தொடர்கள்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

மே 8 முதல் 21 வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

புதிய பதவிகள் தேடி வரும்

புதன் ராசிக்குள் நிற்பதால், நிதான மாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. புது நட்பு மலரும். பயணங்களால் உற்சாகம் ஏற்படும். ஆனால், சூரியன் சாதகமாக இல்லாததால், உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பிள்ளை களின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்திசெய்வீர்கள்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், திடீர் பணவரவு உண்டு. வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், குடும்பத்தில் அமைதி திரும்பும். தடைப்பட்ட திருமணப் பேச்சுவார்த்தை கை கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில், கடினமான உழைப் பால் அதீத லாபம் பெறுவீர்கள். சிலருக்குப் புதிய பதவிகளும் புதிய ஒப்பந்தங்களும் தேடிவரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத் துறையினரின் படைப்புகள் அனைவரது பாராட்டையும் பெறும்.

விட்டுக்கொடுப்பதால் வெற்றி பெறும் வேளை இது!

ராசிபலன்

லாபம் அதிகரிக்கும்

 புதனும் சூரியனும் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால், அடுத்தடுத்து பயணங்களும், செலவுகளும் கூடும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டாம். பால்ய நண்பர்களுடன் மோதல்கள் வரக்கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் கூடாது. நீண்ட நாள்களாகப் போக நினைத்த வெளி மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வீடு கட்டவோ, புது வீடு வாங்கவோ வங்கிக்கடன் கிடைக்கும். மற்றவர்களது பிரச்னை களில் தலையிட வேண்டாம்.மாணவர் களின் கல்வித்தரம் மேம்படும். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

வியாபாரத்தில் பழைய சரக்குகள் நல்லமுறையில் விற்பனை ஆகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எனினும் முன்னேற்றம் உண்டு. கலைத் துறையினருக்கு, பழைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கடின உழைப்பால் முன்னேறும் நேரம் இது!

ராசிபலன்

பண வரவு அதிகரிக்கும்

குரு பகவான் 5-ம் வீட்டில் நீடிப்பதால் பதவி, புகழ் தேடி வரும். தாயாரின் உடல்நலம் சீராகும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

13-ம் தேதி வரை சூரியனும், புதனும் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். அரசியல் தொடர்புள்ளவர்களின் நட்பு கிடைக்கும்.

சொத்து வாங்குவதும் விற்பதும் லாபகரமாக அமையும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் பெருகும். எதிர்பார்த்த பணம்  கைக்கு வரும். உங்களின் பிள்ளைகள் தங்களது தவற்றை உணர்வார்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், புதியவர்கள் நண்பர்களாவார்கள்.  7-ம் வீட்டில் சனி தொடர்வதால், மனைவியின் உடல்நலனில் கவனம்  தேவை.

வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.

மாறுபட்ட அணுகுமுறையால் விட்டதைப் பிடிக்கும் நேரம் இது!

ராசிபலன்

வழக்குகள் சாதகமாகும்

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள், நண்பர் களால் ஆதாயம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். சூரியன் சாதக மான வீடுகளில் செல்வதால், பிரபலங் களின் உதவியால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மகனின் படிப்புக்குத் தகுந்த நல்ல உத்தியோகம் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். குரு பகவான் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அலைச்சல், பணப் பற்றாக்குறை ஏற்படும்.

வியாபாரத்தில் எதிர்பாராத பொருள் வரவு, லாபம் உண்டு. பணியாளர்களிடம் கண்டிப்பு வேண்டாம். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகாரியுடன் மனக்
கசப்பு ஏற்பட்டு நீங்கும். கலைத் துறை யினருக்குச் சம்பளப் பிரச்னை தீரும்.

எதிர்ப்புகளைக் கடந்து சாதிக்கும் காலம் இது!

ராசிபலன்

நாடாளுவோரின் நட்பு கிடைக்கும்

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், நட்பு வட்டம் விரிவடையும். ராசிநாதன் சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், தன்னம்பிக்கை துளிர்விடும். அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

குரு பகவான் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வேலைச்சுமை, வீண்செலவுகள் வந்துபோகும். கோயில் வழிபாட்டுக் குழுக்களில் இணைவீர்கள். 5-ம் வீட்டில் சனி இருப்பதால், பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும்.
வியாபாரத்தில், பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினரின் தனித்திறமைகள் வெளிப்படும்.

சாதிப்பவர்களின் பட்டியலில் இடம்பிடிக்கும் தருணம் இது!

ராசிபலன்

திடீர் பயணம் உண்டு

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், நீண்ட நாள் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். பண வரவு உண்டு. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.  13-ம் தேதி வரை சூரியனும் புதனும் 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால் திடீர் பயணம் ஏற்படும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு நல்லதொரு தீர்வு காண்பது அவசியம்.குருபகவான் 2-ம் வீட்டில் அமர்ந் திருப்பதால் எதிலும் வெற்றி கிடைக்கும். உடல் நலம் சீராகும். பெரிய பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

வியாபாரத்தில், மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறு வீர்கள்; லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். சக ஊழியர்களின் சொந்த விஷயங் களில் தலையிடவேண்டாம். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டிய நேரம் இது!

ராசிபலன்

நட்பால் ஆதாயம் உண்டு

சனி பகவான்  3-ம் வீட்டில் தொடர்வதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக்கொள்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

சூரியன் சாதகமாக இல்லாததால் வீண் சந்தேகம், குழப்பம், டென்ஷன் வந்துபோகும். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். புதன் சாதகமாக இருப்பதால், கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டிலிருக்கும் உறவினர்களால் உதவிகள் உண்டு.குரு பகவான் ராசிக்குள் அமர்ந் திருப்பதால், வீண் மன உளைச்சல் வந்துபோகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், புதிய எண்ணங்கள் மனதில் உதயமாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.

வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, வேலைச்சுமை குறையும். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்கள். கலைத் துறையினர் சக கலைஞர் களிடம் பேசும்போது கவனம் தேவை.

சகிப்புத் தன்மை தேவைப்படும் தருணம் இது!

ராசிபலன்

நல்ல செய்தி வரும்

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் அழகு, ஆரோக்கியம் கூடும். எதிரிகளால் ஆதாயம் உண்டு. 13-ம் தேதி வரை சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக இருப்பதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவி செய்வார்கள்.

வீடு வாங்க வங்கிக்கடன் கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனைச் செலுத்து வீர்கள். புதன் 6-ம் வீட்டில் மறைந்திருப்ப தால் நண்பர்கள், உறவினர்களிடம் பேசும்போது கவன மாகப் பேசவும். குரு 12-ல் மறைந்திருப்பதால் வீண் செலவு, டென்ஷன், திடீர் பயணங்கள் ஆகியன வந்துபோகும். பாதச் சனி தொடர்வதால், உடல்நலனில் கவனம் தேவை.

வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில், வேலையில் கவனமாக இருப்பது நல்லது. தலைமைக்கு உதவுவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய நட்பும், அதன் மூலம் நற்பலனும் உண்டு.

மன உறுதியுடன் போராடி வெல்லும் நேரம் இது!

ராசிபலன்

பாராட்டுகள் கிடைக்கும்

குரு 11-ம் வீட்டில் அமர்ந்திருப்ப தால் தடைகள் நீங்கும். சிலருக்குக் குழந்தைப்பேறு வாய்க்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக அமையும். 5-ம் வீட்டில் சூரியனும் புதனும் நிற்பதால், உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள், மருத்து வரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் உட்கொள்ளவேண்டாம்.

அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.   குடும்பத்தில் அமைதி திரும்பும். தடைப்பட்ட திருமணப் பேச்சுவார்த்தை நல்லவிதமாக முடியும். ஜன்மச் சனி தொடர்வதால், சளித் தொந்தரவு வந்து நீங்கும்.

வியாபாரத்தில், நவீன யுத்திகளால் லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தேங்கிக்கிடக்கும் வேலைகளை விரை வாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்குப் பரிசு, பாராட்டுகள் கிடைக்கும்.

சங்கடங்களைச் சமாளித்து சாதிக்கும் வேளை இது!

ராசிபலன்

அரசு காரியங்கள் சாதகமாகும்

சுக்கிரன் ஓரளவு சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டு. நீண்ட நாள்களாகப் பார்க்கவேண்டும் என்று நினைத் திருந்தவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். சுக்கிரன் 6-ம் வீட்டில் மறையும் காலத்தில், மின்சாதனங்கள் பழுதாகும். வாகனப் பழுதுகளும் வந்து நீங்கும்.

புதன் சாதகமாக இருப்பதால் பால்ய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள்.

சூரியன் 4-ம் வீட்டில் நிற்பதால் புதுத் திட்டங்கள் நிறைவேறும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். குரு 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அலைச்சல் திரிச்சல் இருக்கும்.  புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். ஏழரைச் சனி தொடர்வதால், கடன் பிரச்னையும் தொடரும்.

வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில், உயரதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலைத் துறையினர், தங்களது படைப்புகளைப் போராடி  வெளியிடுவார்கள்.

அனுபவ அறிவால் வெற்றிகளைச் சந்திக்கும் காலம் இது!

ராசிபலன்

நல்ல செய்திகள் தேடி வரும்

புதன் சாதகமாக இருப்பதால், எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் அன்புத்தொல்லை குறையும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், அரசால் ஆதாயம் உண்டு. இளைய சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

விலகிச்சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், புதிய சொத்து சேரும். குருபகவான் 9-ல்  அமர்ந்திருப்பதால், அதிரடி மாற்றம் உண்டாகும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சனிபகவான் வலுவாக இருப்பதால், வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். வேற்றுமொழிக்காரர்கள் அறிமுகமாவார்கள். 

வியாபாரத்தில் அவசரம் கூடாது.  சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகளைப் பற்றி குறை கூறாதீர்கள். கலைத் துறையினர், சில விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

புதிய வியூகங்களால் பலனடையும் நேரம் இது!

ராசிபலன்

உறவுகளால் அனுகூலம் உண்டு

புதன் 2-ம் வீட்டில் நிற்பதால் பேச்சால் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் - குழப்பங்கள் விலகும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

13-ம் தேதி வரை 2-ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால்  உடல் நலனில் கவனம் தேவை. 14-ம் தேதி முதல் சூரியன் சாதகமாவதால் தைரியம் பிறக்கும். சுக்கிரன் சாதக மான வீட்டுக்குச் செல்வதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. வீண் டென்ஷன் விலகும். குருபகவான் 8-ம் வீட்டில் மறைந்தாலும் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் நிம்மதி கிடைக்கும். சனி வலுவாக இருப்பதால், கடன் கட்டுக்குள் வரும்.

வியாபாரத்தில், நவீன வசதிகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். பணியில் கவனம் தேவை. கலைத் துறையினருக்குச் சம்பளம் உயரும்.

கால நேரம் கனிந்து வந்து, வெற்றிமாலை சூடும் நேரம் இது.