Published:Updated:

மிதுனம்

2012 புத்தாண்டு ராசிபலன்கள்!

மிதுனம்

2012 புத்தாண்டு ராசிபலன்கள்!

Published:Updated:
மிதுனம்

ன்னம்பிக்கை மிகுந்தவர் நீங்கள். உங்கள் ராசிநாதனான புதன் உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், புத்தாண்டு பிறக்கிறது. உறவினர்-நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். வீடு-வாகனம் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்கள் பிள்ளைகளுக்கு அயல்நாட்டில் கல்வி பயிலும் யோகம் கூடிவரும். தந்தை வழிச் சொத்துகள் வந்து சேரும். புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

16.5.12 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் வலுவாகக் காணப்படுவதால் திடீர் யோகம், பண வரவு உண்டு. மூத்த சகோதரர் உதவுவார். நேர்மறை எண்ணங்கள் உருவாகும். சமூகத்தில் மரியாதை கூடும். பதவிகள் தேடி வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு கட்டும் பணி, தடையின்றி தொடரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

17.5.12 முதல், குரு உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டில் சென்று மறைவதால், திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். அறிமுகம் இல்லாதவரை, வீட்டில் சேர்க்கவேண்டாம். கோயில் கும்பாபிஷேகம் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வருட துவக்கத்திலிருந்து 22.6.12 வரை செவ்வாய் 3-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வீடு- மனை வாங்குவது லாபமாக முடியும். சிலர், வீட்டை விரிவுபடுத்துவார்கள். கைமாற்றுக் கடன் அடைபடும். மகளின் கல்யாணம் சிறப்பாக நடந்தேறும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். சகோதர - சகோதரிகள் பாசமாக நடந்துகொள்வர். எதிர்த்துப் பேசியவர்களும் வலிய வந்து நட்பு பாராட்டுவர். வி.ஐ.பி-கள், தக்க நேரத்தில் உதவுவார்கள். அதீத கவனத்துடன் செயல்படுவீர்கள்.

##~##
வருடம் பிறக்கும்போது, 6-ல் ராகுவும், 12-ல் கேதுவும் அமர்ந்திருப்பதால் வெளிநாட்டுப் பயணம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அண்டை மாநிலத்திலுள்ள புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். 1.12.12 முதல் உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் ராகுவும், 11-ஆம் வீட்டில் கேதுவும் நுழைவதால், செயல்களில் தெளிவு பிறக்கும். எதையும் முதல் முயற்சியில் செய்து முடிக்க நினைப்பீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. மகான்களின் ஆசி கிடைக்கும். இளைய சகோதரர், உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார். அரசாங்க வேலைகளில் வெற்றியுண்டு.

சனி பகவான் ராசிக்கு 5-ஆம் வீட்டில் தொடர்வதால், உயர் கல்வி, வேலையின் பொருட்டு பிள்ளைகள் உங்க ளைப் பிரிவார்கள். தாய்மாமன் வகையில் செலவுகள் இருக்கும். குலதெய்வ கோயிலுக்கு மறக்காமல் சென்று வாருங்கள். சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் அமர்வதால், வீடு-வாகன பராமரிப்புச் செலவுகள், தாயாருடன் மனத் தாங்கல் வரும்.

வியாபாரத்தில் அமோக லாபம் உண்டு. புதிய கிளைகள் தொடங்குவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுக நிலை உண்டு. வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை ஆலோசித்து முடிவெடுக்கவும். உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். உத்தியோகத்தில், வருட துவக்கத்திலேயே உங்கள் கை ஓங்கும். சம்பளம் - பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். சிலருக்கு புது வேலை அமையும்.

கன்னிப் பெண்களுக்கு, புது வருடத்தின் முற் பகுதியிலேயே நல்ல கணவன் அமைவார். வேலையும் கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். கலைத் துறையினருக்கு, சம்பள பாக்கி கைக்கு வரும். புகழ் அடைவீர்கள்.

மொத்தத்தில், இந்த புத்தாண்டின் பிற்பகுதி கொஞ்சம் அலைச்சலையும், மையப் பகுதி ஓரளவு வளர்ச்சியையும், முற்பகுதி அதிரடி வளர்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையும்.

மிதுனம்