Election bannerElection banner
Published:Updated:

கன்னி

2012 புத்தாண்டு ராசிபலன்கள்!

கன்னி

வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவர் நீங்கள். உங்களின் பிரபல யோகாதிபதி சுக்கிரன், 5-ல் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள்.

மகனுக்கு நல்ல மணப்பெண் வாய்ப்பாள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனங்களில் வேலை கிடைக்கும். வீடு கட்டும் பணிக்கு, வங்கி லோன் கிடைக்கும். மனைவி வழியில் பிணக்குகள் நீங்கும். உங்கள் ராசியைச் சந்திரன் பார்ப்பதால், எல்லா விஷயங்களிலும் ஆர்வம் பிறக்கும். 16.5.12 வரை, உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் குரு மறைந்திருப்பதால், செலவுகள் துரத்தும். எனினும் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். சிலர், வீண் பழிச்சொல்லுக்கு ஆளாகலாம். 17.5.12 முதல் உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் குரு அமர்வதால் எதிலும் வெற்றியே! சிலருக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும். அரசு வேலைகள் தடையின்றி முடியும். அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். நிலம்- வீடு வாங்குவீர்கள். அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும்.

வருடத் துவக்கத்தில் இருந்து 22.6.12 வரை, செவ்வாய் 12-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் அலைச்சலும் ஆதாயமும் உண்டு. வழக்கில் அவசரம் வேண்டாம். 23.6.12-க்கு பிறகு, செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வருடம் பிறக்கும்போது, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு அமர்ந்திருப்பதால், சொத்து வாங்குவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக் கும். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். 9-ஆம் வீட்டில் கேது நிற்பதால், தோல்வி மனப்பான்மை நீங்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல்கள் தீரும். தந்தையின் உடல் நலம் பாதிக்கப்படலாம். பயணங்கள் அதிகரிக்கும். 1.12.12 முதல் உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டில் ராகு; 8-ஆம் வீட்டில் கேது நுழைவதால் பேச்சில்  தடுமாற்றம், விரக்தி வந்துபோகும். எவரை நம்பியும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

##~##
சனி ராசிக்கு 2-ஆம் வீட்டில் அமர்ந்து பாதச் சனியாகத் தொடர்வதால், வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். ஆனால், யோகாதிபதி சனி உச்சமாகி அமர்வதால் திடீர் பண வரவு உண்டு. எனினும் செலவுகளும் இருக்கும். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். கர்ப்பிணிகள், நெடுந்தூர பயணத்தைத் தவிர்க்கவும்; மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். சனி பகவான் வக்கிரமாகி, 26.3.12 முதல் 11.9.12 வரை ஜென்மச் சனியாக அமர்வதால் மன இறுக்கம், வீண் செலவு, ஒருவித படபடப்பு, நம்பிக்கையின்மை வந்து செல்லும்.

வியாபாரிகளுக்கு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். ஜூன், ஜூலை, நவம்பர் மாதங்களில் திடீர் திருப்பங்களும், லாபங்களும் உண்டு. உணவு, புரோக்கரேஜ், கமிஷன், எலெக்ட்ரிக்கல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களிடையே கருத்து வேறுபாடு மறையும். புதிய பங்குதாரர்களையும் சேர்ப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, சம்பளம் உயரும். பதவி உயர்வுக்காக நீங்கள் தொடுத்த வழக்கில் ஜூன், ஜூலை மாதங்களில் நல்ல தீர்ப்பு வரும். வேறொரு நல்ல வேலையும் தேடி வரும். ஏழரைச் சனி இருப்பதால், அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். மூத்த அதிகாரிகளைப் பற்றி குறை கூறாதீர்கள். முக்கிய பதிவேடுகளை கவனமாகக் கையாளுங்கள்.

கன்னிப் பெண்களுக்கு, நல்ல கணவர் அமைவார். மாணவர்கள், பெற்றோரின் ஆலோசனையை ஏற்று அதன்படி செயல்பட வேண்டும். கலைத் துறையினர், விமர்சனங்களைத் தாண்டி, சாதிப்பார்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களை சுறுசுறுப்பாக்குவதுடன், பதவி-புகழ் மற்றும் பண வரவைத் தந்து,உங்களை உயர்த்துவதாக அமையும்.

கன்னி
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு