தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

மேஷம்

ராசி பலன்கள்தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் மரியாதை கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பூர்வீகச் சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணம் பல வழி களில் வந்தாலும் செலவு அதிகரிக்கும்.

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் உழைப்புக்குரிய  அங்கீகாரம் கிடைக்கும்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

ராசி பலன்கள்

ரிஷபம் 

எதிர்பாராத பணவரவு உண்டு. புதிதாக வீடு வாங்குவீர்கள். வி.ஐ.பி-க் களின் நட்பு கிடைக்கும். கணவரின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வீர்கள். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவார்கள். பயணங்களால் பயனடை வீர்கள். அநாவசியச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில்  நீண்ட நாள்களாகத் தள்ளிப்போய்க் கொண்டிருந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் மறதியால் சில பிரச்னைகள் வந்து விலகும்.

அதிரடியான முன்னேற்றங்களை அடைவீர்கள்.

மிதுனம் 

ராசி பலன்கள்உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். அரசு வகையில் ஆதாயம் உண்டு. உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். பிள்ளைகளைக் கண்டிக்கும்போது அன்புடன் நடந்துகொள்வது நல்லது.

வியாபாரத்தை
விரிவுபடுத்த புதிய மாற்றங்களைக் கொண்டுவருவீர்கள்.

உத்தியோகத்தில்
சக ஊழியர்களிடம் இதமாகப் பேசி வேலை வாங்குவீர்கள்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம் 

எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள்.  நீண்ட நாள்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உங்களின் புதிய முயற்சிகளுக்குக் கணவர் பக்கபலமாக இருப்பார். உறவினர்கள், நண்பர்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். 

வியாபாரத்தில்
புதிய போட்டியாளர்களை முறியடித்து லாபம் ஈட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இதுநாள் வரை இருந்துவந்த எதிர்ப்புகள் அகலும்.

எதையும் திட்டமிட்டுச் செயல்படுத்துவீர்கள்.

சிம்மம் 

ராசி பலன்கள்தொட்ட காரியங்கள் யாவும் துலங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவர் உங்களைப் புரிந்துகொண்டாலும், வெளிப்படையாகப் பாராட்டவில்லையே என்ற ஆதங்கம் தொடரும். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுத் திருத்துங்கள். ஒரு சிலருக்கு வீடு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

வியாபாரத்தில்
புதிதாகச் சில பணியாளர்களையும் பங்குதாரர்களையும் சேர்ப்பீர்கள்.

உத்தியோகத்தில்
வேலைச்சுமை இருந்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

வசதிகள் கூடும் வேளையிது.

ராசி பலன்கள்

கன்னி 

சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். கணவர் பாசம் காட்டுவார். இருவரும் கலந்துபேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

துலாம் 

ராசி பலன்கள்பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். கணவர் அன்புடனும் பொறுப்புடனும் நடந்துகொள்வார். பிள்ளைகளிடம் குவிந்துகிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். வெளியூர் பயணம் உண்டு. உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல்நலனில் கவனம் செலுத்துங்கள்.

வியாபாரத்தில்
எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில்
நீண்ட நாள்களாக வராமலிருந்த நிலுவைத் தொகை வரும்.

அனுபவ அறிவால் வெற்றி பெறுவீர்கள்.

ராசி பலன்கள்

விருச்சிகம் 

உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கணவருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். மாமனார், மாமியாருக்கு சில ஆலோசனை வழங்கு வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். உறவினர்கள் ஏதேனும் குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம்.

வியாபாரிகள்
தங்களின் கடையைப் புதிய இடத்துக்கு மாற்றி அழகுபடுத்துவார்கள்.

உத்தியோகத்தில்
இருப்பவர்களுக்குப் புதிய பதவிகள் தேடி வரும்.

 இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

தனுசு 

ராசி பலன்கள்வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பிரபலங்களின் உதவியால் சில விஷயங்களைச் சாதிப்பீர்கள். வீட்டு வேலைகளைக் கணவர் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார். உங்களின் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். உறவினர் களிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள்.

உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள்.

அடிப்படை வசதிகள் பெருகும்.

ராசி பலன்கள்

மகரம்

உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பணவரவு திருப்தி தரும். வெளிநாட்டிலிருக்கும் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். சொத்து வாங்கும்போது யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம்.

வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்குவதைப் பற்றித் திட்டமிடுவீர்கள்.

உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.

நீண்ட கால எண்ணங்கள் நிறைவேறும்.

கும்பம் 

ராசி பலன்கள்உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.  தொலைநோக்குடன் சில முக்கிய முடிவு களைத் தன்னிச்சையாக எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதரர்கள்  உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வழக்கு விஷயங்கள் தாமதமாகும்.

வியாபாரத்தில் போட்டிகளைத் தவிர்க்கப் புதிய வழிமுறைகளைக் கையாளுங்கள்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும்.

சகிப்புத்தன்மையும் பொறுப்பும் கூடும்.

மீனம்

ராசி பலன்கள்சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். கணவர் உங்களின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பைத் தருவார்.  ஒரு சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உடல்நலனில் கவனம் செலுத்துங்கள்.

வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து வேலை வாங்குவது நல்லது.

உத்தியோகத்தில் உங்களது வேலைகளைச் சுலபமாக முடித்து நற்பெயர் ஈட்டுவீர்கள்

மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறுவீர்கள்.