Published:Updated:

மகரம்

2012 புத்தாண்டு ராசிபலன்கள்!

மகரம்

2012 புத்தாண்டு ராசிபலன்கள்!

Published:Updated:
மகரம்

மைதியையும், அன்பையும் விரும்புபவர் நீங்கள். உங்களுக்கு 3-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், நினைத்தது நிறைவேறும். பிரபல யோகாதிபதியான சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். வீடு- வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். புது வேலைக்கான முயற்சி வெற்றி பெறும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள்.

16.5.12 வரை குரு உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால், இனந்தெரியாத கவலைகள் வந்து போகும். உறவினர்- நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அடுத்தவர் பிரச்னையில் தலையிடுவதும், வழக்குகளில் அவசர முடிவுகள் எடுப்பதும் வேண்டாம். அரசு வரிகளை தாமதமின்றி செலுத்துங்கள். 17.5.12 முதல் குரு உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டிலேயே தொடர்வதால், பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வீர்கள். பண வரவு உண்டு. காரியத் தடை நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிட்டும். மகளுக்கு கல்யாணம் கைகூடும். சொந்த வீட்டுக்குக் குடிபுகுவீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வருட துவக்கத்திலிருந்து 22.6.12 வரை 8-ஆம் வீட்டிலேயே அமர்ந்திருக்கும் செவ்வாய் அவ்வப்போது அலைக்கழிப்பார். பழைய பிரச்னைகள் தலைதூக்கும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் எழும். இரவு நேர பயணங்கள் வேண்டாம். உடன் பிறந்தவர்களுடன் கருத்துமோதல்கள் எழலாம். மின்சாதனங்களை கவனமாகக் கையாளவும்.

சொத்து வாங்கும்போது, தாய் பத்திரத்தை சரிபார்ப்பது நல்லது. வழக்கில், வழக்கறிஞரின் ஆலோசனையின்றி, எந்த முடிவும் எடுக்கவேண்டாம். 23.6.12-க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும்.

##~##
கேது உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. பூர்வீகச் சொத்தைப் பெற செலவு செய்ய வேண்டி வரும். எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். ராகு, உங்கள் ராசிக்கு 11-ஆம் வீட்டில் அமர்வதால் பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். சகோதர- சகோதரிகள் பாசமாக நடந்துகொள்வர். ஸ்பெகுலேஷன் மூலம் பணம் வரும்.

1.12.12 முதல் உங்கள் ராசிக்கு 4-ல் கேதுவும், 10-ல் ராகுவும் நுழைவதால், தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். வாகன விபத்து, காரிய தாமதம், டென்ஷன் வந்து போகும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். சனி, உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் தொடர்வதால், பண பலம் கூடும். புது பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். சொத்துப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். ஆனால், சனி வக்கிரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் அமர்வதால் இக்காலகட்டத்தில் செலவுகள் கூடும். தந்தைக்கு வேலைச்சுமை, அவருடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும்.

வியாபாரிகளே! மார்ச், மே மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் லாபம் இரட்டிப்பாகும். சொந்த இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். பெரிய நிறுவனங்களுடன் இணைந்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, ஷேர், சிமென்ட், செங்கல், உணவு வகைகளால் லாபம் உண்டு.

உத்தியோகஸ்தர்களுக்கு மே, டிசம்பர் மாதங்களில் புது சலுகைகள், சம்பள உயர்வும் உண்டு. உங்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கப்படும்.

கன்னிப் பெண்களுக்கு, சுப காரியங்கள் ஏற்பாடாகும். மாணவர்கள், தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு, பதவி உயர்வு உண்டு. கலைத் துறையினர் அரசால் கௌரவிக்கப்படுவார்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டின் துவக்கம் உங்களை சிரமப்படுத்தினாலும், வருடத்தின் மையப் பகுதியும், இறுதிப் பகுதியும் சாதிக்க வைக்கும்.

மகரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism