Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஜூலை 10-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்

மேஷம்  கனவுகள் நனவாகும். பண வரவு அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார். விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த பிரிவினை நீங்கும்.

வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

வெற்றிகளைச் சந்திக்கும் வேளையிது.

 ரிஷபம்  புதிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நல்லது நடக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ராசி பலன்கள்



குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். நவீனப் பொருள்கள் வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவரின் கூடாப் பழக்கம் விலகும். சகோதரிக்குத் திருமணம் முடியும். செலவுகள் அதிகரிப்பதால் பணப்பற்றாக்குறையும் நீடிக்கும்.

வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதையறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களை வீழ்த்த சிலர் செய்த சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

பிரச்னைகள் முடிவுக்கு வரும் நேரமிது.

ராசி பலன்கள்

 மிதுனம்  உங்கள் ஆலோசனைகளைப் பிறர் ஏற்றுக்கொள்வார்கள். பிள்ளைகளுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நிர்வாகத் திறன் கூடும். இங்கிதமாகப் பேசி எதையும் சாதிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் இருந்துவந்த மனக்கசப்பு வந்து நீங்கும்.

வியாபாரத்தில் கைவசம் இருக்கும் பொருள்களை விற்று எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும், உழைப்புக்கேற்ற பாராட்டைப் பெறுவீர்கள்.

சமூகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும்.

 கடகம்  மனதில் உற்சாகம் பிறக்கும். தேங்கிக்கிடந்த பல வேலைகளை விரைவாகச் செய்து முடிப்பீர்கள்.

ராசி பலன்கள்

எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். கணவருக்குத் தொழிலில் முன்னேற்றம் உண்டு. உறவினர்கள் அனுசரித்துப் போவார்கள். சொத்துப் பிரச்னைகள் வந்து நீங்கும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு.

வியாபாரத்தில் புதிய பொருள்கள் விற்பனை, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

நிதானமாகச் சாதித்துக்காட்டுவீர்கள்.

ராசி பலன்கள்

சிம்மம்  இதுநாள் வரை இருந்த அலைச்சல், செலவுகள் நீங்கும். மன அமைதி கிட்டும். மனதில் தன்னம்பிக்கை துளிர்விடும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு உரிய பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகமாகும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.

வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வேலையாட்களை அனுசரித்து வேலை வாங்குங்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

விட்டுக்கொடுத்து வெற்றிபெறுவீர்கள்.

 கன்னி சுபச் செலவுகள் அதிகரிக்கும். திடீர்ப் பயணம் உண்டு. புதிய முயற்சிகள் பலிதமாகும்.

ராசி பலன்கள்

எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கணவர் நீங்கள் விரும்பிய வண்ணம் செயல்படுவார். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் அதிரடி லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உங்களின் திட்டமிட்ட பணிகளைப் பார்த்து உயரதிகாரி பாராட்டுவார்.

தொட்டதெல்லாம் துலங்கும் காலமிது.

ராசி பலன்கள்

துலாம்  செலவுகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். வசதி, வாய்ப்புகள் பெருகும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் முரட்டுத்தனத்தை அன்பால் மாற்றுவீர்கள்.

வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னையைத் தீர்க்க புதிய வழி பிறக்கும்.

உத்தியோகத்தில் வராமல் இருந்த பதவி உயர்வு வந்து சேரும்.

உழைத்து முன்னேறுவீர்கள்.

 விருச்சிகம்  சொத்து வாங்குவது, வீடு கட்டுவது சுலபமாகும். பெரிய பதவிகள் உங்களைத் தேடிவரும்.

ராசி பலன்கள்

கணவர் மனம்விட்டுப் பேசுவார். உறவுகளின் உண்மையான குணத்தை அறிந்துகொள்வீர்கள். தேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பணத்தைச் சேமிக்க முடியாதபடி செலவுகள் வந்துபோகும். பயணங்கள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் விரிவுபடுத்தும் முயற்சிகள் வெற்றியடையும். புதிய கிளைகளைத் தொடங்குவீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட மறைமுக எதிர்ப்புகளை சாதுர்யமாக முறியடிப்பீர்கள்.

வெற்றியைச் சுவைக்கும் வேளையிது.

ராசி பலன்கள்

 தனுசு  பாதியில் நின்ற வேலைகள் முடியும். புதிய இடம் வாங்குவீர்கள்.  கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். கணவருக்கு அலைச்சலும் வேலைச்சுமையும் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கோபத்தைக் கொட்ட வேண்டாம். கனிவுடன் நடந்துகொள்ளுங்கள்.

வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்கத் திட்டமிடுவீர்கள்.

உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

கடின உழைப்பால் முன்னேறும் நேரமிது.

 மகரம்  உங்களின் திறமைகள் வெளிப்படும். கடனாகக் கொடுத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். நீண்ட

ராசி பலன்கள்

நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கணவருடன் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளித்து வெற்றிபெறுவீர்கள்.

உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.

பொறுமை தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

 கும்பம்  எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். ஓரளவு பணமும் கிடைக்கும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்குக் கைகொடுப்பார்கள். பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள்.

வியாபாரத்தில் வேலையாட்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

உத்தியோகத்தில் உங்களின் புத்திசாலித் தனமான செயல்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.

திறமையால் வெற்றியடையும் தருணமிது.

மீனம் குடும்பத்தில் நீண்ட நாள்களாக இருந்த சச்சரவுகள் விலகி அமைதி உண்டாகும். பிள்ளைகளின்

ராசி பலன்கள்

விருப்பத்தைப் பூர்த்திசெய்வீர்கள். பயணங்களின்போது கவனம் தேவை. கணவரை அனுசரித்துப்போவது நல்லது. புதியவர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமைகள் இருக்குமென்றாலும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.

சிக்கல்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.