Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜூலை 31 -ம் தேதி முதல் ஆகஸ்ட் 13 -ம் தேதி வரை‘ஜோதிடரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

ஜூலை 31 -ம் தேதி முதல் ஆகஸ்ட் 13 -ம் தேதி வரை‘ஜோதிடரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்
ராசிபலன்

புதன் சாதகமாக இருப்பதால், பழைய நண்பர்கள் தேடிவந்து பார்ப்பார்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். 1-ம் தேதி வரை சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். புதிய சாதனங்கள் வாங்குவீர்கள். ஆனால்  2-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் வீட்டில் சென்று மறைவதால், வேலைகளில் அலைச்சல் அதிகரிக்கும். அதே தருணத்தில் சூரியன் சாதகமாக இருப்பதால், அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.

4-ம் வீட்டில்  ராகு நிற்பதால், அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். தங்க நகைகளை இரவல் வாங்க வேண்டாம், கொடுக்கவும் வேண்டாம்.  குரு சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுநாள் வரை வராமலிருந்த பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி பாராட்டுவார். கலைத்துறையினருக்கு அலைச்சல் இருக்கும்.

தளராத மன உறுதியுடன் சாதித்துக் காட்டும் நேரம் இது.

ராசிபலன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சிலர் வீடு மாறுவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். சமையலறையை நவீனப்படுத்துவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அமைப்பீர்கள்.  எடுக்கவேண்டிய முடிவுகளைச் சுயமாக எடுக்கத்  தொடங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால், பழைய சொந்தங்கள் தேடிவந்து உதவுவார்கள். பிள்ளைகளை எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும்.

ஆனால், 6-ம் வீட்டில் குரு நிற்பதால், சிலர் உங்கள் மீது வீண்பழி சுமத்துவார்கள். விலையுயர்ந்த பொருள்களைக் கவனமாகக் கையாளவும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து சின்னச் சின்ன யுத்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் கொஞ்சம் அலைச்சல்  இருக்கத்தான் செய்யும். உயர் அதிகாரி கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடியுங்கள். கலைத்துறையினரின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

உங்களின் சமயோசித புத்தியால் எதையும் சாதிக்கும் காலம் இது.

ராசிபலன்

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோசித புத்தியாலும், சாதுர்யமான பேச்சாலும் சாதித்துக் காட்டுவீர்கள். தடைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளும் எடுப்பீர்கள். பழைய பிரச்னைகளைத் தீர்க்க வழிவகை பிறக்கும். வாழ்க்கைத்துணை வழியில் உதவிகள் உண்டு. ஆனால், 2-ம் வீட்டில் சூரியன் நிற்பதால், முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள்.

வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். ராசிக்கு 5-ம் வீட்டில் குரு பலம் பெற்றிருப்பதால் தடுமாறிக்கொண்டிருந்த சில காரியங்கள் முழுமையடையும்.  வி.ஐ.பி.-களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயரதிகாரியைப் பற்றி சக ஊழியர்களிடம் குறைபட்டுக் கொள்ளாதீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். கலைத்துறையினர் பரபரப்புடன் காணப்பட்டாலும் ஆதாயம் இருக்காது.

போராட்டங்களைச் சமாளிக்க வேண்டிய தருணம் இது.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எல்லாத் தடைகளையும் தாண்டி நீங்கள் முன்னேறுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். கல்யாணப் பேச்சு கூடி வரும். வாகனப் பழுதைச் சரிசெய்வீர்கள். ஆனால், உங்கள் ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். சில வேலைகளை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். ராகு, கேது சரியில்லாததால் டென்ஷன், நரம்புக்கோளாறு ஆகியன வந்து நீங்கும்.  புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

4-ம் வீட்டில் நிற்கும் குருவால் தாயாருக்கு மருத்துவச் செலவு, வீண்பழி வரக்கூடும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்களின் குறை களைச் சுட்டிக் காட்டுவார்கள்.  ராசிக்குள் நிற்கும் புதனால் இதமான பேச்சு, மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றியடைவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் தடுமாற்றம் நீங்கும். உயரதிகாரிப் பாராட்டுவார். கலைத்துறையினர் உற்சாகத்துடன் வலம் வருவார்கள்.

அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் தரும் நேரம் இது.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் பயணிப்பதால், சேமிக்கக்கூடிய அளவுக்குப் பணவரவு உண்டு. பிள்ளைகளுக்குப் புதிய ஆடை ஆபரணங்களை வாங்கித் தருவீர்கள். உடன்பிறந்தவர்களால் மனநிறைவு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் சூரியன் 12- ம் வீட்டில் மறைந்து நிற்பதால் அலைச்சல், செலவினங்கள் இருக்கும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையைச் சிறப்பாக முடிப்பீர்கள்.

கேது வலுவாக இருப்பதால் பிரபலங்களின் சந்திப்பு நிகழும். எடுத்த வேலையை விரைந்து முடிப்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். புதன் சாதகமாக இருப்பதால் சோம்பல் நீங்கி, சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை அலைந்து திரிந்து வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் சொந்தப் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பீர்கள். கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது.

உழைப்பால் உயர்வடையும் நேரம் இது.

ராசிபலன்

ங்கள் ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால், உங்களுடைய தனித்திறமை அதிகரிக்கும். பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களெல்லாம் மீண்டும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பீர்கள். உங்களுடைய ராசிக்குச் சாதகமானவீடுகளில் சுக்கிரன் செல்வதால், தாய் வழியில் உதவிகள் உண்டு. ஆனால் வாழ்க்கைத்துணையுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருப்பதால், வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

சூரியன் லாப வீட்டில் நிற்பதால், அரசாங்க விஷயம் சுலபமாக முடியும். எதிர்ப்புகள் நீங்கும். வழக்குகள் சாதகமாகும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் மற்றவர்களை நம்ப வேண்டாம்.  கோயிலுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் தனிநபர் விமர்சனத்தைத் தவிர்க்கப் பாருங்கள். கலைத்துறையினர் சிந்தித்துச் செயல்படுவார்கள்.

தடைகளைத் தாண்டி முன்னேறும் நேரம் இது.

ராசிபலன்

புதன் சாதகமாக இருப்பதால் குடும்ப வருமானத்தை உயர்த்த வழி தேடுவீர்கள். சிலர் வேலையில் இருந்துகொண்டே மீதி நேரத்தில் வியாபாரம் தொடங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பழைய சொந்தங்கள் உங்களைச் சரியாகப் புரிந்துகொள்வார்கள். சூரியன் 10-ம் வீட்டில் நிற்பதால், மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். 4-ம் வீட்டில் கேது நிற்பதால், தாயாருடன் வீண் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள்.

பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டார நண்பர்களை அனுசரித்துப் போவது நல்லது. ராசிக்குள் நிற்கும் குருவால் வீண்பழி, மன உளைச்சல் வரக்கூடும். பிள்ளைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.  சுக்கிரன் சாதகமாக இருப்பதால் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் வீண்விவாதம் வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. கலைத்துறையினர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

எதிர்நீச்சல் போட்டு வெற்றிக்கனி பறிக்கும் வேளை இது.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கணவன்- மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவீர்கள். உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். புதிய டிசைனில் நகைகள் வாங்குவதற்கான யோகமும் கூடி வரும். சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால், தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னைகளைப் பற்றி இப்போதைக்குப் பேசாவேண்டாம். வழக்குகள் சற்று தாமதமாகும்.

12-ம் வீட்டில் குரு நிற்பதால் பணப்பற்றாக்குறை ஏற்படும். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்கவேண்டி வரும். புதன் சாதகமாகச் செல்வதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேற்றுமாநிலத்தில் சிலருக்கு வேலை அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கருத்துவேறுபாடுகள் வந்து போகும். கலைத்துறையினர் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

உற்சாகம் பொங்கும் தருணம் இது.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமான வீட்டுக்குச் செல்வதால் உங்களின் நீண்ட கால எண்ணங்கள் நிறைவேறும். தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். காது, தொண்டை வலி நீங்கும். வீடு கட்டுவதற்குக் குறைந்த வட்டியில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். சூரியன் 8 -ம் வீட்டில் மறைந்து நிற்பதால், செலவினங்கள் அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.

புதன் சாதகமாக இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மனம் விட்டுப் பேசுவீர்கள். ராகு 8-ம் வீட்டில் நிற்பதால் பேசும்போது கவனமாகப் பேசுவது நல்லது. வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை விமர்சிக்காமல் பணியில் கவனம் செலுத்துங்கள். கலைத்துறையினருக்கு ஏற்கெனவே பணியாற்றிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும்.

திட்டமிட்டுச் செயல்படவேண்டிய வேளை இது.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சூரியன் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வாழ்க்கைத்துணைக்கு அடிவயிற்றில் வலி, முதுகு வலி, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். வாழ்க்கைத்துணை அடிக்கடி கோபப்படுவார்.

புதன் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் ஓரளவு நிம்மதி உண்டு. விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். 10-ம் வீட்டில் குரு நிற்பதால், வேலைச்சுமை வாட்டியெடுக்கும். யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

எதிர்பார்ப்புகள் தடைப்பட்டு பின் நல்லவிதமாக முடியும் நேரம் இது.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். சமூகத்தில் செல்வாக்கு கூடும். வீடு கட்டுவதற்கு அனுமதி கிடைக்கும். உறவினர்கள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். புதன் 6 - ம் வீட்டில் மறைந்திருப்பதால், நண்பர்கள், உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகமாகும். பழைய நண்பருடன் மனஸ்தாபம் வரக்கூடும். ஆனால், சூரியன் 6 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், இங்கிதமாகப் பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும்.

அரசு வகையில் அனுகூலம் உண்டு. வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். குரு சாதகமாக இருப்பதால், புண்ணிய ஸ்தலத்துக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாள்களிடம் காரசாரமான விவாதங்களைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் மேலதிகாரி சொல்லும் வேலைகளை உடனுக்கு உடன் செய்து முடியுங்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு. கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

நின்று நிதானித்துச் செயல்படும் நேரம் இது.

ராசிபலன்

புதன் சாதகமாக இருப்பதால், உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உங்களுடைய பலவீனங்களை நீங்களே சரிசெய்து கொள்வீர்கள். 1-ம் தேதி வரை சுக்கிரன் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால், அலைச்சல், செலவினங்கள் ஏற்படும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழுதான மின்சார சாதனங்கள், செல்போனை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.

சூரியன் 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உறவினர்களுடன்  சச்சரவுகள் வரும் வாய்ப்பிருக்கிறது. எனவே, வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாகப் பேசுங்கள். ராகு சாதகமற்ற நிலையில் இருப்பதால், எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். கர்ப்பிணிப் பெண்கள் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில்  நீங்கள் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

பொறுமையுடன் செயல்படவேண்டிய காலம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism