Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்மார்ச் 20-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை

ராசி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்மார்ச் 20-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்: பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்த கவலைகள் வந்துபோகும். பணவரவு திருப்தி தரும். வீடு கட்டுவதற்கு, வாங்குவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். தோற்றப் பொலிவு கூடும். மற்றவருக்குப் பணம், நகை வாங்கித் தருவதில் நீங்கள் ஈடுபட வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் சுமுகமாகத் தீர்வு காண்பது நல்லது. 

ராசி பலன்கள்



வியாபாரம்: புதிய தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

உத்தியோகம்: வேலைச்சுமையால் மன இறுக்கம் அதிகரிக்கும்.

மன்னிக்கும் மனப்பான்மை அதிகரிக்கும்.

ராசி பலன்கள்

ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். விலை உயர்ந்த நகைகள் வாங்குவீர்கள். மின்னணு சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

வியாபாரம்: எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகம்: உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.

வசதி வாய்ப்புகள் பெருகும்.

மிதுனம்: சாதிக்கும் துணிச்சல் வரும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர் களுக்கு நல்ல பதில் வரும். அதிக வட்டிக் கடனை, குறைந்த வட்டிக்கு மாற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் வீண் விவாதங்கள் வந்துபோகும். 

ராசி பலன்கள்



வியாபாரம்: கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.

உத்தியோகம்: ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்கவேண்டி வரும்.

சமூகத்தில் உங்கள் செல்வாக்கு கூடும்.

ராசி பலன்கள்

கடகம்: உங்களின் பிடிவாதப் போக்கைக் கொஞ்சம் மாற்றிக்கொள்வீர் கள். தடைப்பட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்தைச் சரி செய்வீர்கள். உறவினர்கள், தோழிகளில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். நிலுவையில் இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

வியாபாரம்: அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.

உத்தியோகம்: சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

எதிர்பாராத திடீர்த் திருப்பங்கள் உண்டாகும்.

சிம்மம்: வாகனப் பழுதைச் சரிசெய்வீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேச வேண்டாம். உறவினர்கள், நண்பர்களுடன் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பழகாதீர்கள். 

ராசி பலன்கள்



வியாபாரம்: வியாபாரத்தில் வரவு கணிசமாக உயரும்.

உத்தியோகம்: அலுவலகத்தில் உங்கள் கருத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

தொட்ட காரியங்கள் துலங்கும்.

ராசி பலன்கள்

கன்னி: மறைந்துகிடந்த திறமைகள் வெளிப்படும். தோற்றப்பொலிவு கூடும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பூர்வீகச் சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். என்றாலும், செலவினங்கள் அதிகமாகிக் கொண்டே போகும். தாய்வழி உறவினர்களுடன்  வாக்கு வாதம் செய்ய வேண்டாம்.

வியாபாரம்: வியாபாரத்தில் போட்டியாளரைச் சமாளிக்க வேண்டிவரும்.

உத்தியோகம்: தவறுகளை அதிகாரிகள் சுட்டிக் காட்டினால், அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

செலவுகள் அதிகரிக்கும்.

துலாம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும், எதிர்பாராத வகையில் பணம் வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வேலைச்சுமை அதிகரிக்கும். இனம் தெரியாத கவலை வரும். வீட்டில் கழிவுநீர், குடிநீர்ப் பிரச்னைகள் வந்துபோகும். 

ராசி பலன்கள்



வியாபாரம்: அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடை வீர்கள்.

உத்தியோகம்: அலுவலகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சொந்தபந்தங்களின் சுயரூபத்தை அறிவீர்கள்.

ராசி பலன்கள்

விருச்சிகம்: உங்கள் ரசனை மாறும். கைமாற்றாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். புது வீடு வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடியுங்கள்.

வியாபாரம்: வியாபாரத்தில் பணியாளர்களை மாற்று வீர்கள்.

உத்தியோகம்: உத்தியோகத்தில் சின்னச் சின்ன இடர்பாடுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.

புதிய பொறுப்புகளால் வேலைச்சுமை கூடும்.

தனுசு: புதிய பாதை தெரியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வீடு, மனை வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் செல் வந்தர்களின் நட்பு கிடைக்கும். உடல் சோர்வு ஏற்படும். தியானம், யோகா செய்வது நல்லது. யாரையும் யாருக்காகவும் பரிந்துரை செய்ய வேண்டாம். அக்கம்பக்கம் வீட்டாரிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டாம். 

ராசி பலன்கள்



வியாபாரம்: பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேருவார்கள்.

உத்தியோகம்: அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

சமூக அந்தஸ்து உயரும்.

ராசி பலன்கள்

மகரம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுங்கள்.

வியாபாரம்: விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும்.

உத்தியோகம்:
உங்கள் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க தாமதமாகும்.

வெற்றிப் பயணத்தைத் தொடங்குவீர்கள்.

கும்பம்: வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். வேற்று மதத்தவர், மொழியினர் உதவி கிடைக்கும். உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். வழக்கு விஷயங்களைக் கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். உறவினர் வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும்.

ராசி பலன்கள்



வியாபாரம்:
வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு.

உத்தியோகம்: அலுவலகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

ராசி பலன்கள்

மீனம்: வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.  நவீன சமையலறைச் சாதனங்கள் வாங்குவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். வாகனப் பழுதைச் சரிசெய்வீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். செலவுகளும் அதற்கேற்ப அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம்.

வியாபாரம்: வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குங்கள்.

உத்தியோகம்: அலுவலகத்தில் உயரதிகாரி உங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்.

முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.