Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜூலை 17 -ம் தேதி முதல் 30 -ம் தேதி வரை‘ஜோதிடரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

ஜூலை 17 -ம் தேதி முதல் 30 -ம் தேதி வரை‘ஜோதிடரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்
ராசிபலன்

புதன் சாதகமாக இருப்பதால் வீட்டை விரிவுபடுத்த முடிவெடுப்பீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். சூரியன் வலுவாக இருப்பதால் பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். அரசு வகையில் அனுகூலம் உண்டாகும். சுக்கிரன் 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய சிக்கல்கள் தீரும். குடும்பத்தில், உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். செவ்வாயும், கேதுவும் 10-ம் வீட்டில் நிற்பதால், தந்தையின் உடல்நலம் சீராகும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும்.

குரு பகவான் ராசியைப் பார்ப்பதால் அழகு, இளமை கூடும். ஆனால் ராகு 4-ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமை தொடரும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் இழுத்துப்போட்டு செய்வீர்கள். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள்.

புதிய முயற்சிகளில் வெற்றி காணும் வேளை இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராசிபலன்

புதனும், சூரியனும் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். உறவினர் களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளிடம் இருந்த பிடிவாதம் விலகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல்நலம் சீராகும். செவ்வாயும், கேதுவும் 9-ம் வீட்டில் நிற்பதால் விபத்து, வீண்செலவு ஆகியன குறையும். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். சுக்கிரன் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், உங்கள் செயலில் வேகம் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும்.

வாகனத்தை மாற்றுவீர்கள். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் பெருகும். பிள்ளைகள் உங்கள் மனப்பாங்கை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்வார்கள்.  குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். ஆனால் அஷ்டமச் சனி நடைபெறுவதால், எதிர்காலத்தை நினைத்து ஒரு பயம் இருக்கும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. பழைய பணியாளர்கள், பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் பாராட்டு ஆறுதல் தரும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும் நேரம் இது.

ராசிபலன்

புதன் 2-ம் வீட்டில் நிற்பதால், உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீடு, மனை வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். ஆனால் சூரியன் 2-ம் வீட்டில் நுழைந் திருப்பதால் வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. செவ்வாயும் கேதுவும் 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால், உடல்நலனில் கவனம் செலுத்தவும். சகோதர வகையில் சச்சரவுகள் வந்து நீங்கும்.

 சுக்கிரன் 3-ம் வீட்டில் நிற்பதால் திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டாகும். எதிர்மறை எண்ணங்கள், தாழ்வுமனப்பான்மை, கண், காது வலி உபாதைகள் ஆகியன நீங்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். கலைத் துறையினர், மூத்தக் கலைஞர்களின் வழிகாட்டுதலால் வெற்றியடைவார்கள்.

தொட்டது துலங்கும் தருணம் இது.  

ராசிபலன்

 உங்கள் ராசிக்குள் புதனும், ராசிக்கு 2-ம் வீட்டில் சுக்கிரனும் நிற்பதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். திடீர் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். முகப்பொலிவு கூடும். வாகனத்தைச் சரிசெய்வீர்கள். சிலர், புதிய வாகனம் வாங்குவீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். நவீன சாதனங்களை வாங்குவீர்கள். ராசிக்குள் சூரியன் நிற்பதால், சில நேரங்களில் கண் எரிச்சல் அதிகமாகும். வேலையில் அலட்சியம் வேண்டாம்.

செவ்வாயும் கேதுவும் 7-ம் வீட்டில் நிற்பதால், தடைப்பட்ட வேலைகள் விரைந்து  முடியும். வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்கும். பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும்.  உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரியவேண்டி வரும். வியாபாரத்தின் சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினர் தங்களுடைய படைப்புகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

விடாப்பிடியாகச் செயல்பட்டு, விட்டதைப் பிடிக்கும் காலம் இது.

