.

ராசிநாதன் சனியுடன் செவ்வாய் சேர்ந்து ராசிக்கு 12-ம் இடத்தில் மறைந்திருப்பதால், வேலைச்சுமை இருக்கும். தூக்கமும் குறையும். சகோதரர்களால் அதிருப்தி அடைவீர்கள். திடீர்ப் பயணங்களால் திணறுவீர்கள். சொந்த ஊரில் உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும். 

எடுத்தக் காரியம் வெற்றி பெறும். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வர். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத் தில், சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். கலைத் துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பையும் ஆதரவையும் பெறுவார்கள்.

பழைய நண்பர்களால் முன்னேறும் தருணம் இது.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

ராசிபலன்கும்பம்

புதிய வாய்ப்புகள் தேடி வரும்


சூரியன் 14-ம் தேதி முதல் 2-ம் இடத்தில் நிற்பதால், பேச்சில் கடுமை, முன்கோபம் வேண்டாம். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீடு, மனை வாங்குவதும் விற்பதும் தடையின்றி முடியும். உங்கள் ரசனைப்படி வீடு அமையும். வீடு கட்ட அரசிடமிருந்து அனுமதி கிடைக்கும். வாகனப் பழுது சீராகும். செவ்வாய், சனியுடன் சேர்ந்து நிற்பதால், வீட்டு மனை வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது.

தடைப்பட்ட காரியங்கள் இனி சுமுகமாக நடந்தேறும். வீடுகட்ட லோன் கிடைக்கும். பணவரவு கணிசமாக அதிகரிக்கும். உயர்கல்வி, உத்தியோகம் காரணமாக பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிய நேரிடும். மனைவியிடம் கருத்து மோதல்கள் வந்து போகும். 
 
வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத் தில் மறதியால் பிரச்னைகள் வந்து போகும். கலைத் துறையினருக்கு புதிய நிறுவனங்களிடம் இருந்து அழைப்பு வரும். அதன் மூலம் சிறப்பான எதிர்காலம் அமையும்.

தடைகள் நீங்கி உச்சத்தை நோக்கி நகரும் காலம் இது.

ராசிபலன்

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

மீனம்

ஆபரணங்கள் சேரும் 


சூரியன் 14-ம் தேதி முதல் ராசிக்குள்ளேயே நிற்பதால், ஆரோக் கியத்தில் அக்கறை தேவை. அவசர முடிவுகள் வேண்டாம். முன்கோபத்தைத் தவிருங்கள். ராசிக்குள் சுக்கிரனும், புதனும் நிற்பதால் அழகு, இளமை கூடும். ஓரளவு பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த வழி கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கு வீர்கள். வாகன வசதி பெருகும்.

செவ்வாயும், சனியும் சேர்ந்திருப் பதால் வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். சகோதர வகையில் சிக்கல்கள் வந்து நீங்கும். பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். கடையை விரிவுபடுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கூடும். வேலையில் கூடுதல் கவனம் செலுத் தவும். கலைத் துறையினருக்கு திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு  உருவாகும்.

குடும்ப வருமானத்தை உயர்த்தும் காலம் இது.