
உழைப்பால் உயர விரும்புபவர் நீங்கள். உங்களின் சுக வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. மனதில் நிம்மதி உண்டாகும். சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பண வரவு அதிகரிக்கும். வீடுகட்ட லோன் கிடைக்கும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். புதன் சாதகமாக இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். பழைய சொத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, புது வீடு வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
16.5.12 வரை உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால், நினைத்தது நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். வாரிசு இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வேலை இல்லாதவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். 17.5.12 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சென்று மறைவதால் விரயம், ஏமாற்றம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வேலைகள் அதிகமாகும். தம்பதிக்குள் 'ஈகோ’ வந்து போகும். சொத்து வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். எவருக்காகவும், ஃபைனான்ஸில் பணம் வாங்கித்தர வேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாகும். காசோலைகள், சொத்துப் பத்திரங்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
22.6.12 வரை செவ்வாய் 9-ஆம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால், புதிய முயற்சிகள் வெற்றி பெறும். பாதிப் பணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்துக்கு, மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளுக்கு மதிப்பு தருவீர்கள். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். அதிகாரப் பதவிக்குதேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
##~## |
வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்யவும். அனுபவம் இல்லாத துறையில் கால் வைக்க வேண்டாம். கொடுக்கல்- வாங்கல் சுமுகமாகும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், இரும்பு, துரித உணவு வகைகளால் லாபம் உண்டு. தேங்கிய சரக்குகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விற்றுத் தீரும். ஏப்ரலில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும். செப்டம்பர்- அக்டோபரில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில், உங்களின் மதிப்பு உயரும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். ஏப்ரலில், அயல்நாட்டு நிறுவனங்கள் அழைக்கும். வேலைச் சுமையும் இருக்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உயரதிகாரிகளின் ராஜ தந்திரத்தை உடைத்தெறிவீர்கள். உங்கள் மீது ஏதேனும் பொய் வழக்கு தொடரப்பட்டிருந்தால், அது தள்ளுபடியாகும்.
கன்னிப் பெண்களுக்கு, கல்யாணம் கைகூடும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். மாணவர்களுக்குப் பொறுப்பு உணர்வு மிகும். எதிர்பார்த்த பாடப் பிரிவில் உயர்கல்வியைத்தொடர்வார்கள். கலைத் துறையினரே, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் படைப்புகளுக்கு, வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, சந்தோஷம் தருவதாகவும், உங்களின் சாதனைப் பட்டியலை பெரியதாக்குவதாகவும் அமையும்.