ராசிபலன்

புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். கெளரவப் பதவிகள் தேடி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளைப் புதிய பாதை யில் வழி நடத்துவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். ராசிநாதன் சூரியன் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் திடீர்ப் பயணங்கள், வேலைச்சுமை அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் தாமதமாக முடியும். செவ்வாயும் கேதுவும் 6-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் குறையும்.

உறவினர்கள், நண்பர்களுடன் இருந்துவந்த உட்பூசல்கள் மறையும். அவர்கள் மத்தியில், உங்கள் மீதான் அதிருப்தி, மனவருத்தம் ஆகியன நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் சுமூகமாகும். பழுதான மின் சாதனம், டி.வி., ஃபிரிட்ஜ் ஆகியவற்றை மாற்று வீர்கள். இதுவரையிலும் உங்களின் நல்ல மனதைப் புரிந்துகொள்ளாத உடன்பிறந்தவர்கள், இனி உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிகச் சம்பளத்துடன் புது வேலை வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

வெற்றியாளர்களைச் சந்திக்கும் வேளையிது.

ராசிபலன்

ராசிநாதன் சாதகமான வீட்டில் நிற்பதால், உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை அமையும். சூரியன் 11-ம் வீட்டில் நிற்பதால், அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. புனிதப் பயணங்கள் சென்று வருவீர்கள். தாய்வழியில் ஆதரவு பெருகும். குரு பகவான் 2-ம் வீட்டில் நிற்பதால், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கௌரவிக்கப்படுவீர்கள். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும்.

சுக்கிரன் 12-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர்வழி உறவினர் மத்தியில் உங்களின் மதிப்பு கூடும். புதிய டிசைனில் நகைகள் வாங்குவீர்கள். திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்குச் சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

நினைத்ததை முடிக்கும் நேரம் இது.

ராசிபலன்

சூரியன், புதனுடன் சேர்ந்து 10-ம் வீட்டில் நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். பணவரவு உண்டு. சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். சகோதரர்களில் மூத்தவர் உங்களுக்கு உதவுவார். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். செவ்வாய் 4-ம் வீட்டில் அமர்ந்ததால், சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். சகோதரிக்குத் திருமணம் கூடி வரும்.

சுக்கிரன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் செல்வம், செல்வாக்கு கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். நவீனரக வாகனம் வாங்குவீர்கள். சனி 3-ம் வீட்டில் நிற்பதால், பிரச்னைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில், மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். கலைத்துறையினருக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.

போராட்டங்கள் முடிவுக்கு வரும் தருணம் இது.

ராசிபலன்

புதன் சாதகமாக இருப்பதால் புது முயற்சிகள் பலிதமாகும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பி-களின் உதவியால் தடைப்பட்ட சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். 9-ம் வீட்டில் சூரியன் நிற்பதால், தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. அக்கம்பக்கத்து வீட்டாரிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். செவ்வாய் 3-ம் வீட்டில் நீடிப்பதால், எதிலும் வெற்றி கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வீட்டை அழகுப்படுத்துவீர்கள். ஏளனமாகவும் இழிவாகவும் பேசியவர்கள், இனி உங்களை மதிப்பார்கள். ஏழரைச் சனி நடப்பதால், நல்லவர்களை மட்டும் அருகில் வைத்துக்கொள்ளவும். பெற்றோரின் அறிவுரையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத்துறையினர், மூத்தக் கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

சகிப்புத்தன்மையால் சாதிக்கும் காலம் இது.

ராசிபலன்

 புதன் 8-ம் வீட்டில் நிற்பதால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். சூரியன் 8-ம் வீட்டில் நிற்பதால், அரசு வேலைகளை அலைந்துதிரிந்துதான் முடிக்கவேண்டி வரும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. செவ்வாயும் கேதுவும் 2-ம் வீட்டில் நிற்பதால் டென்ஷன், படபடப்பு அதிகரிக்கும். சொத்துத் தகராறு வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல், செலவு ஏற்படலாம். சுக்கிரன் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால்  டென்ஷன் குறையும். வரவேண்டிய பணம் கைக்கு வரும் என்றாலும் பற்றாக்குறையும் நீடிக்கும்.

வெளியூர்ப் பயணங்களால் பலனடைவீர்கள். பழைய சொந்தபந்தங்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ஆனால் ஏழரைச் சனி இருப்பதால், எதிலும் அலட்சியம் வேண்டாம். வியாபாரம் சூடுபிடிக்கும். அதிரடி அறிவிப்புகளால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டு. கலைத்துறையினருக்கு அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும் வேளை இது.

ராசிபலன்

புதன் ராசியைப் பார்ப்பதால், புதிய சிந்தனைகள் தோன்றும். தந்தைவழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். செவ்வாயும் கேதுவும் ராசிக்குள் நிற்பதால் தூக்கமின்மை, சோர்வு, அசதி ஆகியன வந்து நீங்கும். சகோதரர்களுடன் மனவருத்தம் வராமல் பார்த்துக்கொள்ளவும். கோபம் அதிகமாகும். தியானம் செய்யவும். சுக்கிரன் 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால், எதிர்பாராத பணவரவு, திடீர்யோகம் உண்டு. வாகன வசதிகள் பெருகும்.

வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும். புதிதாக ஃப்ரிட்ஜ், டி.வி வாங்குவீர்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால், அரசாங்க அனுமதிபெற்று வீடு கட்டுவது நல்லது. இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப வேலையாள்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். கலைத்துறையினருக்குக் கிசுகிசுத் தொந்தரவுகள் வந்து போகும்.
 
அதிரடி மாற்றங்கள் நிகழும் காலம் இது.

ராசிபலன்

 சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் இடர்ப்பாடுகள், சிக்கல்களைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். அரசு வகையில் ஆதாயம் உண்டு. அயல்நாட்டில் இருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். ஆனால், புதன் 6-ம் வீட்டில் சென்று மறைந்திருப்பதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். அண்டை வீட்டாருடன் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புள்ளதால் வீண் வாக்குவாதம் செய்யவேண்டாம். செவ்வாய் 12-ம் வீட்டில் கேதுவுடன் சேர்ந்து நிற்பதால், சகோதர வகையில் இரட்டிப்புச் செலவுகள் ஏற்படும்.

 உங்கள் ராசியைச் சுக்கிரன்  பார்ப்பதால் பணம் வரும். புது தெம்பு பிறக்கும். முகப்பொலிவு கூடும். வாகனப் பழுது நீங்கும். பிரிந்த  கணவன் மனைவி ஒன்றுசேர்வார்கள். சனி லாப வீட்டில் நிற்பதால் டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்களைப் புதிதாக வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளைச் செய்யும்போது, நன்கு யோசித்து செயல்படவும். அதேபோ, புதிய முயற்சிகளையும் தள்ளிப்போடவும். உத்தியோகத்தில், மற்றவர்களை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்கவேண்டாம். சில வேலைகளை நீங்களே முன்னின்று கவனிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும்.

எதிலும் முன்னெச்சரிக்கை தேவைப்படும் வேளை இது. 

ராசிபலன்

புதன் 5-ம் வீட்டில் நிற்பதால் மகிழ்ச்சி தங்கும். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். சூரியன் 5-ம் வீட்டில் நிற்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படக்கூடும். செவ்வாயும் கேதுவும் லாப வீட்டில் நிற்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திடீர் யோகம் உண்டாகும். ஓரளவு பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்களின் மனம் கோணாதபடி நடந்துகொள்வார்கள்.

பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்துக்கு, மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். சுக்கிரன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தத்தால் புகழும் லாபமும் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். கலைத்துறையினரின் கலைத்திறன் வளரும்.

விருப்பங்கள் நிறைவேறும் காலம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism