Published:Updated:

சாதிக்கத் தூண்டும் 2012 புத்தாண்டு!

சாதிக்கத் தூண்டும் 2012 புத்தாண்டு!

சாதிக்கத் தூண்டும் 2012 புத்தாண்டு!

சாதிக்கத் தூண்டும் 2012 புத்தாண்டு!

Published:Updated:
சாதிக்கத் தூண்டும் 2012 புத்தாண்டு!
சாதிக்கத் தூண்டும் 2012 புத்தாண்டு!
சாதிக்கத் தூண்டும் 2012 புத்தாண்டு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறையில் மேல்நோக்கு கொண்ட உத்திரட்டாதி நட்சத்திரம்; மீன ராசி, அஷ்டமி திதி, வரீயான் நாம யோகம், பத்திரை நாமகரணம், நேத்திரம் ஜீவனம் கூடிய சித்த யோக நன்னாளில், சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்ட நேரம்... நள்ளிரவு 12:34-க்கு 2012 புத்தாண்டு பிறக்கிறது.

எண் ஜோதிடப்படி, தன்னம்பிக்கை கிரகமான புதனின் ஆதிக்கத்தில் (2 0 1 2=5), புத்தாண்டு பிறப்பதால், மக்களிடையே சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். அதிகம் சம்பாதிக்கவும், அதை தக்கவைத்துக் கொள்ளும் ஆசையும் பிறக்கும்.

ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர் கள், பெரிய பதவியில் அமர்வார்கள். பிரபலங்களின் சுய சரிதை நூல்களால் ஆங்காங்கே குழப்பங்கள் உண்டாகும். குழந்தைகளின் பேச்சுத்திறன் அதிகரிக்கும்.

இயற்பியல் மற்றும் விளையாட்டு துறை தொடர்பான நவீன நூல்கள் வெளியாகும். தேர்வு முறை எளிதாகும்; செய்முறை தேர்வுக்கு முக்கியத்துவம் தரப்படும். செயற்கைக் கோள்கள் அதிகம் ஏவப்படும். செவ்வாய் கோள் பற்றிய சில உண்மைகள் கண்டறியப்படும். வான் மண்டலத்தில் இருக்கும் கனிம- கரிம வளங்களை பயன்படுத்த அமெரிக்கா, சீனா முதலான நாடுகள் ஆயத்தமாகும்.

##~##
ஞான கிரகமான கேதுவின் ஆதிக்கத்தில், புத்தாண்டின் விதி எண் (1 1 2 0 1 2=7) வருவதால், ஆன்மிகத்தின் பக்கம் மக்கள் மனம் திரும்பும். கோயிலைவிட தியான மையங்களிலும், சித்தர் பீடங்களிலும் கூட்டம் அலைமோதும். எனினும் ஆன்மிக தலைவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும். நாகத்தின் பெயர் கொண்டவர்கள் புகழ் அடைவார்கள். சிறிய பதவிகளைப் பிடிப்பதற்கும் பெரிய சண்டைகள் வரும். அறிவுஜீவிகளின் ஆலோசனையை மக்கள் புறக்கணிப்பர்.

கடன் வாங்குவோர் மற்றும் கடனை திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் எண்ணிக்கை உயரும். உலக நடப்புகளை அறிய மக்கள் ஆர்வம் காட்டுவர். பிரபலங்கள் குறித்த வதந்தி கள் அதிகரிக்கும். பத்திரிகை துறையினர் பாதிப்படைவர். ஐ.டி. துறையினருக்கு சம்பளம் குறையும். வேலை இழப்புகள் அதிகரிக் கும். பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகமாகும். மாணவர்களிடையே கவனச்சிதைவு அதிகரிக்கும்.

சாதிக்கத் தூண்டும் 2012 புத்தாண்டு!

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறப்பதால் மழை அதிகமாகும். உணவு உற்பத்தி கூடும். எனினும் பூச்சித் தொல்லையால் விவசாயம் பாதிக்கும். உரம் விலை அதிகமாகும். சீனா, ஜப்பான், திபெத் ஆகிய தேசங்கள் பாதிப்புக்குள்ளாகும். அதிக மைலேஜ் தரக்கூடிய வாகனங்களின் உற்பத்தி அதிகரிக்கும். நவீன இரு சக்கர வாகனங்கள் சந்தைக்கு வரும். கணினி, செல்ஃபோன் முதலான சாதனங்களின் விலை வீழ்ச்சி அடையும்.

சாதிக்கத் தூண்டும் 2012 புத்தாண்டு!

22.6.2012 வரை செவ்வாய் சிம்ம ராசியிலேயே நிற்பதால், இந்த ராசிக்காரர்களின் உடல்நிலை பாதிப்படையும். ரியல் எஸ்டேட் தொழில் நலிவடையும். ஆனால் அக்டோபர் மாதத்திலிருந்து சூடு பிடிக்கும். சாலைகள் நவீனமயமாகும். நகர வாழ்க்கையில் மோகம் குறைந்து, புறநகர்ப் பகுதிகளுக்கு மக்கள் இடபெயர்வார்கள். அரசியலில் எதிரும்புதிருமாக இருந்தவர்கள், ஒன்றுசேர்ந்து புதிய கூட்டணி அமைப்பார்கள். எதிர்க்கட்சிகள் வலுவடையும்.

16.5.2012 வரை குரு பகவான் மேஷத்தில் நிற்பதால், கால்நடைகள் பாதிப்படையும். 17.5.2012 முதல் குரு பகவான் ரிஷபத்தில் அமர்வதால், இந்தியாவில் மகான்கள் அவதரிப்பார்கள். காவல் துறை நவீனமாகும். சாதாரண அடித்தட்டு மக்களின் குரலுக்கு, நீதி மன்றம் செவிசாய்க்கும். குற்றவாளிகளுக்கு எதிரான தீர்ப்புகள் கடுமையாகும். சமையல் எரிவாயுவின் விலை உயரும். தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயரும்.

சாதிக்கத் தூண்டும் 2012 புத்தாண்டு!

கால புருஷனின் 12-வது ராசியான மீனத்தில், புத்தாண்டு பிறப்பதால், மக்களிடையே சேமிப்புகள் கரையும்; பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். சுற்றுலா துறை சூடுபிடிக்கும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். கடல்வாழ் உயிரினங்களைக் காக்க, சர்வ தேச அளவில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உலகெங்கும் பனிமலைகள் உருகி, கடலின் நீர் மட்டம் உயரும். கடல் உணவு வகைகளை மக்கள் விரும்பி உண்ணுவார்கள். பால் உற்பத்தி அதிகரிக்கும். விளையாட்டுத் துறையில் இந்தியா சாதிக்கும்.

பொதுவில் இந்தப் புத்தாண்டு, மக்களிடம் விழிப்பு உணர்வையும், போட்டி மனப்பான்மையையும் அதிகப்படுத்துவதாக இருக்கும்.

பரிகாரம்: சுய மரியாதை கிரகமான புதன் மற்றும் ஞான கிரகமான கேதுவின் ஆதிக்கத்தில் புத்தாண்டு பிறப்பதால், இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்வது சிறப்பு. தினப் பிரார்த்தனையும், குலதெய்வ வழிபாடும் நலம் சேர்க்கும்.