Published:Updated:

ரிஷபம்

2012 புத்தாண்டு ராசிபலன்கள்!

ரிஷபம்

2012 புத்தாண்டு ராசிபலன்கள்!

Published:Updated:
ரிஷபம்

ண்மையையே நேசிப்பவர் நீங்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 9-ஆம் வீட்டில் வலுவாக நிற்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். சிலருக்கு, குழந்தை பாக்கியம் உண்டு. பணப் புழக்கம் அதிகரிக்கும். தடைப்பட்ட கல்யாணம் முடியும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள்.

வீடு கட்டும் பணி பூர்த்தியாக, வங்கிக் கடன் கிடைக்கும். இந்த ஆண்டு முழுக்க, உங்களின் பிள்ளைகளுக்கு அனுகூலமான காலம். புதன் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், செல்வாக்கு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

16.5.12 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் நிற்பதால், வீண் செலவுகள் அதிகமாகும்.

ஆக்கப்பூர்வ பணிகளுக்காக வெளியிலும் கடன் வாங்க வேண்டியிருக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தில், பாகப் பிரிவினை நல்லவிதமாக முடியும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். 17.5.12 முதல் குரு உங்கள் ராசிக்குள்ளேயே அமர்வதால், உடல் நலத்தில் கவனம் தேவை. எவரை நம்பியும் பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். கோபத்தைத் தவிர்க்கவும். தம்பதிக்குள் விட்டுக்கொடுத்துப் போகவும். குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டு. செரிமானக் கோளாறு, தலைச்சுற்றல் வரக்கூடும். ஆபரணங்களை இரவல் தருவதோ, சாட்சிக் கையெழுத்திடுவதோ கூடாது.

##~##
22.6.12 வரை செவ்வாய் 4-ஆம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால், புதிய முயற்சிகளில் வெற்றியுண்டு. தாழ்வு மனப்பான்மை நீங்கும். நெருக்கமானவர்களுடன் மோதல், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்துத் தகராறு வந்து செல்லும். 23.6.12-க்கு பிறகு, செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த உதவிகள் உண்டு. மூத்த சகோதரர் உறுதுணையாக இருப்பார். வருட துவக்கத்தில் இருந்தே ராசிக்குள் கேதுவும் 7-ஆம் வீட்டில் ராகுவும் இருப்பதால், குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படும். சேமிப்பு கரையும். ஏமாற்றங் கள் நேரிடலாம்; பண விஷயத்தில் கறாராக இருங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பை பிரச்னை வரக்கூடும். ஆனால் 1.12.12 முதல் கேது 12-ஆம் வீட்டிலும், ராகு 6-ஆம் வீட்டிலும் வந்து அமர்வதால், ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். பிரபலங்களால் உதவியுண்டு. அரசாங்க காரியங்கள் முழுமையடையும்.

சனி உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டிலேயே பலம் பெற்று அமர்ந்துள்ளதால், பிரச்னைகளைச் சமாளிக் கும் மனோபலம் வாய்க்கும். நாடாளுவோர், வேற்று மொழிக்காரர்கள் ஆதரவாக இருப்பர். ஷேர் மூலம் பண வரவு உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அந்தஸ்து உயரும். சனி பகவான் வக்கிரமாகி, 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் அமர்வதால், பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும்.  

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபத்தைப் பெருக்குவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புதிய முதலீடுகளால் போட்டியாளர்களைத் திகைக்கச் செய்வீர்கள். ஷேர், என்டர்பிரைசஸ் மற்றும் மர வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில், உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். பதவி - சம்பள உயர்வு எல்லாம் உண்டு.

கன்னிப் பெண்கள் பெற்றோரின் பாச மழையில் நனைவார்கள். ஆடை- அணிகலன்கள் சேரும். தடைப்பட்ட கல்வியைத் தொடர்வார்கள். மாணவர்கள், நல்ல கோர்ஸில் சேர்வார்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். கலைத் துறையினர் கௌரவிக்கப்படுவர். சம்பள பாக்கி கைக்கு வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, செல்வாக்கையும் வசதி, வாய்ப்புகளையும் உங்களுக்கு அள்ளித் தருவதாக அமையும்.

ரிஷபம்