Election bannerElection banner
Published:Updated:

மேஷம்

2012 புத்தாண்டு ராசிபலன்கள்!

மேஷம்

ற்றவரின் உணர்வுக்கு மதிப்பளிப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்துள்ளபோது, புத்தாண்டு பிறக்கிறது. கறாராகப் பேசி, செயல்பட முடிவெடுப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். உங்களுக்கு 12-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், பயணங்கள் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆடை- ஆபரணங்கள் சேரும்.

16.5.2012 வரை ஜென்ம குரு நீடிப்பதால், அவ்வப்போது கோபம் எழும்; நிம்மதியின்றித் தவிப்பீர்கள். தாழ்வு மனப்பான்மையை அறவே அகற்றுங்கள். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. 17.5.2012 முதல் குரு பகவான், உங்கள் ராசியை விட்டு விலகி, 2-ல் அமர்வதால் கோபம் குறையும்; கனிவான பேச்சால் சாதிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும்; கடன் அடைபடும். வாந்தி, அடிவயிற்றில் வலி, கண் பிரச்னை போன்றவை சரியாகும். பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வர்.

உங்களின் ராசிநாதனான செவ்வாய், புதுவருடம் துவங்கும்போதிலிருந்து,  22.6.2012 வரை 5-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால், கர்ப்பிணிகளுக்கு கவனம் தேவை. வயிற்றில் குழந்தையின் வளர்ச்சியை அவ்வப்போது பரிசோதிப்பது நல்லது. சகோதரர்களால் அலைச்சல், செலவுகள் உண்டு. விமர்சனத்தைத் தவிர்க்கவும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை, முடிந்த வரையிலும் பேசித் தீர்க்கப் பாருங்கள். பிள்ளைகள் விருப்பத்துக்கேற்ற உயர் கல்வியைத் தொடர அனுமதியுங்கள். சொத்து விற்பது-வாங்குவதில் கவனம் தேவை. 23.6.2012-க்கு பிறகு செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், சிக்கல்கள் நீங்கும். உடன்பிறந்தோர் உதவுவர்.

##~##
வருடம் பிறக்கும்போது 2-ஆம் வீட்டில் கேதுவும், 8-ஆம் வீட்டில் ராகுவும் அமர்ந் திருப்பதால், தம்பதிக்குள் பனிப்போர் இருக்கும். பரஸ்பரம் விட்டுக்கொடுப்பது நல்லது. 1.12.2012 முதல் உங்கள் ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் நுழைவதால், லாகிரி வஸ்துகளைத் தவிர்ப்பது நல்லது. சனி பகவான் ராசிக்கு 7-ஆம் வீட்டில் நிற்கும்போது, புத்தாண்டு பிறப்பதால் திடீர் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வரவேண்டாம். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. மனைவி வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் எழும். மகளுக்கோ, மகனுக்கோ திருமண முயற்சியில் இருப்பவர்கள், நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் அதிக நாள் இடைவெளி விட வேண்டாம். அரசாங்க வரிகளைச் செலுத்துவதில் தாமதம் கூடாது. சட்டத்துக்கு புறம்பாகச் செயல்பட வேண்டாம். சனி பகவான் வக்கிரமாகி, 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் அமர்வதால், திடீர் யோகம் உண்டு.

வியாபாரத்தில், மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களைச் சொல்ல வேண்டாம். ஜூன் மாதத்தில் இருந்து வியாபாரம் சூடு பிடிக்கும். உணவு, கமிஷன் மற்றும் மர வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழில் வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு, வேலைப்பளு கூடும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். அதிகாரிகளிடம் அதிக உரிமையுடன் பேச வேண்டாம். வருடத்தின் பிற்பகுதியில் ஊதியம்-பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். சிலருக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை அமையும்.

கன்னிப் பெண்களுக்கு, ஜூன் மாதத்தில் இருந்து மாதவிடாய்க் கோளாறு சரியாகும். திருமணம் முடியும். சிலர், தடைப்பட்ட உயர் கல்வியைத் தொடர்வீர்கள். தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். கலைத் துறையினர், வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழ் அடைவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு... ஜூன் மாதத்தில் இருந்து, சவால்களில் வெற்றி பெற வைப்பதுடன், வருமானத்தையும் வாரி வழங்குவதாக அமையும்.

மேஷம்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு