Published:Updated:

சிம்மம்

2012 புத்தாண்டு ராசிபலன்கள்!

சிம்மம்

2012 புத்தாண்டு ராசிபலன்கள்!

Published:Updated:
சிம்மம்

லாசாரத்தை மதிப்பவர் நீங்கள். உங்களின் யோகாதிபதி செவ்வாய் உங்கள் ராசியிலேயே அமர்ந்திருக்கும் நேரத்தில், புத்தாண்டு பிறக்கிறது. வீடு-மனை வாங்க முயற்சிப்பீர்கள். சகோதரர்கள் உதவுவர். சொத்து வழக்குகள் தீரும். உங்களுக்கு 8-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகளும் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம். சுக்கிரன் 6-ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

16.5.12 வரை குரு பகவான் ராசிக்கு 9-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கைமாற்று கடனை அடைப்பீர்கள். புதிய சொத்து வாங்குவதற்கான மீதித் தொகையும் கிடைக்கும். தந்தையின் உடல்நிலை சீராகும். வங்கிக் கடனும் அடைபடும். விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். 17.5.12 முதல் குரு, உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் அமர்கிறார். எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிக்கவும். அரசாங்க வரிகளை தாமதமின்றி செலுத்துங்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. அவசரப்பட்டு வேறு நிறுவனத்துக்கு மாற வேண்டாம். அரசு அங்கீகாரம் இல்லாத வங்கிகளில் வைப்புத் தொகை வைக்க வேண்டாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வருட துவக்கத்திலிருந்து 22.6.12 வரை செவ்வாய் ராசிக்குள்ளேயே வக்கிரமாகி நிற்பதால், சிலநேரம் எதிலும் ஆர்வம் இல்லாத நிலை உருவாகும். 23.6.12-க்கு பிறகு, செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், மன இறுக்கம் விலகும். சகோதர வகையில் சங்கடங்கள் தீரும். வருடம் பிறக்கும்போது ராகு 4-ல் நிற்பதால், தாயாருக்கு சிறு சிறு அறுவை சிகிச்சைகள், மூட்டு வலி வந்து நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும். சிலர், வீடு மாற நேரிடும். கேது 10-ஆம் வீட்டில் தொடர்வதால் மறைமுக எதிர்ப்பு, வேலைச்சுமை, ஒற்றைத் தலைவலி வந்துபோகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் பழி சுமத்துவார்கள். 1.12.12 முதல் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 9-ல் கேதுவும் நுழைகின்றனர். வழக்குகள் விரைந்து முடியும். வட்டிக் கடனைத் தீர்ப்பீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

##~##
சனி, உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் அமர்ந்திருப் பதால், சவாலான காரியங்களையும் எளிதில் முடிப்பீர்கள்.

வழக்கின் மூலம் பணம் வரும். பழைய சொத்தை நல்ல விலைக்கு விற்பீர்கள். ஆனால் சனி வக்கிரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டில் பாதச் சனியாக அமர்வதால் சிறு விபத்து, குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும்.  

வியாபாரத்தில் உணவு, கெமிக்கல், ஏற்றுமதி - இறக்குமதி மற்றும் மர வகைகளால் ஆதாயம் உண்டு. கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர், இடமாற்றமும் செய்வார்கள். புதிதாக முதலீடு செய்யலாம். ஜனவரி, மே மற்றும் ஜூன் மாதங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பங்குதாரர்களை மாற்றவேண்டிய சூழல் ஏற்படும். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, சம்பளம் உயரும். பெரிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள்.  சிலருக்கு இடமாற்றம், மறைமுக எதிர்ப்பு, சிறு சிறு விசாரணைகளைச் சந்திக்க நேரிடலாம். அரசு நிறுவனங்களில் பணியாற்றும் சிலர், விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு, தனியார் நிறுவனங் களுக்குச் செல்வீர்கள்.

கன்னிப் பெண்களுக்கு, நல்ல கணவர்கள் வாய்ப்பார்கள். தாயாருடன் கருத்துவேறுபாடுகள் விலகும். மாணவர்கள், கடின பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். போட்டிகளில் பரிசு- பாராட்டு பெறுவீர்கள். கலைத் துறையினரே! வீண் விமர்சனங்களுக்கு அஞ்ச வேண்டாம்.பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள்கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த புத்தாண்டு, உங்களை சவால்களில் வெற்றிபெற வைப்பதுடன், சாதிக்க வைப்பதாகவும் அமையும்.

சிம்மம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism