Published:Updated:

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012

ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறையில் மேல்நோக்கு கொண்ட உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, அஷ்டமி திதி, வரீயான் நாமயோகம், பத்திரை நாமகரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்தயோக நன்னாளில் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்ட நேரம் நள்ளிரவு 12.34 நிமிடத்துக்கு 1.1.2012-ம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி தன்னம்பிக்கை கிரகமான புதனின் ஆதிக்கத்தில் (2 0 1 2=5) இந்த ஆண்டு பிறப்பதால், மக்களிடையே சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும்... அதிகம் சம்பாதிக்க வேண்டும், அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற விருப்பமும்  மேலோங்கும்.

கற்பூர புத்தி உள்ளவர்களே !  

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012
##~##

உங்களுக்கு 12-வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்து வேலைகளும், பயணங்களும் தொடர்ந்து கொண்டே போகும். மே 16 வரை குரு உங்கள் ராசிக்குள் நிற்பதால், கணவருடன் கொஞ்சம் மனத்தாங்கல் ஏற்படும். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. ஜூன் மாதம் வரை பிள்ளைகளால் அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் இழப்புகள் வரக்கூடும். மே 17-ம் தேதி முதல் குரு 2-ம் வீட்டில் நுழைவதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவர் மற்றும் உறவினர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். வீடு கட்ட லோன் கிடைக்கும். கடன் பிரச்னை குறையும். புது வேலை கிடைக்கும். சமையலறையை நவீன மயமாக்குவீர்கள். ராகு, கேதுவின் போக்கு தொடர்ந்து சரியில்லாததால்,  நம்பிக்கையின்மை, உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது.  உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சம்பள உயர்வு, புது வாய்ப்புகள் தேடி வரும்.

வருடத்தின் முற்பகுதி உங்களை முணுமுணுக்க வைத்தாலும், பிற்பகுதி அனைத்திலும் சாதிக்க வைக்கும்.

உழைப்பால் சாதிப்பவர்களே !

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012

உங்கள் பிரபல யோகாதிபதியின் நட்சத்திரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால், நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். சிலர் புது வீட்டில் குடிபுகுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆசைப்பட்ட டிசைனில் நகை வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உங்களுக்கு லாப வீடான பதினோராம் வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால், நல்ல வேலை கிடைக்கும். 12-ல் மறைந்திருக்கும் குருபகவான் மே 17-ம் தேதி முதல் உங்கள் ராசிக்குள் நுழைவதால்... உடல் உபாதை, முன்கோபம் வந்து போகும். மற்றபடி உங்கள் வளர்ச்சி தடைபடாது. வருடப் பிறப்பு முதல் 7-ல் ராகுவும், ராசிக்குள் கேதுவும் நீடிப்பதால்... விரக்தி,  சோர்வு வந்து நீங்கும். டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் ராகுபகவான் 6-ம் வீட்டுக்கும், கேதுபகவான் 12-ம் வீட்டுக்கும் பெயர்ச்சியடைவதால், கணவரின் ஆரோக்கியம் சீராகும். திடீர் பணவரவு உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.  உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும்... சம்பள உயர்வு, பதவி உயர்வு தடைபடாமல் கிடைக்கும்.  

இந்தப் புத்தாண்டு உங்களை புகழ்பட வாழ வைப்பதுடன், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாகவும் அமையும்.

இரக்க குணம் அதிகமுள்ளவர்களே !

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012

உங்களின் பாக்யாதிபதியான சனிபகவானின் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், குடும்பத்தில் அமைதி நிலவும். பணத்தட்டுப்பாடு நீங்கும். ஜூன் மாதம் வரை செவ்வாய் வலுவாக இருப்பதால், புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். இந்த வருடம் முழுக்க குருபகவான் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். கணவரின் வருமானம் உயரும். இந்த ஆண்டு உங்களுக்கு பத்தாவது ராசியில் பிறப்பதால், அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் ராகுபகவான் 5-ம் வீட்டுக்கும், கேதுபகவான் லாப வீட்டுக்கும் பெயர்ச்சி அடைவதால்... அலுப்பு, சலிப்பு நீங்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.  

இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் வசந்தத்தை வரவழைக்கும்.  

புதுமை விரும்பிகளே !

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012

உங்கள் ராசிநாதனான சந்திரன் 9-ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால்... கலக்கம் நீங்கி, உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வரும். மே 16-ம் தேதி வரை எதிலும் இழுபறியான நிலை, ஏமாற்றங்கள் ஏற்படலாம். மே 17-ம் தேதி முதல் குருபகவான் லாப வீட்டில் அமர்வதால், தடைகள் யாவும் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். ஆடை, அணிகலன் சேரும். வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் தடையின்றி முடியும். டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் வீட்டிலும் நுழைவதால், அலைச்சல் இருக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அடுத்தடுத்து லாபம் உண்டு. தாமதமான ஒப்பந்தங்கள் உடனடியாக கையெழுத்தாகும். உத்யோகத்தில் மே 16-ம் தேதி வரை வேலைச்சுமை, இடமாற்றம், சிறு சிறு அவமானம் வந்தாலும், மே 17 முதல் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.

வருடத்தின் முற்பகுதி கொஞ்சம் தடுமாற வைத்தாலும், பிற்பகுதி வெற்றிக் கனியை சுவைக்க வைக்கும்.      

அதிகாரத்துக்கு அடிபணியாதவர்களே!

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012

குருபகவான் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. வீடு, மனை அமையும். சிலருக்கு பெரிய பதவிகள் தேடி வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. உங்களுக்கு 8-வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால்... அலைச்சலும், சேமிக்க முடியாதபடி செலவுகளும் அவ்வப்போது இருக்கும். எதிர்பாராத பயணங்கள் உண்டு. மே 17-ம் தேதி முதல் 10-ம் வீட்டில் குரு அமர்வதால், உத்யோகத்தில் இடமாற்றம், சிறு சிறு ஏமாற்றம் இருக்கும். சனி 3-ம் வீட்டில் வலுவாக நிற்பதால், புது முயற்சிகள் பலிதமாகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ராகு, கேதுவால் வேலைச்சுமை இருக்கும். மற்றவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் நீங்களே எதையும் செய்வது நல்லது. வியாபாரத்தை புது முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். வி.ஐ.பி-க்களும் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாக பழகுங்கள்.      

நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றும் வருடமிது.

கனிவாகப் பேசி காய் நகர்த்துபவர்களே!

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012

உங்கள் பிரபல யோகாதிபதி சுக்கிரன் 5-ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், பிள்ளை பாக்கியம் உண்டாகும். பூர்விக சொத்து கைக்கு வரும். கணவர் உங்கள் மீது தனி அக்கறை காட்டுவார். உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், உடல் உபாதையில் இருந்து விடுபடுவீர்கள். இழந்த செல்வம், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மே 17-ம் தேதி முதல் குரு 9-ம் வீட்டில் நுழைவதால், விலகிச் சென்ற உறவினர், தோழிகள் உங்களைப் புரிந்து கொண்டு வலிய வந்துப் பேசுவார்கள். வீடு வாங்க, வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பாதச் சனி தொடர்வதால், பேச்சில் காரம் வேண்டாம். ராகுபகவான் 3-ல் வலுவாக நிற்பதால், திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

தொட்ட காரியங்கள் துலங்கி, பெரிய அந்தஸ்தைப் பெறும் வருடமிது.

பிரதிபலன் பாராமல் உதவுபவர்களே!

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012

உங்கள் லாப வீட்டில் செவ்வாய் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், அதிரடி திட்டங்களை தீட்டி நிறைவேற்றுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். மே 16-ம் தேதி வரை குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால், பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். சிலருக்கு புது வேலை கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். ராகுவும், கேதுவும் இந்த ஆண்டு முழுக்க சரியில்லாததால், அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள். திடீர் தோழிகளை நம்ப வேண்டாம். தங்க நகைகளை யாருக்கும் இரவல் தராதீர்கள். ஜென்மச் சனியும் நீடிப்பதால், வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. உடல் உபாதை வந்து போகும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மே 17-ம் தேதி முதல் 8-ல் குரு மறைவதால், காரிய தாமதம் ஏற்படலாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.    

இந்தப் புத்தாண்டு, கடந்த ஆண்டை விட வருமானத்தையும், வசதியையும் தருவதாக அமையும்.

தொடங்கியதை முடிக்காமல் தூங்காதவர்களே!

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012

சுக்கிரன் சாதகமான நட்சத்திரத்தில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், பிரச்னைகளை சமாளிக்கும் தைரியம் தோன்றும். மே 16 வரை குரு 6-ல் மறைந்திருப்பதால், வீட்டில் அடிக்கடி வாக்குவாதம் நிகழும். பிள்ளைகளின் திருமணம், உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட அலைச்சல்கள் இருக்கும். வருடம் பிறக்கும்போது ராசிநாதன் செவ்வாய் 10-ல் நிற்பதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நவம்பர் மாதம் வரை ராகு, ராசிக்குள் நீடிப்பதால்... சோர்வு, உடல் உபாதை வந்து போகும். ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால், குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் பேசி, உங்கள் கௌரவத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம். மே 17-ம் தேதி முதல் 7-ம் வீட்டில் குரு அமர்ந்து உங்கள் ராசியையும் பார்க்க இருப்பதால், உடல் நிலை சீராகும். பணவரவு அதிகரிக்கும். வருடத்தின் மத்தியப் பகுதியிலிருந்து வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கேட்ட இடத்துக்கு இடமாற்றம் உண்டு.

ஆரம்பம் அலைச்சலை தந்தாலும், மத்தியப் பகுதியிலிருந்து நினைத்தது நிறைவேறும் வருடமிது.

தன்மானம் தவறாதவர்களே!

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012

உங்கள் ராசிநாதனான குரு பூர்வ புண்யஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த புத்தாண்டு பிறப்பதால், உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் ஈடுபாடற்ற நிலை இனி மாறும். உறவினர், தோழி வகையில் ஆதாயம் அடைவீர்கள். மகளின் திருமணம் சிறப்பாக முடியும். உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். சனி லாப வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், குடும்ப வருமானத்தை மேலும் உயர்த்த புதிய முயற்சியில் இறங்குவீர்கள். நவம்பர் மாதம் வரை கேதுவும், டிசம்பர் மாதம் முதல் ராகுவும் சாதகமாக இருப்பதால், உங்கள் வெற்றிப் பயணம் இந்த ஆண்டு முழுக்க தொடரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.  மே 17-ம் தேதி முதல் குரு 6-ல் மறைவதால், செலவினங்களும், அலைச்சலும் இருக்கும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

இந்த வருடம் உங்களை அதிரடியாக முன்னேற வைக்கும்.

மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர்களே!

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012

உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். உங்களைப் பற்றி தவறாகப் பேசியவர்களெல்லாம் உங்கள் புகழ் பாட ஆரம்பித்துவிடுவார்கள். வறண்டிருந்த பணப்பை இனி நிரம்பும். என்றாலும், மே 16-ம் தேதி வரை குருவும், ஜூன் 22-ம் தேதி வரை செவ்வாயும் சரியில்லாததால், உறவினர் வகையில் தொந்தரவுகள் இருக்கும். உடல் நலக் கோளாறு வந்து போகும். ஆனால், மே 17-ம் தேதி முதல் குரு 5-ல் அமர்வதால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். வருடத்தின் முற்பகுதியில் வியாபாரம் சுமாராக இருக்கும். மே 17-ம் தேதி முதல் லாபம் அதிகரிக்கும். பழைய சரக்குகளை தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களுடன் இருந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும்.

இந்தாண்டு மே மாதம் வரை மிரட்டினாலும், ஜூன் மாதம் முதல் சாதிக்க வைக்கும்.

மன்னிக்கும் குணம் கொண்டவர்களே!

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012

ராசிக்கு லாப வீட்டில் சூரியனும், புதனும் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், எதிர்பார்த்த உதவிகள் வி.ஐ.பி-க்களிடமிருந்து கிடைக்கும். வீடு கட்ட பிளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடனுதவியும் கிட்டும். பிள்ளைகள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். சிலருக்கு வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். மே 17-ம் தேதி முதல் குரு 4-ம் வீட்டில் அமர்வதால்... வீண் பழி, தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். ஓரளவு பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். நவம்பர் மாதம் வரை ராகுவும், கேதுவும் சரியில்லாததால் வேலைச்சுமை, மறைமுக எதிர்ப்பு, வீண் கவலைகள் வந்து செல்லும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். உயரதிகாரிகள் உதவுவார்கள்.

கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு மகிழ்ச்சியையும், பணவரவையும் தருவதாக அமையும்.

சுதந்திர மனப்பான்மை உள்ளவர்களே!

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012

உங்கள் ராசிநாதனான குருபகவான் தன ஸ்தானமான 2-ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், எதிர்பார்த்த பணத்தில் ஒரு பகுதி கிடைக்கும். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உறவினர், தோழிகள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மே 17-ம் தேதி முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால், சில காரியங்கள் இரண்டாவது முயற்சியில் முடியும். ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டி வரும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் குடும்பத்தில் சலசலப்பு, ஏமாற்றம் வந்து செல்லும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உடன் பிறந்தவர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாக கிடைக்கும்.

இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் அதிரடி முன்னேற்றங்களை தருவதாகவும், பிற்பகுதியில் செலவுகளையும், அலைச்சலையும் தருவதாகவும் அமையும்.