Published:Updated:

கடகம்

2012 புத்தாண்டு ராசிபலன்கள்!

கடகம்

2012 புத்தாண்டு ராசிபலன்கள்!

Published:Updated:
கடகம்

த்தியத்துக்குக் கட்டுப்பட்டவர் நீங்கள். உங்கள் 9-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், பண வரவு உயரும். எனினும், கடன் பிரச்னையிலிருந்து விடுபட, ஓயாமல் உழைப்பீர்கள். சுக்கிரன், உங்களது ராசியைப் பார்த்துக்கொண்டிருப்பதால், தோற்றப்பொலிவு கூடும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். நல்ல வீடு அமையும்.

16.5.12 வரை குரு உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் தொடர்வதால் வேலைப் பளு, வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பிரபலங்களைப் பகைக்க வேண்டாம். எவரிடமும் குடும்ப அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். பழைய கடன் பிரச்னைகள் மனதை வாட்டும். ஊர் பொது விவகாரங்களில், நீங்கள் உதவி செய்யப்போய், உபத்திரவத்தில் சிக்கிக்கொள்ளலாம்! வங்கிக் காசோலைகளில் முன் தேதியிட்டு கையெழுத்திட வேண்டாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

17.5.12 முதல் உங்கள் ராசிக்கு 11-ஆம் வீடான லாப வீட்டில் குரு அமர்வதால், திடீர் பண வரவு உண்டு. நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு, பணி நிரந்தரமாகும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். மகான்களின் ஆசி கிட்டும். குழந்தை இல்லாதவர் களுக்கு, இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். மகனின் திருமணத்தை விமரிசையாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். வங்கிக் கடனில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள். வருட துவக்கத்திலிருந்து 22.6.12 வரை செவ்வாய் 2-ஆம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால், செலவுகள் கூடும். காரசாரமான பேச்சால் நட்பை இழக்க நேரிடலாம். 23.6.12-க்கு பின்னர், செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், சொத்து வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

வருடம் பிறக்கும்போது ராகு 5-ஆம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகள் கோபப்படுவர். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்கில், வழக்கறிஞரின் ஆலோசனையின்றி முடிவெடுக்க வேண்டாம். கேது 11-ஆம் வீட்டில் தொடர்வதால் ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். 1.12.12 முதல் உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் ராகுவும், 10-ஆம் வீட்டில் கேதுவும் நுழைவதால் வேலை அதிகரிக்கும். நெருங்கிய உறவினர், நண்பரை இழக்க நேரிடும்.  

##~##
சனி உங்கள் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டிலேயே தொடர்வதால், இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். தாயாருக்கு சிறு சிறு விபத்துகள் நிகழலாம். தாய்வழிச் சொத்தை விற்று விட்டு, புது சொத்து வாங்குவீர்கள். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சனி வக்கிரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை, உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் அமர்வதால் இந்த காலகட்டத்தில் திடீர் பண வரவு உண்டு.

வியாபாரிகளுக்கு, மார்ச் மாதத்திலிருந்து லாபம் உயரும். சலுகைகளால், புதிய வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். பங்குதாரர்கள், அவ்வப்போது புலம்பினாலும் ஒத்துழைப்பர். ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும். கமிஷன், உணவு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகஸ்தர்கள், 16.5.12 வரை வீண் பழிகளைச் சுமக்க நேரிடும். 17.5.12 முதல், குரு உத்தியோக ஸ்தானத்தை விட்டு விலகுவதால், உங்களுக்கு ஆதரவான மேலதிகாரி பணியில் வந்து சேர்வார். ஜூன், செப்டம்பர் மற்றும் நவம்பரில் ஊதிய உயர்வு உண்டு.

கன்னிப் பெண்கள், இந்த ஆண்டில் படிப்பை முடிப்பீர்கள். வருடப் பிற்பகுதியில் வேலையும் கிடைக்கும். மாணவர்கள், அறிவியல் - கணிதத்தில் கவனம் செலுத்த வேண்டும். கலைஞர்களுக்கு, திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வீண் பழி நீங்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, முற்பகுதியில் சில சிரமங்களைத் தந்தாலும், 17.5.12 முதல் வெற்றியும், யோகமும் அள்ளித் தருவதாக அமையும்.

கடகம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism