Published:Updated:

ராசிபலன்

மே 22 முதல் ஜூன் 4 வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், இழுபறியான பல வேலைகள் முழுமையடையும். அயல்நாட்டுப் பயணங்கள் உண்டு. வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல்நலம் சீராக இருக்கும்.

2-ம் இடத்தில் சூரியன் நிற்பதால், மற்றவர்களிடம் பேசும்போது கவனம் தேவை. புதன் 2-ம் வீட்டில் நிற்பதால், புத்திசாதுர்யத்துடன் செயல்படுவீர்கள். உங்கள்மீது மதிப்பு கூடும்.

வி.ஐ.பி-களின் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். செவ்வாய் வலுவாக 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், உங்களின் நிர்வாகத் திறமை கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். திடீர் பணவரவும் உண்டு. வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளைக் கற்றுக் கொள்வார்கள். உயர் அதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் பெருகும்.

உங்களின் சொந்த முயற்சியால் முதலிடம் பிடிக்கும் காலம் இது.

ராசிபலன்

சுக்கிரன் தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவி வழியில் ஆதாயம் உண்டு. புதிய வாகனம் வாங்குவீர்கள். ராசியில் சூரியன் நிற்பதால், பெற்றோர் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். ஆனால், உங்களின் பூர்வ புண்ணியாதிபதி புதன் ராசிக்குள்ளேயே நிற்பதால், பிள்ளைகளால் இருந்த அலைச்சல், டென்ஷன் குறையும். அவர்களது உயர் கல்வி குறித்த கவலைகள் நீங்கும். வருங்காலத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து முடிப்பீர்கள். உங்களின் சிந்தனைத்திறன் அதிகரிக்கும்.

கலை, இலக்கியத்தில் நாட்டம் அதிகரிக்கும். செவ்வாய் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால், சொத்து வாங்குவது, விற்பது சாதகமாக அமையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயம்  கிடைக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்ட வேண்டி இருக்கும். வேலையாட்கள், வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களை உதாசீனப்படுத்தவேண்டாம். கலைத்துறையினர் இழந்த புகழை மீண்டும் பெற, படைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது நல்லது.

வளைந்துகொடுத்து காரியம் சாதிக்கும் வேளை இது.

ராசிபலன்

சுக்கிரன் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் உடல் வலி, சோர்வு ஆகியன விலகும். தடைப்பட்ட வேலைகள் முடியும். புது வாகனம் வாங்குவீர்கள். பழுதான டி.வி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றை மாற்றுவீர்கள். 12-ம் வீட்டில் சூரியன் நிற்பதால், தேவையில்லாமல் டென்ஷன்  ஏற்படும். உங்கள் ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால்  கவலை வேண்டாம். அரசு காரியங்களில் கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் வெற்றி காண்பீர்கள்.

8-ம் வீட்டில் செவ்வாயும் கேதுவும் சேர்ந்து நிற்பதால் கணவன், மனைவிக்கு இடையே வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி நல்ல லாபம் பெறுவீர்கள். வேலையாட்களை விட்டுப்பிடித்து வேலை வாங்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, அலுவலகத்தின் சூட்சுமங்கள் புரிய வரும். சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத்துறையினர் கிடைக்கின்ற வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள போராட வேண்டி இருக்கும்.

சமயோசித புத்தியுடன் செயல்படவேண்டிய தருணம் இது.

ராசிபலன்

சுக்கிரன் வலுவாக இருப்பதால் சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பண பலம் உயரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள்.  குடும்பத்தில் நிலவிய போட்டி பூசல்கள் நீங்கும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். லாப வீட்டில் சூரியன் சாதகமாக அமர்ந்திருப்பதால், தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். ஒருசிலருக்கு அரசு வேலை கிடைக்கும்.

 உங்கள் பேச்சில் கம்பீரம் பிறக்கும். புதனும் சாதகமாக இருப்பதால், வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். செவ்வாய் 7-ம் வீட்டில்  நிற்பதால் வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். வழக்கில் சாதகமான தீர்ப்பு தள்ளிப்போகும். வியாபாரத்தில், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம், உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும்; வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். கலைத்துறையினர் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

அனைவராலும் மதிக்கப்படும் நேரம் இது.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமாகத் திகழ்வதால், மனைவியுடன் இருந்த மோதல் விலகும். சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால், தந்தையின் உடல்நிலை சீராகும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வீடு கட்டும் ஆசை நிறைவேறும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். வழக்கு வெற்றி அடையும். வி.ஐ.பி-களிடம் உதவி கேட்கலாமா, வேண்டாமா என்றிருந்த தயக்கம் விலகும். வி.ஐ.பி-கள் உதவுவார்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். சமயோசித புத்தியுடன் நடந்துகொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்போது சந்திப்பீர்கள்.

செவ்வாய் 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று - வரவு உயரும். சரியாகப் பணி புரியாத வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் காலம் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். கலைத் துறையினரே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களைத் தேடி வரும்.

இங்கிதமான பேச்சால் சாதிக்கும் காலம் இது.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால், வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் பயனடைவீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் 9-ம் வீட்டில் நிற்பதால் வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். முகம் பொலிவடையும். மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை உணருவீர்கள். பழைய நண்பர்களைச் சந்தித்து எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விவாதிப்பீர்கள்.

