மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை `ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

மேஷம் 

ராசி பலன்கள்சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி எந்தக் காரியத்தையும் சாதிப்பீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம்  உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். உறவினர்கள் உங்களின் செயலை வியந்து பாராட்டுவார்கள். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும்.

வியாபாரம் சுமாராக இருக்கும். சந்தை நிலவரம் அறிந்து புதிய முதலீடுகளைச் செய்யுங்கள்.

உத்தியோகத்தில் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி வரும்.

நிதானத்தின் அருமையைப் புரிந்துகொள்வீர்கள்.

ராசி பலன்கள்

ரிஷபம் 

இதுவரை இருந்து தடுமாற்றம், தயக்கம் நீங்கி தைரியம் பிறக்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அதிகாரத்தில் இருப் பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சபை களில் முதல் மரியாதை பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி பணவரவு உண்டு. கணவன் மனைவி அந்நியோன்யம் பெருகும். பிள்ளைகள் நீண்ட நாள்களாகக் கேட்டுக்கொண்டிருந்த பொருள்களை வாங்கித் தருவீர்கள்.

 வியாபாரத்துக்காகப் புதிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்.

 வெற்றி இலக்கை அடையும் வேளையிது.

மிதுனம் 

ராசி பலன்கள்பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். கணவர் உங்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். சகோதரர்களிடம் வாதங்கள் செய்ய வேண்டாம். மாமியார் கூறும் குறைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம்.

வியாபாரத்தில் சில போட்டிகளைச் சந்திக்க வேண்டி வரும். ஆனாலும், ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் பேசிப்பழகும் போது கவனமாகச் செயல்படவும்.

சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள்.

ராசி பலன்கள்

கடகம் 

உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிரபலங்கள் உதவுவார்கள். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். கணவர் உங்கள் கருத்தை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக்கொள்வார். உறவினர்கள், தோழிகளுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும்.

வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். நவீன யுக்திகளைப் பயன்படுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப் படுவீர்கள்.

சிறந்த செயல்பாட்டால் வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம் 

ராசி பலன்கள்உங்களின் முயற்சிகள் யாவும் கை கூடும். திடீர்ப் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. குழப்பங்கள் நீங்கும். தைரியம் பிறக்கும். ஆளுமைத்திறன் அதிகரிக்கும். உங்களின் செயல்களைக் கணவர் மனம்திறந்து பாராட்டுவார். பிள்ளைகள் உங்களின் அருமையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வார்கள். வழக்குகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். 

வியாபாரத்தில் அயல்நாட்டு நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

அதிரடி முன்னேற்றங்களைச் சந்திப்பீர்கள்.

ராசி பலன்கள்

கன்னி

எதையும் எளிதில்  சமாளிக்கும் சக்தி உண்டாகும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்துக் கவலைப்பட வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. திடீர்ச் செலவுகளால் பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். உறவினர்களிடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமிருக்கும் என்றாலும் சக ஊழியர்கள் உதவிக்கு வருவார்கள்.

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

துலாம் 

ராசி பலன்கள்கணவர் உதவிகரமாக இருப்பார். குடும்ப வருமானத்தை உயர்த்த தோழியுடன் சேர்ந்து சிறு முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவீர்கள். ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். மொழித்திறனை வளர்த்துக்கொள்வீர்கள். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட வர்களின் மனநிலை மாறும்.

நினைத்ததை நிறைவேற்றிக் காட்டுவீர்கள்.

ராசி பலன்கள்

விருச்சிகம் 

விலையுயர்ந்த  பொருள்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். இழுபறியாக இருந்துவந்த காரியங்கள் உடனே முடியும். பணவரவு அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். செலவுகள் செய்யும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது.

வியாபாரத்தில் கடையை நவீனமாக்குவீர்கள். புதிய பொருள்களில் முதலீடு செய்வீர்கள்.

 உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களைப் பாராட்டுவார். புதிய பணிப்பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

கடின உழைப்பால் எதையும் சாதிப்பீர்கள்.

தனுசு 

ராசி பலன்கள்பேச்சில் தன்னம்பிக்கை வெளிப்படும். பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உடல்நலம் சீராகும்.  அடிக்கடி குறை கூறிக்கொண்டிருந்த கணவர் இனி உங்களைப் பாராட்டுவார். உறவினர்கள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். தடைப்பட்ட காரியங்கள் முடியும்.

வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் உங்களுடன் இணைவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

மலைபோல வந்த பிரச்னைகள் யாவும் விலகும்.

ராசி பலன்கள்

மகரம் 

கணவருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். பிள்ளைகள் தங்களின் பிடிவாதப் போக்கை மாற்றிக்கொள்வார்கள். மாமியார் உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார்.

வியாபாரத்தில் போட்டியால் லாபம் குறைந்தாலும், பிற்பகுதியில் வரவு உயரும்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி, பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

 புகழ், கௌரவம் கூடும் காலமிது.

கும்பம் 

ராசி பலன்கள்வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினரின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்களுக்குக் கணவர் ஆதரவாக இருப்பார். உறவினர் வகையில் இருந்துவந்த மனஸ்தாபம் நீங்கும். கல்யாண முயற்சிகள் வெற்றிபெறும். பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள்.

வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் மீண்டும் வந்து சேருவார்கள். புதிய உத்வேகத்துடன் செயல்படத் தொடங்குவீர்கள்.

உத்தியோகத்தில்
அதிகாரிகளுடன் இருந்த பனிப்போர் நீங்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

ஏற்றமிகு கட்டத்தை நெருங்கும் தருணமிது.

மீனம்

ராசி பலன்கள்தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். கணவர் உங்களிடம் மனம்விட்டுப் பேசுவார். உங்களை நம்பி முக்கியப் பொறுப்பு களை ஒப்படைப்பார். வீடு மாற வேண்டிய நிர்பந்தம் ஒரு சிலருக்கு ஏற்படும். பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.

வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கற்றுக்கொண்டு முன்னேறுவீர்கள்.

உத்தியோகத்தில்
சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும்.

எதிர்பார்ப்புகள் விலகி, ஏற்றம் பெறும் நேரமிது.