லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்மே 1-ம் தேதி முதல் மே 14-ம் தேதி வரை

மேஷம்: எதிர்காலத் திட்டங்களில் ஒன்று நிறை வேறும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள்.  சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வி.ஐ.பி-க்கள் நண்பர்களாவார்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வழக்கில் அவசரம் வேண்டாம்.

ராசி பலன்கள்வியாபாரம்: கூடுதல் லாபம் கிடைக்கும்.

உத்தியோகம்:
அதிகாரிகள் பாராட்டுவார்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருங்கள்.

திடீர் முடிவுகளால் வெற்றிபெறுவீர்கள்.

ராசி பலன்கள்

ரிஷபம்: முகப்பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். மற்றவர்களிடம் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைக் கொடுத்து முடிப்பீர்கள். இத்தனை நாள்களாகச் சில பல தடைகளால் முடங்கியிருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.
 
வியாபாரம்: விற்பனை அதிகமாகும். இரட்டிப்பு லாபம் உண்டு.

உத்தியோகம்:
கவனமாகப் பணிபுரியுங்கள். உங்களின் திறமைகள் வெளிப்படும்.

விடாமுயற்சியால் சாதிப்பீர்கள்.

மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். மகனுக்கு நல்ல இடத்தில் மணப்பெண் அமைவார். அவ்வப்போது பணப்பற்றாக்குறை ஏற்படும். கடன் பெற்றுச் செலவுகளைச் சமாளிப்பீர்கள். பயணங்களில் கவனம் தேவை. விலையுயர்ந்த ஆபரணங்கள், முக்கிய ஆவணங்களைக் கவனமாகக் கையாள்வது நல்லது.

ராசி பலன்கள்வியாபாரம்:
கமிஷன் வகைகளால் நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகம்:
இடமாற்றத்துக்கு வாய்ப்புண்டு.

வி.ஐ.பி-க்களால் ஆதாயம் அடைவீர்கள்.

ராசி பலன்கள்

கடகம்: நீண்ட நாள்களாக நினைத்திருந்த செயல்கள் நிறைவேறும். சமூகத்திலும் உறவுகளுக்கு மத்தியிலும் உங்கள் புகழ், கௌரவம் உயரும். உங்களை எதிர்த்தவர்கள் அடங்கிப் போவார்கள். உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

வியாபாரம்:
கொடுக்கல் வாங்கலில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகம்: அதிகாரிகளுடன் இதுவரை இருந்த மனக்கசப்புகள் நீங்கி நிம்மதி பெறுவீர்கள்.

நிதானத்துடன் எதையும் சாதிப்பீர்கள்.

சிம்மம்: தன்னிச்சையாகவும் தீர்க்கமாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வேலைச்சுமை, அலைச்சல் இருந்துகொண்டேயிருக்கும். சகோதர வகையில் செலவுகள் இருக்கும்.

ராசி பலன்கள்வியாபாரம்: சந்தை நிலவரத்தை அறிந்து புதிய முதலீடுகளைச் செய்யுங்கள்.

உத்தியோகம்: வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற பலன் கிடைக்கும்.

அனுபவ அறிவால் வெற்றிபெறுவீர்கள்.

ராசி பலன்கள்

கன்னி: எதிர்பார்த்த பணம் வரும். நவீன மின் சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல், செலவினங்கள் இருக்கும். அவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரம்:
பழைய வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

உத்தியோகம்
: அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள்.

துலாம்: கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

ராசி பலன்கள்வியாபாரம்: வழக்கத்தைவிட அதிகமான அளவு பொருள்கள் விற்பனையாகி லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகம்: அலுவலகத்தில் இருந்துவந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்.

சொந்தபந்தங்களின் சுயரூபத்தை அறிவீர்கள்.

ராசி பலன்கள்

விருச்சிகம்: துணிச்சலாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரர் வகையில் அனுகூலம் உண்டு. மனதில் இருந்து வந்த தடுமாற்றம், குழப்பம் நீங்கும். திடீர்ப் பணவரவு உண்டு. வழக்கில் தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாக அமையும். புதிய வேலை கிடைக்கும். தள்ளிப்போன காரியங்கள் விரைவாக நிறைவேறி முடியும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

வியாபாரம்:
ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

உத்தியோகம்:
வேலைப்பளு அதிகரிக்கும். உயரதிகாரி களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

மனதில் தன்னம்பிக்கை துளிர்விடும்.

தனுசு: உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்களின் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வரும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே கொஞ்சம் விட்டுப்பிடிப்பது நல்லது.

ராசி பலன்கள்வியாபாரம்: புதிய கிளைகள் தொடங்குவீர்கள். எதிர்பாராத தன லாபம் உண்டு.

உத்தியோகம்: சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். உங்கள் அந்தஸ்து உயரும்.

சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

ராசி பலன்கள்

மகரம்: எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பாதிப் பணம் கொடுத்து முடிக்காமலிருந்த வீட்டை மீதி பணம் தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுவருவீர்கள்.

வியாபாரம்: பங்குதாரரை மாற்றுவீர்கள். நிறுவனத்தில் புதிய பணியாளர்களை நியமிப்பீர்கள்.

உத்தியோகம்: புதிய பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

புதிய முயற்சிகளில் வெற்றிபெறுவீர்கள்.

கும்பம்: உங்கள் மனதில் நீண்ட நாள்களாக இருந்துவந்த ஆசை நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம்  உண்டாகும். பயணங்கள் அதிகரிக்கும். சகோதரர் வகையில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். செலவினங்கள் இருந்தாலும் ஆதாயமும் கிடைக்கும்.

ராசி பலன்கள்வியாபாரம்: பணியாளர்கள் ஆர்வத்துடன் பணியாற்றி லாபம் ஈட்டித் தருவார்கள்.

உத்தியோகம்: சக ஊழியர்களுடன் கவனமாகப் பணிபுரிவது நல்லது.

ஏமாற்றமான சூழ்நிலை மாறும்.

ராசி பலன்கள்

மீனம்: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும் காலம் இது. கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சகோதரர் உதவிகரமாக இருப்பார். கணவன் மனைவிக்குள் ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசி, பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்வது நல்லது. புண்ணிய தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். வெளியிடங்களில் கவனமாகப் பேசுவது நல்லது.

வியாபாரம்: அழகு சாதனங்கள், உணவு வகைகள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

உத்தியோகம்: அதிகாரிகளாலும் சக ஊழியர்களாலும் பாராட்டப்படுவீர்கள்.

எதிலும் போராடி வெற்றிபெறுவீர்கள்.