செவ்வாய் 5-ம் வீட்டில் கேதுவுடன் சேர்ந்து நிற்பதால், எப்படியாவது வீடு கட்ட வேண்டுமென முயற்சி மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைப் புகுத்தி வெற்றி பெறுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில், அதிகாரிகள் உங்கள் பணியை அங்கீகரிப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். கலைத் துறையினருக்கு வேற்றுமொழி வாய்ப்புகளால் ஆதாயம் உண்டு.

புதிய முயற்சிகள் வெற்றி பெறும் வேளை இது.

ராசிபலன்

ங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், புத்துணர்ச்சி பெருகும். மன வலிமை கூடும். குடும்பத்தில் நல்லது நடக்கும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். சூரியனும் புதனும் சேர்ந்து 8-ம் வீட்டில் இருப்பதால் திடீர் பண வரவும், அரசால் ஆதாயமும் உண்டு. பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனத்தில் வலம் வருவீர்கள். திறமைகளைத் தக்க தருணத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தன்னடக்கத்தைக் கண்டு அனைவரும் பாராட்டுவார்கள்.

செவ்வாய் 4-ம் வீட்டில் கேதுவுடன் சேர்ந்து நிற்பதால், சகோதர ஒற்றுமை பலப்படும். வீடு, வாகனங்கள் தொடர்பான பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஒரு சொத்தை விற்றுவிட்டு மற்றொரு சொத்தை வாங்கும் சூழ்நிலை உருவாகும். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்வது நல்லது. வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில், உங்கள் திறமையை மூத்த அதிகாரி அங்கீகரிப்பார். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும்.

சகிப்புத்தன்மையால் முன்னேறும் நேரம் இது.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் நீங்கும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப் படுவீர்கள். தொல்லை கொடுத்து வந்த பழைய கடனை பைசல் செய்வீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அவர்களின் உயர் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதன் 7-ம் வீட்டில் இருப்பதால் தன்னம்பிக்கை துளிர்விடும். சொந்த ஊரில் மதிப்பு கூடும். பால்ய நண்பர்களின் சுபகாரியங்களில் கலந்துகொள்வீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். செவ்வாய் 3-ம் வீட்டில் நிற்பதால் துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். முன்பணம் தந்து முடிக்காமல் இருந்த வீடு, மனையை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

கலைத்துறையினருக்குப் புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு, அனைவரது கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

சாதிப்பவர்களின் பட்டியலில் இடம்பிடிக்கும் தருணம் இது.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். அடிக்கடி தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். புதன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், நண்பர்களால் செலவு, அலைச்சல் வரக்கூடும். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். ஆனால், சூரியனும் 6-ம் வீட்டில் நிற்பதால் தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும்.

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அரசு விஷயங்கள் உடனே முடியும். செவ்வாய் 2-ம் வீட்டில் கேதுவுடன் சேர்ந்து நிற்பதால், பேசும்போது வார்த்தைகளில் கவனம் வையுங்கள். சகோதரர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். கலைத்துறையினர் விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவார்கள்.

துணிவே துணை என்று நினைக்கும் காலம் இது.

ராசிபலன்

புதன் சாதகமாக இருப்பதால் மன இறுக்கம் விலகும். நண்பர்கள் மதிப்பார்கள். பழைய சொந்தபந்தங்களைச் சந்திப்பீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்திலுள்ளவர்களின் எண்ணங்களைப் பூர்த்திசெய்வீர்கள். சுக்கிரன் பலவீனமாக இருப்பதால் செலவு, நஷ்டம், வீண் பிரச்னை வரும் வாய்ப்புள்ளதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டு. வீண் விவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள்.

ராசிக்கு 5-ம் வீட்டில் சூரியன் நிற்பதால், உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள்.  வியாபாரத் தில் ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரி செய்வீர்கள். விரைவில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த பழைய சிக்கல்கள் தீரும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடும் நிலை ஏற்படலாம். முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

இழுபறியாக இருந்த நிலைமாறி ஏற்றம் பெறும் வேளை இது.

ராசிபலன்

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும். வீட்டில் விசேஷங்கள் ஏற்பாடாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். முன்கோபம், வீண் டென்ஷன் விலகும். ராசிக்கு 4-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் தடுமாற்றங்கள் நீங்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் அடைவீர்கள். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர்கள். கணவன், மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு.

12-ம் வீட்டில் செவ்வாய் மறைந்திருப்பதால், உடல் நலனில் கவனமாக இருப்பது நல்லது. வழக்கில் வழக்கறிஞர்களைக் கலந்தாலோசிப்பது நல்லது. எவ்வளவோ உதவிகள் செய்தும்,  சகோதரர்கள் புரிந்துகொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில், வேலைச்சுமை அதிகரிக்கும். அதேநேரம் முன்னேற்றமும் உண்டு. கலைத்துறையினரின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

விடாமுயற்சியால் சாதிக்கும் காலம் இது.

ராசிபலன்

புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், வரவேண்டிய பணம் வந்து சேரும். தடைப்பட்ட பணிகள் முழுமையடையும். வி.ஐ.பி-களின் சந்திப்பால் உதவி கிடைக்கும். சூரியன் 3-ம் வீட்டில் நிற்பதால் பக்குவமாகச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். மறைந்துகிடந்த திறமைகள் வெளிப்படும். தடைப்பட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பழைய மனையை விற்றுவிட்டு புது வீடு வாங்குவீர்கள். உயர் கல்வியில் வெற்றிபெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். வேலையாட்கள் நல்லவிதமாகப் பணியாற்றுவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் மூத்தக்கலைஞர்களிடம்  இருந்து சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.

சவால்களில் வெற்றி பெறும் நேரம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு