
அனைத்தும் அறிந்தவர் நீங்கள். உங்களின் லாப வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறக்கிறது. எனவே, வீடு-வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பண வரவு உண்டு. குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். புது ஆபரணங்கள் சேரும். கல்யாணத் தடைகள் நீங்கும். மனைவி வழியில் பிணக்குகள் நீங்கும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். அந்தஸ்து உயரும். வழக்கு சாதகமாகும். உங்கள் ராசியிலேயே இந்தாண்டு பிறப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். எனினும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வீண் செலவுகளும் வேண்டாம்.
16.5.12 வரை குரு உங்கள் ராசிக்கு 2-ல் தொடர்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்; செலவுகளும் துரத்தும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் கல்யாணம் விமரிசையாக நடைபெறும். சிலர், வெளி மாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மூத்த சகோதரியின் பிரச்னைகள் நீங்கும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். 17.5.12 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் சில காரியங்களை, கடும் முயற்சிக்குப் பிறகு முடிக்க நேரிடும். எதிர்ப்புகள் அடங்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் இழுத்தடிப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில், மனத்தாங்கல் நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தவறானவர்களுடன் உறவாட வேண்டாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வருட துவக்கத்திலிருந்து 22.6.12 வரை, செவ்வாய் 6-ஆம் வீட்டில் அமர்ந்து இருப்பதால் தொட்டது துலங்கும். பிரபலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு- மனை வாங்குவீர்கள். சகோதரர்கள் பாசமழை பொழிவர். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். அரசு, அரசியல்வாதி களால் ஆதாயம் உண்டு. தாய்வழியில் மரியாதை கூடும். காசு புரட்டி, புது வீடு கட்டி குடிபுகுவீர்கள்.
##~## |
அஷ்டமத்துச் சனி தொடர்வதால் முன்கோபம், சிறு சிறு ஏமாற்றம், வீண் பழி வந்து செல்லும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். திடீர் நண்பர்களை வீட்டுக்குள் அழைத்துவர வேண்டாம். எவரிடமும் குடும்ப ரகசியங்களைப் பேசவேண்டாம். முன்யோசனை இல்லாமல் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறி ஆகும். சனி வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்வதால், மனைவியுடன் வாக்குவாதம் ஏற்படும். விரக்தி, சோர்வு உண்டாகும்.
வியாபாரிகளுக்கு, மே, ஜூன் மாதங்களில் லாபம் உயரும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். கூட்டுத் தொழிலில் நிதானம் தேவை. ஹோட்டல், கட்டடப் பொருட்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் இல்லையே என வருந்துவார்கள். இடமாற்றம் உண்டு. ஜனவரி, பிப்ரவரி, மே, அக்டோபர், டிசம்பர் மாதங்களில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
கன்னிப் பெண்கள், புதியவர்களை நம்ப வேண்டாம். வருட முற்பகுதியில் திருமணம் முடியும். மாணவர்களே! பாடத்தில் கவனம் செலுத்துங்கள். கலைத்துறையினருக்குப் புகழ் கூடும்.
மொத்தத்தில் புத்தாண்டின் முற்பகுதி... திடீர் பண வரவு, கௌரவம் ஆகியவற்றை பெற்றுத் தருவதாக அமையும்.
