வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை `ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

மேஷம்  சோம்பல் நீங்கி மனதில் உற்சாகம் பிறக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் அலட்சியப்போக்கு மாறும். சொந்த பந்தங்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். 15-ம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள் உண்டாகும்.

வியாபாரத்தில் கைவசம் இருந்த பொருள்கள் விற்பனையாகி, புதியவற்றுக்கு ஆர்டர் கொடுப்பீர்கள்.

உத்தியோகத்தில் உங்கள் வேலைக்கேற்ற ஊதியமும் பாக்கித் தொகையும் கிடைக்கும்.

புதிய சிந்தனையுடன் திட்டம் தீட்டுவீர்கள்.

 ரிஷபம்  எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அரசு வகையில் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின்

ராசிபலன்

பிரச்னைகள் தீரும். மனக்குழப்பங்கள் நீங்கும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது கவனமாகப் பேசுங்கள். செலவுகள் அதிகரிக்கும்; சேமிப்புகள் கரையும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனம் தேவை.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் நவீனத் தொழில்நுட்பங்களைக் கையாளுவீர்கள்.

அனுசரித்துப் போக வேண்டிய நேரமிது.

ராசிபலன்

 மிதுனம்  எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். எதிலும் உங்கள் கை ஓங்கும். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி, புது வீடு வாங்குவீர்கள். கணவரிடம் கலந்தாலோசித்து வீட்டுச் செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். பணப்பற்றாக்குறை வந்து போகும்.

வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் விடுப்பில் செல்பவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும்.

அலைச்சல் இருந்தாலும் நினைத்ததை முடிப்பீர்கள்.

 கடகம்  சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக்கிடந்த வேலைகளை முடிப்பீர் கள். குடும்பத்தில் அமைதி

ராசிபலன்

திரும்பும். உறவினர்கள் மதிப்பார்கள். வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பாராத பயணமும் அமையும். கணவருடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வியாபாரத்தில் விறுவிறுப்பும் லாபமும் கூடும்.

உத்தியோகத்தில் சம்பளத் தொகை உயரும். சிலருக்குப் புதிய சலுகைகள் கிடைக்கும்.

உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள்கூட ஆதரிக்கத் தொடங்குவார்கள்.

ராசிபலன்

சிம்மம்  கடனாக வாங்கியிருந்த பணத்தைக் கொடுத்து முடிப்பீர்கள். விலகியிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். கணவருக்கு வருமானம் கூடும். மன இறுக்கம் நீங்கும். நவீன டிசைனில் நகை வாங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு தளரும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள்.

வியாபாரத்தில் உயர்த்துவதற்குப் புது வழி பிறக்கும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

எதிலும் நின்று நிதானித்துச் சாதித்துக் காட்டுவீர்கள்.

 கன்னி  உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின்

ராசிபலன்

அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். கணவரால் பாராட்டப் படுவீர்கள். சகோதரப் பகை நீங்கும். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும் என்றாலும் பணத்தட்டுப்பாடு அதிகரிக் கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

வியாபாரத்தில் ஏற்றுமதி மூலம் இரட்டிப்பு லாபம் உண்டு.

உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் பேசும்போது கவனமாகப் பேசவும்.

உங்கள் பாதையில் இருந்துவந்த தடைகள் விலகும்.

ராசிபலன்

 துலாம்  எதிலும் முன்னெச்சரிக்கையுடன் சாமர்த்தியமாகப் பேசி காரியத்தைச் சாதிப்பீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். அயல்நாடு செல்வதற்கு விசா கிடைக்கும். உடல்நலனில் கவனம்கொள்வது நல்லது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் கூடுதலாக முதலீடு செய்து விரிவு படுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்.

சமூகத்தில் செல்வாக்கு கூடும் நேரமிது.

 விருச்சிகம்  துணிச்சலாகச் செயல்பட்டு சிரமமான வேலைகளைக் கச்சிதமாகச் செய்து முடிப்பீர்கள்.

ராசிபலன்

கணவர் உங்கள் மனதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வார். சின்னச்சின்ன குழப்பங்கள், கோபதாபங்கள் வந்து விலகும். உறவினர்கள் வருகையால் உள்ளம் குதூகலிக்கும்.

வியாபாரத்தில் கையிலிருந்த பொருள்கள் விற்றுத் தீரும். கணிசமாக லாபம் உயரும்.

உத்தியோகத்தில் உங்களுடைய மறைமுக எதிரிகளால் சிறு சிறு தொல்லைகள் இருக்கும்.

திட்டமிட்டு விரைந்து செயல்படுவீர்கள்.

ராசிபலன்

 தனுசு  பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கணவரிடம் கலந்தாலோசித்து பிள்ளைகளின்  குறைகளைத் தீர்ப்பீர்கள். யாரிடமும் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். 

வியாபாரத்தில் புது வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள்.

உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் உங்களை வந்தடையும்.

தொட்டது துலங்கி வெற்றி காணும் நேரமிது.

 மகரம்  உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். திடீர்ப்

ராசிபலன்

பணவரவு உண்டு. நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணிய தலங்களுக்குப் போய் வருவீர்கள். சகோதர வகையில் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளது. அதனால் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகளுடன் மோதல் போக்கைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

புதிய பாதையில் பயணிப்பீர்கள்.

ராசிபலன்

 கும்பம்  உங்களுடைய பலம், பலவீனத்தை அறிந்துகொள்வீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். பணம் பல வகைகளில் வந்து சேரும். பிள்ளைகளின் போக்கு சீராகும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சொத்து விஷயத்தைத் தள்ளிப்போடுவது நல்லது.

வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள்.

உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டிவரும்.

எதையும் போராடிப் பெற வேண்டியிருக்கும்.

 மீனம்  புதிதாகச் சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வழக்கு சாதகமாகும். பிள்ளைகளால்

ராசிபலன்

ஏற்பட்ட தடைகள் அகலும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். செலவுகள் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள், தோழிகள் அன்பாக இருப்பார்கள். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது.

வியாபாரத்தில் அதிரடி சலுகைகளை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.