Published:Updated:

விருச்சிகம்

2012 புத்தாண்டு ராசிபலன்கள்!

விருச்சிகம்

2012 புத்தாண்டு ராசிபலன்கள்!

Published:Updated:
விருச்சிகம்

தொலைநோக்கு எண்ணம் கொண்டவர் நீங்கள். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்லும்போது புத்தாண்டு பிறப்பதால், எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வி.ஐ.பி-கள் உதவுவர். செலவும் அதற்கேற்ப வருமானமும் உண்டு. வீட்டை விரிவுபடுத்துவீர்கள். சிலர், வீடு மாறும் சூழல் உண்டாகும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள்.

ராசிநாதன் செவ்வாய், வருட துவக்கத்திலிருந்து 22.6.12 வரை, 10-ஆம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால், புதிய பொறுப்பு தேடி வரும். வேலை கிடைக்கும். சொத்து ஒன்றை விற்று, பழைய பிரச்னையைத் தீர்ப்பீர்கள். சொத்து வழக்குகள் சாதகமாகும். புதிதாக வீடு- வாகனம் வாங்குவீர்கள். தாய் வழியிலும், மனைவி வழியிலும் மதிப்பு உயரும். 16.5.12 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் மறைந்திருப்பதால் வீண் டென்ஷன், வேலைப்பளு, வீண் பழி வந்து நீங்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகள் வேண்டாமே! திட்டமிட்ட காரியங்கள், அலைச்சலுடன் முடியும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனில், ஒரு பகுதியை கொடுத்து முடிப்பீர்கள். ஆபரணங்கள், வீட்டுப் பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். உறவுகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

17.5.12 முதல், உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் குரு நுழைவதால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் முழுமை பெறும்; சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். தம்பதிக்குள் ஈகோ பிரச்னை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. தள்ளிப்போன வெளிநாட்டுப் பயணம் சாதகமாகும். மகனுக்கு நல்ல மணமகள் அமைவாள். வீடுகட்ட லோன் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை நீங்கும். சேமிக்கத் துவங்குவீர்கள்.

##~##
வருடம் பிறக்கும்போது ராசிக்குள் ராகு நிற்பதால் தலைச்சுற்றல், வாந்தி, நாக்கில் கசப்பு வந்து நீங்கும். முன்கோபம் மேலோங்கும். யோகா, தியானம் செய்வது நல்லது. 7-ஆம் வீட்டில் கேது அமர்வதால் தம்பதிக்குள் வீண் சச்சரவு எழும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு குடும்பத்தாரை பகைக்க வேண்டாம். 1.12.12 முதல் உங்கள் ராசிக்கு 6-ல் கேது; 12-ல் ராகு நுழைவதால், தைரியம் கூடும். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். ஆட்சியாளர்கள் அறிமுகமாவர். திடீர் பண வரவு உண்டு. அரசு அதிகாரிகள் நண்பராவார்கள்.

சனி பகவான் ராசிக்கு 12-ஆம் வீட்டில் விரயச் சனியாக தொடர்வதால் வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனதை வாட்டும். மகான்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களைப் பற்றி வீண் வதந்திகள் எழலாம். இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். 26.3.12 முதல் 11.9.12 வரையிலான காலத்தில், உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சனி அமர்வதால் திடீர் பண வரவு உண்டு. புது வேலை கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் ஜனவரி, ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். ஆகஸ்ட் மாதம், புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கெமிக்கல், கமிஷன், வாகன உதிரிப் பாகங்களால் லாபம் உண்டு. பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிக்கு ஆலோசனை வழங்கும் அளவுக்கு நெருக்கம் ஆவார்கள். ஜூன், ஜூலையில் பதவி- சம்பள உயர்வு கிடைக்கும்.

கன்னிப் பெண்களுக்கு, தோல் பிரச்னைகள் நீங்கும். போலி நண்பர்களை விலக்குவீர்கள். வேலை கிடைக்கும். கண்ணுக்கழகான கணவர் அமைவார். மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவர். கலைத் துறையினருக்கு, பழம்பெரும் நிறுவனங்களில் வாய்ப்பு கிடைக்கும்.படைப்புகளை, கடும் போராட்டத்துக்குப் பின் வெளியிடுவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு... துவக்கத்தில் பணப் பற்றாக்குறையைத் தந்தாலும், வருட மத்தியில் கனவை நனவாக்குவதாகவும், வாழ்வின் 2-வது அத்தியாயத்தைத் தருவதாகவும் அமையும்.

விருச்சிகம்