Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜூன் 5 முதல் 17 தேதி வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

ஜூன் 5 முதல் 17 தேதி வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்
ராசிபலன்

மேஷம்

குரு பகவான் 7 -ம் வீட்டில் நிற்பதால், உங்களின் செல்வாக்கு கூடும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கல்வியாளர்களின் நட்பால் நன்மைகள் உண்டாகும்.

சுக்கிரன் சாதகமாக நிற்பதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செவ்வாயும், கேதுவும் 10-ம் வீட்டில் வலுவாக இருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொத்துகள் சேரும். புதன் 3-ம் வீட்டில் நிற்பதால், புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சூரியன் 14-ம் தேதி வரை 2-ம் வீட்டில் இருப்பதால், கோபம் அதிகம் வரும்; சேமிப்புகள் கரையும். ஆனால், 15-ம் தேதி முதல் 3-ம் வீட்டில் அமர்வதால், திடீர் யோகம் உண்டாகும். வழக்கில் வெற்றி உண்டு. குடும்பத்தில் குழப்பங்கள் விலகும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத் தில் உங்களின் கை ஓங்கும். கலைத் துறையினருக்குக் கெளரவம்  கிடைக்கும்.

எடுத்த காரியங்களை முடித்துக்காட்டும் காலம் இது.

ராசிபலன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிஷபம்

 உங்களின் பூர்வ புண்ணியாதிபதி புதன் சாதகமாக இருப்பதால், இதுவரை குடும்பத்தில் நிலவி வந்த சச்சரவுகள் அகலும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். பழைய சொந்தங்களைச் சந்திப்பீர்கள்.
சூரியன் 14-ம் தேதி வரை ராசிக்குள் நிற்பதால், முன்கோபம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வர். 15-ம் தேதி முதல், ராசியைவிட்டு சூரியன் விலகுவதால் நெஞ்சு எரிச்சல், தூக்கமின்மை போன்ற குறைபாடுகள் நீங்கும்; உடல்நலம் சீராகும்.

ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வீட்டை விரிவுபடுத்து வீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

வியாபாரத்தில், புதிய முதலீடுகள் செய்யுமுன், அனுபவசாலிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும்.உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சக பணியாளர் களின் விமர்சனங்களைக் கண்டு கொள்ள வேண்டாம். கலைத் துறை யினரின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

பொறுமையுடன் செயல்பட்டு காரியம் சாதிக்கும் வேளை இது.

ராசிபலன்

மிதுனம்

ராசிநாதன் புதன் ராசிக்குள்ளேயே அமர்ந்திருப்பதால் தைரியம் பிறக்கும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

செவ்வாயும் கேதுவும் 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால் கணவன், மனைவிக்குள் ஈகோ பிரச்னை வராமல் பார்த்துக்கொள்ளவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சகோதர வகையில் சங்கடங்கள் வரும். குரு சாதகமாக இருப்பதால், மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அரைகுறையாக நின்றுபோன வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், கல்யாண முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். திடீர் பணவரவு உண்டு. சூரியன் 15-ம் தேதி முதல் ராசிக்குள் நுழைவதால் கடன் பிரச்னை வந்துபோகும். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில், உயரதிகாரி உங்களிடம் அலுவலக ரகசியங்களைப் பகிர்ந்துகொள்வார். கலைத் துறையினருக்கு வரவேண்டிய சம்பள பாக்கி வந்துசேரும்.

மன உறுதியுடன் போராடி வெற்றி பெறும் நேரம் இது.

ராசிபலன்

கடகம்

 புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், எதிர்பாராத பணவரவு உண்டு. செவ்வாய் 7-ம் வீட்டில் நிற்பதால், புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

குரு பகவான் 4-ம் வீட்டில் நிற்ப தால், தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. 14-ம் தேதி வரை சூரியன் 11-ம் வீட்டில் நிற்பதால், அரசால் அனுகூலம் உண்டு. 15-ம் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால் அலைச்சல், திடீர் பயணம், முன்கோபம் வந்துபோகும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், தாம்பத்தியம் இனிக்கும். தள்ளுபடி விற்பனையில் புதிய வாகனம் வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணைவருக்குப் புதிய டிசைனில் ஆபரணங்கள் வாங்கிக் கொடுப்பீர்கள்.
வியாபாரம் சூடுபிடிக்கும். ஊழியர் களிடம் கறாராக நடந்துகொள்ளவும். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதை யும் கூடும். சக ஊழியர்கள் நேசக் கரம் நீட்டுவார்கள். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

பிரச்னைகள் நீங்கி வாழ்வில் தென்றல் வீசும் தருணம் இது.

ராசிபலன்

சிம்மம்

செவ்வாயும் கேதுவும் 6-ம் வீட்டில் வலுவாக இருப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னை களுக்குத் தீர்வு காண்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். ஷேர் மார்க்கெட்  மூலம் பணம் வரும்.

புதன் ஆட்சிப்பெற்று அமர்ந்திருப்ப தால் கைமாற்றுக் கடனை அடைப் பீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். புது நட்பு மலரும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். குரு 3 - ம் வீட்டில் நிற்பதால், அவ்வப்போது அலைச்சலும் டென்ஷனும் இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

ராசிநாதன் சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வெகு காலமாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் இப்போது கைகூடி வரும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வியாபாரத்தில் புதிய யுக்திகளைச் செயல்படுத்துவீர்கள். தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத் தில் வேலைப்பளு அதிகரிக்கும். கலைத் துறையினர், மூத்த கலைஞர் களின் வழிகாட்டல் மூலம் வெற்றி பெறுவார்கள்.

வாழ்வில் அதிரடி மாற்றங்கள் நிகழும் நேரம் இிது.

ராசிபலன்

கன்னி

உங்கள் ராசிநாதன் புதன் வலுவாக இருப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். அந்தஸ்து உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

குரு பகவான் 2-ம் வீட்டில் நிற்பதால் நினைத்தது நினைத்தபடி முடியும். பண வரவு அதகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்லபடியாக முடியும்.

14-ம் தேதி வரை சூரியன் 9-ல் நிற்ப தால், தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. வழக்குகள் சாதக மாகும். 15-ம் தேதி முதல் சூரியன் 10-ல் நுழைவதால், புதிய பதவிகள் கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், குடும்ப வருமானம் உயரும். பழைய கடன் பிரச்னை களில் ஒன்று முடிவுக்கு வரும். தொழில் முன்னேற்றத்தின் பொருட்டு நீங்கள் எதிர்பார்த்த வங்கிக்
கடன் இப்போது கிடைக்கும்.

உங்களில் சிலர், மொத்த வியாபாரத் துக்கு மாறுவீர்கள். உத்தியோகத்தில், புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வீர்கள். கலைத் துறையினர், புதிய படைப்புகளால் புகழடைவார்கள்.

நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும் வேளை இது.

ராசிபலன்

துலாம்

உங்களின் பாக்கியஸ்தானதிபதி புதன் வலுவாக இருப்பதால், மனதில் உற்சாகம் பிறக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

குரு பகவான் ராசியிலேயே நிற்பதால் முன்கோபம் வரும். கணவன், மனைவி பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சூரியன் சாதகமாக இல்லாததால் டென்ஷன், வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போகவும். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னையைத் தீர்க்க வழி பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். வாகனம் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி, உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் லாபம் உயரும். உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத் துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

தடைகளைக் கடந்து சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன்

விருச்சிகம்

செவ்வாயும் கேதுவும் 3-ம் வீட்டில்  வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்ப் புகள் நிறைவேறும். அதிகாரம் மிகுந்தவர்களின் நட்பும் வழக்கில் நல்ல தீர்ப்பும் கிடைக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

புதன் 8-ம் வீட்டில்  மறைந்திருப்ப தால் பண வரவு உண்டு. அதேநேரம், செலவுகளும் துரத்தும். குரு பகவான் 12-ம் வீட்டில் நிற்பதால், அரசாங்க அதிகாரிகளைப் பகைத்துக்கொள்ளா தீர்கள். 14-ம் தேதி வரை சூரியன் சாதகமாக இருப்பதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசு வகையில் ஆதாயம் உண்டு. பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பழுதான மின்னணு மற்றும் மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

வியாபாரத்தில், மாறுபட்ட அணுகு முறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குச்  செல்வாக்கு கூடும். கலைத் துறை யினருக்கு வருமானம் உயரும்.

முன்னேற்றங்கள் தேடி வரும் நேரம் இது.

ராசிபலன்

தனுசு

புதன் 7-ம் வீட்டில்  அமர்ந்திருப்ப தால் சோர்வு நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

செவ்வாயும் கேதுவும் 2-ம் வீட்டில் நிற்பதால், சிலநேரம் உணர்ச்சிவயப் பட்டுப் பேசுவீர்கள். சகோதரர் வகை யில் அலைச்சல் அதிகரிக்கும்.  குரு சாதகமாக இருப்பதால்,  பொறுப்புகள் தேடி வரும்; பணப்புழக்கம் அதிகரிக்கும்.

14 -ம் தேதி வரை, சூரியன் 6-ம் வீட்டில் நிற்பதால் மதிப்பு, மரியாதை கூடும். அரசாங்கக் காரியங்கள் விரைந்து முடியும். 15-ம் தேதி முதல் சூரியன் 7-ம் வீட்டில் நுழைவதால், வாழ்க்கைத் துணைவருடன் வீண் வாக்குவாதம் வேண்டாம்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாழ்க்கைத் துணைவர் வழியில் சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில், புதிய முதலீடுகள் செய்வதில் கவனம் தேவை. உத்தியோ கத்தில், சக ஊழியர்களிடம் அளவுடன் பழகவும். கலைத் துறையினரின் படைப்புகள் வெளியாவதில், சிற்சில தடைகள் உண்டாகும்.

முற்போக்குச் சிந்தனைகளால் முன்னேறும் தருணம் இது.

ராசிபலன்

மகரம்

சூரியன் 15-ம் தேதி முதல்  6-ம் வீட்டில் செல்வதால், திடீர் திருப்பங்கள் உண்டாகும். அரசால் அனுகூலம் உண்டு. செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் மனைவி வழி உறவினர்கள் உதவுவார்கள். சகோதர வகையிலும் நிம்மதி உண்டு. உடல்நலனில் அக்கறை தேவை.

புதனும் சுக்கிரனும் 8-ம் தேதி வரை 6-ம் வீட்டில் மறைந்திருப் பதால் நண்பர்கள், உறவினர்களுடன் இடைவெளி தேவை. வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும்.

9-ம் தேதி முதல், சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால் அழகு, இளமை கூடும். இதுவரை மனதில் இருந்த எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும்.

குரு 10-ம் வீட்டில் நிற்பதால், சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்தக்கூடும். காசோலைகளைக் கையாளும்போது கவனம் தேவை. வியாபாரத்தில், பற்று வரவு அதிகரிக்கும். வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில், உங்களின் நிர்வாகத் திறமை வெளிப் படும். கலைத் துறையினர், பொது நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு முன்னேற்றம் காண்பார்கள்.

வெற்றிக்கனியை எட்டிப் பறிக்கும் வேளை இது.

ராசிபலன்

கும்பம்

செவ்வாயும் கேதுவும் 12-ம் வீட்டில் இருப்பதால், சகோதரர் வகையில் அலைச்சல், நஷ்டம், தூக்கமின்மை ஏற்படும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வ தால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொத்துப் பிரச்னைக்கு நல்லதொரு தீர்வைக் காண்பீர்கள்.

குரு பகவான் 9-ம் வீட்டில் வலுவாக நிற்பதால், சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்வீர்கள்.

14-ம் தேதி வரை 4-ம் வீட்டில் சூரியன் நிற்பதால், அரசால் அனுகூலம் உண்டு. 9-ம் தேதி முதல் புதனும் சுக்கிரனும் 6-ல் மறைவதால், வாகனப் பயணத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் கருத்துமோதல்கள் வரும்.

வியாபாரத்தில் பழைய சரக்கு களைப் போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில், அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். கலைத்துறை யினர், மறைமுகப் போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும்.

திட்டமிட்டு செயல்பட வேண்டிய காலம் இது.

ராசிபலன்

மீனம்

செவ்வாயும் கேதுவும் 11-ம் வீட்டில் நிற்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும்.

புதன் சாதகமாக இருப்பதால், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பலம்-பலவீனத்தை உணர்வீர்கள். குரு 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால் எதிர்பாராத செலவுகளைப் போராடிச் சமாளிப்பீர்கள். எவருக்கும் பணம் வாங்கித் தரும் விஷயத்தில் குறுக்கே நிற்கவேண்டாம். 

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் சவாலான விஷயங்களைச் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், தோற்றப் பொலிவு கூடும். சிலருக்குப் புத்திர பாக்கியம் கிடைக் கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

வியாபாரத்தில், போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில், உயரதிகாரி களிடமிருந்து உங்களுக்குப் பரிசுகள் கிடைக்கும். கலைத் துறையினரின் படைப்புத் திறன்  அதிகரிக்கும்.

வாழ்வில் முக்கிய முடிவுகளை எடுக்கும் தருணம் இது.