Election bannerElection banner
Published:Updated:

துலாம்

2012 புத்தாண்டு ராசிபலன்கள்!

துலாம்

கேள்வி ஞானம் அதிகம் உள்ளவர் நீங்கள். உங்களது ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருக்கும்போது, புத்தாண்டு பிறக்கிறது. உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு உண்டு. மீதிப் பணத்தையும் தந்து, சொத்து பத்திரம் எழுதி முடிப்பீர்கள். பெரிய பதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் செல்வாக்கு உயரும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும்.

புதன் சாதகமாக இருப்பதால், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. சிலர், வசதியான வீட்டுக்குக் குடிபெயர்வர். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.  

16.5.12 வரை, உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால், வர வேண்டிய பணம் வந்து சேரும். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்களை பேசித் தீர்ப்பீர்கள். குழந்தை இல்லாமல் கலங்கியவர்களுக்கு, அழகான வாரிசு உருவாகும். தடைப்பட்ட கல்யாணப் பேச்சுவார்த்தை கூடிவரும். விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். மூத்த சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். 17.5.12 முதல், குரு 8-ல் மறைவதால், தம்பதிக்குள் வீண் சந்தேகம் எழும். வி.ஐ.பி-களுடன் கருத்து மோதல்கள், சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வீட்டுக் கடன் தவணையை, குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம். நண்பர்கள் சிலர் உங்களைத் தவறாக வழிநடத்தலாம்! சித்தர் பீடங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்.

வருடம் பிறக்கும்போது 2-ஆம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால், பேச்சில் கடுமை வேண்டாம். கேது 8-ஆம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள், செலவுகள் உண்டு.

##~##
பழைய வழக்கில், வழக்கறிஞரை ஆலோசித்து முடிவெடுக்கவும். 1.12.12 முதல் உங்கள் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் நுழைவ தால் மனக்குழப்பம், தலைச்சுற்றல், பல் வலி வந்து நீங்கும். மனைவிக்கு, கர்ப்பப்பை கோளாறு, சிறு சிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும்.

ஜென்மச் சனி தொடர்வதால், பழைய பிரச்னைகள் தலைதூக்கும். தம்பதிக்குள் சிறு சிறு பிணக்குகள் வந்துபோகும்; பெரிதாக்க வேண்டாம். உங்கள் யோகாதிபதி சனி பகவான் உச்சமாகி, ராசிக்குள் அமர்வதால், பணம் வரும். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களை பகைக்க வேண்டாம். வாகன பயணத்தில் கவனம் தேவை. உடல் எடை கூடும். நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்கவும். பண வரவு இருந்தாலும் வெளியிலும் கடன் வாங்க வேண்டி வரும். சனி பகவான் வக்கிர மாகி 26.3.12 முதல் 11.9.12 வரை, உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்வதால், அலைச்சலும் சுபச் செலவுகளும் வரும்.

வியாபாரிகளே! பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். ஆகஸ்டு, செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரம் அறிந்து புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்யுங்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் தேடி வரும். கண்ணாடி, துணி, ரியல் எஸ்டேட், பெட்ரோல், டீசல் வகைகளால் லாபம் உண்டு. விலகிச்சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். இடையூறு தந்த மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். பதவி- ஊதிய உயர்வு கிடைக்கும். பிப்ரவரி, மார்ச், ஆகஸ்டு மாதங்களில் பெரிய வாய்ப்புகள் தேடி வரும். கௌரவ பதவிகள் கிடைக்கும்.    

கன்னிப் பெண்களே, உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு, எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். விளையாட்டில் பதக்கம் உண்டு. கலைத் துறையினருக்கு, புது வாய்ப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு வளர்ச்சியையும், செல்வாக்கையும் தருவதாக அமையும்.

துலாம்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு