
ஜூலை 24- ம் தேதி முதல் ஆகஸ்ட் 6- ம் தேதி வரை `ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

மேஷம்
புதிய சிந்தனைகள் தோன்றும்; கற்பனைவளம் பெருகும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். பணவரவு அதிகரிக்கும். கணவர் உங்களிடம் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார். வேலைகளை அலைச்சலுடன் முடிக்க வேண்டியிருக்கும்.
வியாபாரத்தில் நிலுவையிலிருந்த பாக்கிகள் வசூலாகும்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள்.
விடாமுயற்சியால் வெற்றிபெறும் நேரமிது.
ரிஷபம்

சவாலான வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு வகையில் அனுகூலம் உண்டு. புதுமனை புகுவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். அடமானம்வைத்த நகைகளை மீட்பீர்கள். பள்ளிக்காலத் தோழியைச் சந்திப்பீர்கள். நண்பர்கள் உறவினர்களுடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள்.
உத்தியோகம் உயரதிகாரிகள் பாராட்டும்படியாகச் செயல்படுவீர்கள்.
இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.

மிதுனம்
நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் எண்ண ஓட்டத்தை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். உங்களுடன் பழகும் தோழிகள், உறவினர்களின் பலம் பலவீனத்தை அறிந்துகொள்வீர்கள். நவீனப் பொருள்களைக் கவனமாகக் கையாளுங்கள்.
வியாபாரத்தில் விற்றவரை லாபம் என்ற போக்கே நீடிக்கும். எவருக்கும் கடன் தர வேண்டாம்.
உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும்.
திடீர்ச் செலவுகளால் திக்குமுக்காடும் நேரமிது.
கடகம்
சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவர்களின் தொடர்புக் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு

களைகட்டும். உறவினர்கள் முன்பாக, கணவர் உங்களைப் பெருமை யாகப் பேசுவார். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும்
வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.
உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது.

சிம்மம்
இதுநாள்வரை இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். புதிய வீடு வாங்குவீர்கள். திடீர்ப் பணவரவு உண்டு. கணவருக்குத் திடீர் யோகம் உண்டாகும். உங்கள் பிள்ளைகளிடம் மறைந்திருந்த திறமைகளை வெளிகொணர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். திடீர்ச் செலவுகள் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்கள் போக வேண்டி இருக்கும்.
வியாபார ரகசியங்கள் யார்மூலம் கசிகிறது என்பதை அறிந்து புதிய முடிவுகளை எடுப்பீர்கள்.
உத்தியோகத்தில் அதிகாரிகள் மட்டத்தில் செல்வாக்கு உயரும்.
பணவரவுக்குப் பஞ்சம் இருக்காது.
கன்னி

எடுத்த காரியங்கள் யாவற்றிலும் வெற்றி கிடைக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கணவரின் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டி அவரை மாற்றுவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்துக்குப் புதிய வழிகளை அமைத்துத் தருவீர்கள். உறவினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.
வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.
உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சிரமங்கள் ஏற்படும். எதிலும் அவசரம் வேண்டாம்.
திருப்பங்கள் நிறைந்த தருணமிது.

துலாம்
கௌரவப் பதவிகள் தேடி வரும். பிள்ளைகளை நல்வழிபடுத்துவீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பழகு வார்கள். ஒரே நேரத்தில் இரண்டு வேலை களைச் செய்யாதீர்கள். பணிச்சுமையால் கணவருக்கு மனஅழுத்தம் ஏற்படும். அவரிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் மூத்த அதிகாரி உங்களிடம் சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.
எல்லாவற்றையும் சாதிக்கும் வேளையிது.
விருச்சிகம்

புத்திசாலித்தனமாகப் பேசி காரியங்களைச் சாதிப்பீர்கள். கடனாகக் கொடுத்த பணம் வசூலாகும். கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் பெருகும். பிள்ளைகளின் உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்களிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொண்டு லாபம் ஈட்டுங்கள்.
உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுங்கள். வேண்டாத விஷயங்களில் தலையிடாதீர்கள்.
சகிப்புத்தன்மையுடன் செயல்படும் நேரமிது.

தனுசு
நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். உறவினர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொண்டு அசத்துவார்கள். கணவரின் செயல் அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்ளுங்கள். பணப்பற்றாக்குறை ஏற்படும்.
வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் மீண்டும் பணிக்கு வந்து சேர்வார்கள்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை ஏற்பார்.
நீண்ட நாள் ஆசை ஒன்று இப்போது நிறைவேறும்.
மகரம்
அடுத்தடுத்து நடக்கும் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து

சேரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள். நவீனப் பொருள்கள் வாங்குவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது கவனமாகப் பேசுங்கள்.
வியாபாரத்தில் கூடுதலாக முதலீடு செய்து அதிக லாபம் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரித்து கூடுதலாக வேலை பார்க்கவேண்டி வரும்.
யோசித்துச் செயல்படவேண்டிய வேளையிது.

கும்பம்
அரசு வகையிலான காரியங்கள் விரைந்து முடியும். கணவன் மனைவி அந்நியோன்யம் பெருகும். உறவினர்கள், தோழிகளின் வருகையால் வீட்டில் உற்சாகம் நிலவும். திடீர்ச் செலவுகள் ஏற்படும். வீடு, மனை வாங்குவது, விற்பது இரண்டிலுமே அவசரம் கட்ட வேண்டாம். பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும்.
வியாபாரத்தில் பிடிபடாமல் இருந்த நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிபெறுவீர்கள்.
வெற்றிகளை எதிர்நோக்கும் வேளையிது.
மீனம்
யதார்த்தமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.

தடைப்பட்டிருந்த வேலைகள் விரைந்து முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. பிள்ளைகளின் வெற்றிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.
வியாபாரத்தில் நீங்களே முடிவெடுங்கள்; மற்றவர்கள் சொல்வதைக் கேளாதீர்கள்.
உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் பேசும்போது கவனமாகப் பேசுங்கள்.
சிக்கல்கள் தீரும் நேரமிது.