Published:Updated:

கும்பம்

2012 புத்தாண்டு ராசிபலன்கள்!

கும்பம்

2012 புத்தாண்டு ராசிபலன்கள்!

Published:Updated:
கும்பம்

பாசத்தால் அனைவரையும் கட்டிப் போடுபவர் நீங்கள். உங்கள் ராசிநாதன் சனி பகவான் 9-ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறக்கிறது. தன்னம்பிக்கை வளரும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட பிளான் அப்ரூவலாகும். வரவும் உண்டு செலவும் உண்டு!

மகளின் திருமணம் சிறப்பாக நடக்கும்; மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் கல்வி, உத்தியோகம் அமையும். வழக்கு சாதகமாகும். புது வேலை அமையும். தந்தைக்கு நெஞ்சு வலி, அலைச்சல் வந்து போகும். பிதுர் வழி சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. சனி வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் விரயம், ஏமாற்றம் வந்து செல்லும்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

16.5.12 வரை குரு உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் நிற்பதால், கடினமாக உழைத்து இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். சுபச் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணமும் வந்துசேரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் விலகும். வட்டிக் கடனை, போராடி பைசல் செய்வீர்கள். அதிரடி முடிவுகள் வேண்டாம். பால்ய நண்பர்கள், உதவ முன்வருவர். 17.5.12 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் அமர்வதால் மன உளைச்சல், மறைமுக எதிர்ப்பு, காரியத் தடைகள் வரக்கூடும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். சிலர், வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கடன் தொந்தரவுகள் அதிகரிக்கும். வழக்கு விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். வாகனப் பயணத்தில் கவனம் தேவை.

வருட துவக்கத்திலிருந்து 22.6.12 வரை 7-ல் நிற்கும் செவ்வாயின் நேரடிப் பார்வை உங்கள் மீது விழுவதால், மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பை வலி வந்து நீங்கும். எடுத்த காரியத்தை முடிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். எவருக்காகவும் உத்தரவாதக் கையெழுத்து இடவேண்டாம். 23.6.12-க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளி வட்டாரத்தில் உதவியுண்டு. ஒரு சொத்தை விற்று பழைய சிக்கல்களைத் தீர்ப்பீர்கள்.

##~##
வருடம் பிறக்கும்போது 4-ல் கேது நிற்பதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். போதுமான பணத்தை வைத்துக்கொண்டு வீடு கட்டத் துவங்குவது நல்லது. 10-ல் ராகு அமர்ந்திருப் பதால், மதிப்பு உயரும். பிரபலங்கள் உதவுவர். வேலைப்பளு அதிகரிக்கும்.

1.12.12 முதல் உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் ராகுவும் நுழைவதால், எதிலும் ஆர்வம் பிறக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். வீண் சந்தேகங்கள் நீங்கும்.  

வியாபாரிகள், பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். ஏப்ரல், மே மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். ஜூன் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, மருந்து, இரும்பு மற்றும் பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் உண்டு. நவம்பரில் அரசால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் நிதானம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலை அதிகமாகும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. சட்டத்துக்குப் புறம்பாக எவருக்கும் உதவ வேண்டாம். மே, ஜூன் மாதங்களில் வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் புது வாய்ப்புகள் வரும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் சம்பளம், சலுகை கூடும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

கன்னிப் பெண்களுக்குக் கல்யாணம் தள்ளிப்போய் முடியும். மாணவர்கள் அதிகாலை எழுந்து படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். கலைத்துறையினர், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. அவ்வப்போது உங்களைப் பற்றிய வீண் கிசுகிசுக்கள் வந்துபோகும்!

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, அனுபவ அறிவைத் தருவதுடன், அதன் மூலம் உங்களை வெற்றி பெற வைப்பதாக அமையும்.

கும்பம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism